இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

உங்கள் காரின் மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்க உதவும் எளிமையான டிப்ஸ்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

மைலேஜ் (Mileage) மற்றும் செயல்திறன் (Performance) ஆகியவைதான் கார் வாங்கும் ஒவ்வொருவரும் கவனிக்கும் முக்கியமான விஷயங்களாக உள்ளன. தங்களது கார் நல்ல மைலேஜை வழங்க வேண்டும் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் காரின் மைலேஜ் மற்றும் செயல்திறனை எப்படி மேம்படுத்துவது? என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எனவே உங்கள் காரின் மைலேஜ் மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவும் டிப்ஸ்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த டிப்ஸ்களை பின்பற்றுவது மிகவும் எளிமையான விஷயமாகதான் இருக்கும். இவற்றை நீங்கள் முறையாக கடைபிடித்தால், உங்கள் காரின் மைலேஜ் மற்றும் செயல்திறனில் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடியும்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

சைலென்சரை (Silencer) மேம்படுத்துங்கள்!

உங்கள் காரின் ஒலி அளவை கட்டுப்படுத்தும் பணியை சைலென்சர்கள் செய்கின்றன. ஆனால் அனைத்து சைலென்சர்களும் திறன்மிக்கவை கிடையாது என்பதை புரிந்து கொள்வது முக்கியமானது. ஹை-பெர்ஃபார்மென்ஸ் சைலென்சர் (High-performance Silencer), உங்கள் கார் உமிழும் ஒலி அளவை மேம்படுத்தும்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அத்துடன் இது உங்கள் காரின் எரிபொருள் சிக்கனத்தையும் அதிகரிக்கும். அதாவது நல்ல மைலேஜ் கிடைக்கும். தற்போது பெட்ரோல், டீசல் விற்பனையாகி கொண்டிருக்கும் விலை பலருக்கும் உகந்ததாக இல்லை எனும் நிலையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் உங்கள் காரின் குதிரைத்திறன் (Horsepower) மேம்படுவதற்கும் இது உதவி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

தரமான ஆயிலை பயன்படுத்துங்கள்!

கார்களின் பராமரிப்பு தொடர்பாக நீங்கள் எந்த செய்தியை படித்தாலும், இன்ஜின் ஆயிலை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தவறாமல் மாற்றி விடுங்கள் என உங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். அது சரிதான். ஆனால் இதனுடன், நீங்கள் வாங்கும் ஆயிலின் தரத்திற்கும் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டியது அவசியம்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அதிக தரம் மிக்க ஆயிலின் விலை சற்று அதிகமாகதான் இருக்கும். எனினும் உங்கள் பணம் வீண் ஆகாது. அதிக தரம் கொண்ட ஆயிலுக்காக நீங்கள் சற்று அதிகமான தொகையை செலவழிப்பது நியாயமானதுதான். தரமான ஆயில் என்றால், சிந்தடிக் ஆயில் (Synthetic Oil) சிறந்தது. இது உங்கள் காருக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அத்துடன் சிறப்பான லூப்ரிகேஷனையும் (Lubrication) சிந்தடிக் ஆயில் வழங்கும். இது உங்கள் காரின் பாகங்கள் 'ஸ்மூத்' ஆக இயங்குவதற்கு உதவி செய்யும். இதன் மூலம் உங்கள் காரின் செயல்திறனும் மேம்படும். இன்ஜின் ஆயிலை பொறுத்தவரை, மினரல், முழு சிந்தடிக், செமி-சிந்தடிக் என பல்வேறு வகைகள் உள்ளன. இதில், சிந்தடிக் ஆயிலுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

எடையை குறையுங்கள்!

காரை நாம் நீண்ட நாட்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறோம் என்றால், நமக்கே தெரியாமல் தேவையில்லாத பொருட்களை காருக்குள் வைத்து விடுவோம். இந்த பொருட்கள் தேவையில்லாமல் இடத்தை அடைத்து கொண்டிருப்பதுடன், காரின் ஒட்டுமொத்த எடையையும் அதிகரித்து விடும். செயல்திறனை அதிகரிக்க விரும்பினால், இந்த தேவையில்லாத பொருட்களை அகற்றுவது அவசியம்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

அதேபோல் தேவையில்லாமல் எடையை அதிகரிக்கவும் கூடாது. காரில் நீங்கள் அதிக சுமையை ஏற்றினால், செயல்திறன் பாதிக்கப்படும். அத்துடன் பிரேக், டயர் மற்றும் சஸ்பென்ஸன் ஆகியவையும் பாதிக்கப்படும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். கார் இலகுவாக இருந்தால் செயல்திறன் மட்டுமல்லாது, பிரேக், டயர், சஸ்பென்ஸன் ஆகியவற்றின் ஆயுளும் அதிகரிக்கும்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

காரில் இருந்து கூடுதல் எடையை அகற்றினால், ஸ்டாப்பிங் டிஸ்டன்ஸ் (Stopping Distance) மேம்படும். அதாவது வேகமாக சென்று கொண்டிருந்தாலும், உங்களால் காரை உடனடியாக நிறுத்தி விட முடியும். ஆனால் அதிக எடையுள்ள காரை திடீரென நிறுத்துவது சிரமமான மற்றும் அபாயகரமான காரியம். மேலும் காரின் எடை குறைவாக இருந்தால், வளைவுகளில் திரும்புவதும் 'ஸ்மூத்' ஆக இருக்கும்.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

புதிய டயர்களை வாங்குங்கள்!

உங்கள் காருக்கு எந்த வகையான டயர் தேவை? என்பது, உங்களுடைய டிரைவிங் ஸ்டைல் மற்றும் நீங்கள் காரை எந்த பகுதியில் ஓட்டுகிறீர்கள்? ஆகியவற்றை பொறுத்தது. உங்கள் காரின் செயல்திறனை நீங்கள் அதிகரிக்க விரும்பினால், காருடன் வந்த டயர்களை பரிசோதிப்பது நல்லது. அந்த டயர்கள் முழு திறனில் செயல்படும் வகையில் இருந்தால் பிரச்னையில்லை. இல்லாவிட்டால் புதிய டயர்களை வாங்குவது சிறந்தது.

இதை மட்டும் செஞ்சு பாருங்க... உங்க காரின் மைலேஜ் மற்றும் செயல்திறன் தூள் கிளப்பும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!

இந்த டிப்ஸ்கள் உங்கள் காரின் மைலேஜை அதிகரிப்பதற்கும் உதவி செய்யும். அதாவது கார் அதிக எடையுடன் இருந்தாலோ அல்லது டயர்கள் நல்ல கண்டிஷனில் இல்லாவிட்டாலோ இன்ஜின் அதிக எரிபொருளை நுகர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. இன்ஜின் அதிக எரிபொருளை நுகர்ந்தால், உங்கள் காரின் மைலேஜ் குறைந்து விடும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.

Most Read Articles
English summary
Useful tips to increase your car s mileage and performance
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X