கண்டபடி காரை பார்க் பண்ணீ மாட்டிக்காதீங்க! ஈஸியா பார்க் பண்ண இதை ட்ரை பண்ணுங்க!
நீங்கள் கார்களை பார்க் செய்யும் போது எப்படி பார்க் செய்தால் எளிதாக பார்க்கிங்கில் இருந்து காரை வெளியே எடுக்க முடியும் என்ற உங்களுக்கான டிப்ஸ் மற்றும் பார்க்கிங் வழிமுறைகளை தான் இங்கே காணப்போகிறோம்.
டூவீலர் ஒட்டிவிட்டு முதன்முறையாக கார் வாங்கி ஓட்ட நினைக்கும் பலர் முதலில் சந்திக்கும் பிரச்சனை பார்க்கிங் பிரச்சினை தான். டூவீலர்களை எளிதாக சாலையில் ஆங்காங்கே பார்க் செய்து விட முடியும். ஆனால் கார்கள் அப்படி அல்ல, சரியான பாக்கியங்கள் தான் பாக் செய்ய வேண்டும். வாகனங்கள் முறையாக பாக்ஸ் செய்யப்படவில்லை என்றால் இந்த பார்க்கிங்கிலிருந்து காரை வெளியே எடுப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும்.

ஆனால் நம் முன்னரே யோசித்து சரியாக கனித்து செய்தால் மிக சுலபமாக வாகனத்தை பார்க்கிங்கிலிருந்து இருந்து வெளியே எடுத்து தொடர்ந்து பயணிக்கலாம். தலைவலி உண்டாக வேண்டிய தேவையே இருக்காது. இப்படியாக இதுவரை நடைமுறையில் இருக்கும் பார்க்கிங் வகைகள் மற்றும் அதில் இருக்கும் நன்மை தீமைகளை பற்றி காணப் போகிறோம்.
பேரலல் பார்க்கிங்: இதைப் பெரும்பாலும் நாம் சாலையோரங்களில் காண முடியும். ஒரு காருக்கு பின்னால் இன்னொரு கார் என வரிசையாக கார்களை நிறுத்தி வைத்திருப்பார்கள் இது பேரலல் பார்க்கிங். இப்படியாக கார்களை பார்க்கிங் செய்தால் இதில் இருக்கும் பிரச்சினை கார்களை வெளியே எடுக்கும்போது மற்ற வாகனங்களில் இருக்காதவாறு வெளியே எடுக்க வேண்டும். இதற்கு அதிக சிரமம் ஏற்படும். ஒரு நல்ல டிரைவிங் ஸ்கில் இருந்தால் மட்டுமே இந்த பார்க்கையில் இருந்து காரை வெளியே எடுக்க முடியும்.

பெர்பெண்டிக்குளர் பார்க்கிங்: இந்த வகையான பார்க்கை நோஸ் இன் பார்க்கிங் என்று கூட சொல்வார்கள். பெரும்பாலான பார்க்கிங் ஸ்லாட்டுகளில் இந்த வகை பார்க்கிங் தான் இருக்கும். இந்த வகையில் பார்க் செய்தால் காரை சுலபமாக பார்க்கிங்கில் விடவும் அதிலிருந்து வெளியே எடுக்கவும் முடியும். இது ஒரு காருக்கு பக்கவாட்டில் அடுத்த கார் அதற்கு பக்கவாட்டில் அடுத்த கார் என வரிசையாக நிறுத்துவதாகும்.
ஆங்கிள் பார்க்கிங்: இது கிட்டத்தட்ட பெர்பெண்டிகுலர் பார்க்கிங் போல தான். ஆனால் பார்க்கிங் செய்யும்போது காரை நேராக நிறுத்தாமல் சாய்வாக நிறுத்த வேண்டும். இப்படியாக காரை நிறுத்தினால் அதிகமான கார்களை அந்த இடத்தில் நிறுத்த முடியும். மேலும் காரை வெளியே எடுக்கும் போது சுலபமாக எடுக்க முடியும். டிரைவருக்கு நல்ல விசிபிலிட்டி கிடைக்கும்.

டயகனல் பார்க்கிங்: கிட்டத்தட்ட ஆங்கிள் பார்க்கிங் போல தான். ஆனால் இது அடுத்தடுத்து கார்களை நிறுத்தாமல் ஒரு காரை முன் பக்கமும் ஒரு காரை பின்பக்கமும் நிறுத்த வேண்டும். இப்படியாக நிறுத்துவதால் இரண்டு கார்களுக்கும் கார்களின் கதவைத் திறந்து பயணிகள் வெளியே வரவும் உள்ளே செல்லவும் வசதியாக இருக்கும். அதிகமான இடவசதி கொண்ட பகுதிகளில் இந்த ரக பார்கிங்கை பயன்படுத்துவார்கள்.
ஹெட்-இன் பார்க்கிங்: இந்த பார்க்கிங் வகையில் பார்க்கிங்கிற்காக மற்ற வாகனங்கள் செல்லும் பாதையில் பார்க் செய்யப்பட்டிருக்கும் வாகனத்தின் பின்பகுதி இருக்கும் படி பார்க் செய்வது தான் இந்த வகை. பார்க்கிங்கில் இப்படியாக செய்வதால் வாகனத்தை எளிமையாக சென்று பார்க் செய்து விட முடியும். அதே நேரம் வாகனத்தை பார்க்கிங்கில் இருந்து எடுக்கும்போது வாகனத்தில் ஏறும் முன்னரே டிரைவர் வாகனத்தின் பொசிஷனை நன்கு அறிந்து கொண்டு பின்னர் எடுக்க வசதியாக இருக்கும்.

பேக் இன் பார்க்கிங்: இது ஹெட்டிங் பார்க்கிங் முறைக்கு அப்படியே நேர் எதிரான விஷயம். அதாவது பார்க்கிங்கிற்கு மற்ற கார்கள் செல்லும் பாதையில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் காரின் முன் பகுதி இருக்கும் படி பார்க் செய்ய வேண்டும். இப்படியான கார்களை எடுக்கும் போது சுலபமாக இருக்கும். பார்க்கிங்கில் விடும்போது சற்று பொறுமையாக ரிவர்ஸ் எடுத்து பார்க் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
ஆங்கிள் இன் பார்க்கிங்: ஆங்கிளின் பார்க்கிங் என்பது ஆங்கிள் பார்க்கிங் போன்ற அதே டெக்னிக் தான். ஆனால் இப்படியாக பார்க்கிங் செய்யும்போது வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து வாகனத்தின் முன் பகுதி பார்க்கிங்கிள் இருந்து நாம் வெளியேறும் பகுதியில் இருக்க வேண்டும். இப்படியாக பாக் செய்தால் அங்கிருந்து காரை எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியும்.

பார்க்கிங் செய்யும்போது எது வசதியான பார்க்கிங் எது சுலபமான பார்க்கிங் என்பது நீங்கள் பார்க்கிங் செய்யும் இடத்தில் உள்ள இடவசதி மற்றும் டிராபிக் கண்டிஷன்களை பொறுத்து மாறுபடும். இவை அனைத்தும் ஒவ்வொரு பகுதிக்கும் சிறந்ததாகவும் சில விஷயங்கள் மோசமானதாகவும் இருக்கும். இதனால் நீங்கள் கார் பார்க்கிங் செய்யும் பகுதியில் எப்படியான பார்க்கும் வசதியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு பார்க்கிங் செய்வதை சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பார்க்கிங் வசதி இருந்தால் அங்கு ஆங்கிள் பார்க்கிங் வசதியே சிறந்ததாக இருக்கிறது. ரோட்டோரமாக பார்த்து செய்தால் நீங்கள் பேரலல் பார்க்கிங்களை தவிர வேறு எந்த பார்க்கிங் வசதியையும் எதிர்பார்க்க முடியாது. அதிக போக்குவரத்து நெருக்கடி இல்லாத விசாலமான ரோடுகளில் பெர்பெண்டிக்குளர் பார்க்கிங் சிறந்ததாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









