'விடாமுயற்சி' கதை உங்க வாழ்வில் நடந்திடாம பார்த்துக்கோங்க! காதலர் தினத்தில் லாங்-ட்ரிப்புக்கு திட்டமா?
காதலர் தினம் (Valentine's Day)-இல் மனதுக்கு பிடித்த துணை உடன் எங்கேயாவது நீண்ட தூர பயணத்திற்கு சென்றுவர நம்மில் நிறைய பேர் விரும்புவோம். சமீப காலமாக, அவ்வாறு ஜோடியாக லாங்-ட்ரிப் (Long Trip) செல்லும் திரைப்படங்களும் அதிகமாக வெளிவந்துள்ளதால், அவற்றை பார்க்கும்போது நமக்கும் அவ்வாறு தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆசை பிறக்கும். கார் அல்லது பைக் என எதில் செல்வதாக இருந்தாலும் சரி, அந்த பயணம் நிச்சயமாக வாழ்நாள் முழுக்க மறக்க முடியாததாக அமையும்.
ஆனால், இவ்வாறு 2 பேர் மட்டும் தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும்போது முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக, நீங்கள் பயணம் செய்ய உள்ள பகுதி ஆனது இருவரில் குறைந்தது ஒருவருக்கு ஆவது பரீட்சையமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான், ஆபத்து ஏற்பட நேர்ந்தால் எங்கு சென்று உதவிக்கு அழைப்பது என்கிற ஐடியா உங்களுக்கு இருக்கும்.

காதலர் தினத்தில் காதலுக்கு எதிரான போராட்டங்களும் நடைபெறும் என்பதை மறவாதீர்கள். காரில் சென்றால் கூட, முடிந்தவரையில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் மட்டும் காரை நிறுத்த பாருங்கள். அதுமட்டுமில்லாமல், ஏற்கனவே குறைந்தது ஒருமுறையாவது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்றுவந்த அனுபவம் இருந்தால்தான் அந்த பகுதிகளில் சாலையின் தரம் எவ்வாறு உள்ளது, அந்த பகுதிக்கு இரவு நேரத்தில் கூட வாகனத்தில் செல்ல முடியுமா என்கிற விஷயங்களை உங்களால் யோசிக்க முடியும்.
அதேபோல், உங்களது வாகனத்தையும் தொலைத்தூர பயணத்திற்கு ஏற்ப நல்ல கண்டிஷனில் வைத்திருப்பது அவசியம் ஆகும். சமீபத்தில்தான் நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த படத்தில், பாதி வழியில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றதினால்தான் எல்லா பிரச்சனைகளும் உருவாகும்.

ஆதலால், காதலர் தினத்தில் தொலைத்தூர பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னால், கார் அல்லது பைக்கை சர்வீஸ் செய்துவிடுவது நல்லது. குறைந்தப்பட்சம், அனுபவமிக்க மெக்கானிக்கிடம் ஆவது வாகனத்தை காண்பித்து சிறு சிறு பிரச்சனைகளை சரிச்செய்து கொள்ள வேண்டும். அதேபோல், கொண்டுச்செல்ல உள்ள கார் (அ) பைக்கை நன்றாக கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை கூற வேண்டியதில்லை.
தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும்முன் வாகனத்தை சுத்தம் செய்துவிட வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு பழக்கமாக உள்ளது. பைக்கில் செல்வதாக இருந்தால், இருவரும் உடுத்தும் உடைகளை கவனமாக தேர்வு செய்வது அவசியமாகும். குறிப்பாக, பெண்கள் துப்பட்டா, சேலை போன்ற காற்றில் பறக்கக்கூடிய உடைகளை தவிர்ப்பது நல்லது.

அதேபோல், ஆண்கள் செருப்புகளை தவிர்த்து கியர்களை மாற்றுவதற்கு ஏதுவாக ஷூ அணிவது சிறந்தது. ஷூ லேஸ்களை முறையாகவும், இறுக்கமாகவும் கட்ட மறக்காதீர்கள். காரில் செல்வதாக இருந்தால், அவசரத்துக்கு ஒரு ஸ்டெப்னி டயரை உடன் கொண்டு செல்வது சிறந்தது. அடிக்கடி பெட்ரோல் பங்குகளில் நிறுத்தாமல், முடிந்தவரையில் டேங்கை நிரப்பிவிட்டு பயணத்தை துவங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காதலர் தினத்திற்கு எதிரான போராட்டங்களை தவிர்த்து, இந்த தொகுப்பில் நாங்கள் கூறியுள்ளவை காதலர் தினத்தின்போது மட்டுமின்றி, எப்போதும் கணவன்- மனைவி தனியாக தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை ஆகும். எந்த மாதிரியான இடத்திற்கு சென்றுவர போகிறீர்கள் என்பதை பொறுத்து இந்த லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகும்.


Click it and Unblock the Notifications









