இந்த 5 விஷயம் தெரியாம பிப்.14 கார்/பைக்கை எடுக்காதீங்க!

பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியாக காதலர் தினம் கொண்டாடப்படும் போது பலர் தங்கள் காதலர் அல்லது காதலியுடன் பைக் அல்லது காரில் நீண்ட தூரம் பயணம் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இப்படியாக இந்த ஆண்டு காதலர் தினத்தன்று நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியுடன் நீண்ட தூரம் பைக் பயணம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அதைப் பற்றி இங்கே காண்போம்.

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினத்தின் போது காதலர்கள் நேரில் சந்தித்து எங்காவது நீண்ட தூரம் கார் அல்லது பைக்கில் பயணம் செய்ய விரும்புவார்கள். இது சமீப காலமாக மிகப்பெரிய டிரெண்டாக மாறி வருகிறது. இந்நிலையில் இப்படியாக பயணம் செய்யும் காதல் ஜோடிகள் இந்த பயணத்தில் சில முக்கியமான விஷயங்களை மறந்து பிரச்சனையில் சிக்கி விடுகிறார்கள். அதனால் காதலர் தினத்தில் லாங் ரைடு செல்ல விரும்பும் காதல் ஜோடிகள் சில முக்கியமான விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

valentines day riding tips

அதில் முதலாவதாக உள்ள விஷயம் நீங்கள் ரைடு செல்லும் பகுதி உங்களுக்கு தெரிந்த பகுதியாக இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னர் அங்கு பயணம் செய்து உள்ளீர்களா என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதனால் அந்த பகுதியில் எங்கெங்கெல்லாம் ஆபத்து இருக்கும் எந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டால் அதை அருகில் உதவி கேட்டு எப்படி சமாளிப்பது என்று உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கும். இதனால் பிரச்சனை ஏற்பட்டாலும் எளிதாக அதிலிருந்து மீண்டு வருவதற்கு உங்களுக்கு தகவல் மற்றும் புரிதல் இருக்கும்.

நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியுடன் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால் காரில் பயணம் செய்தாலும் சரி பைக்கில் பயணம் செய்தாலும் சரி ஒரு முறை கார் அல்லது பைக்கை முழுமையாக செக் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் மெக்கானிக்கிடம் சென்று முழுமையாக செக்கப் ஒன்றை செய்து கொள்ளுங்கள். நடுவலியில் வாகனம் பழுதாகி நின்றால் உங்கள் மொத்த பயணமும் கெட்டுவிடும். சில நேரம் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனால் இந்த விஷயத்தை செக் செய்வது என்றுமே நல்லது.

valentines day riding tips

அடுத்ததாக நீங்கள் கார் அல்லது பைக் எதில் பயணம் செய்தாலும் பயணத்துக்கு முன்பாக உங்கள் கார் அல்லது பைக்கை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் பலர் கார் பைக்கை சுத்தமாக வைப்பதில்லை. இதனால் அவர்கள் காதலன் அல்லது காதலி பைக்/ காரில் ஏறும்போது அது உங்களுக்கு நல்ல இம்ப்ரஷனை கொடுக்காது சுத்தமாக இருந்தால் உங்கள் மீது உள்ள காதல் மேலும் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் உங்கள் காதலியுடன் வாகனத்தில் பயணம் செய்யும்போது காதலியின் உடையில் சற்று கவனமாக இருங்கள் பலர் சுடிதார்/சேலை அணிந்து கொண்டு பைக்கில் பயணம் செய்யும்போது துப்பட்டா/ முந்தனை கீழே தொங்கி பைக் வீலில் சிக்கி விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க எப்பொழுதும் கொஞ்சம் டைட்டான உடைகளை அணிவது நல்லது. ரைடிங் செல்லும் போது இதுதான் ஏற்றதாக இருக்கும்.

valentines day riding tips

காதலர் தினத்தன்று காதலர் தினத்தை எதிர்க்கும் பலர் ஆங்காங்கே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் நீங்கள் உங்கள் காதலன் அல்லது காதலியுடன் பயணம் செய்யும்போது கூட்டம் அதிகம் இல்லாத தனிமையான இடத்திற்கு பயணம் செய்யாதீர்கள் அங்கு உங்களை காதலர் தின எதிர்ப்பு குண்டர்கள் தாக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. இது இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காதலர் தினத்தன்று காதலர்கள் கார் அல்லது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்ய விரும்புவது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் அதில் கவனமாக இருக்க வேண்டும். பலர் இந்த சின்ன சின்ன விஷயங்களில் கூட கவன குறைவாக இருந்து பெரும் பிரச்சனைகள் சிக்கி விடுகிறார்கள். இதனால் நீங்கள் மேலே சொன்ன டிப்ஸ்களை பாலோ செய்து கவனமாக பயணம் செய்யுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, February 7, 2025, 7:00 [IST]
English summary
Valentines day long ride with your lover tips you need to know
மேலும்... #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X