இதெல்லாம் புரளி நம்பாதீங்க! உங்கள் வாகனத்திற்கு இன்ஜின் ஆயிலை மாற்ற செம டிப்ஸ்!

ஒரு வாகனத்திற்கான இன்ஜின் அயிலைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதே நேரம் மார்கெட்டில் இன்ஜின் ஆயில் மீது பல புரளிகள் உள்ளது. அதனால் இன்ஜின் ஆயில் மாற்றம் எதையெல்லாம் நம்ப வேண்டாம் என்பதை இதோ இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

ஒரு வாகனத்திற்கு இன்ஜின் என்பது மனிதர்களுக்கான ரத்தம் போல் சரியாக பராமரிக்க வேண்டியது அவசியம். ஆனால் அதைக் காரணமாக வைத்தே மார்கெட்டில் இன்ஜின் ஆயில் குறித்த பல புரளிகள் உள்ளது. இந்த புரளிகளை நம்பி பலர் இன்ஜின் ஆயிலுக்காக ஆயிரக்கணக்கான ரூபாயை இழந்து வருகின்றனர். அந்த வகையில் இன்ஜின் ஆயில் குறித்து மார்கெட்டில் உள்ள புரளிகளைப் பற்றி இங்கு வரிசையாகக் காணலாம் வாருங்கள்.

கருப்பானால் மாற்ற வேண்டுமா?

நாம் பல நேரங்களில் இன்ஜின் ஆயலை செக் செய்யச் செல்லும் போது இன்ஜின் ஆயில் கருப்பாகிவிட்டது அதை மாற்ற வேண்டும் எனச் சிலர் சொல்லிக் கேட்டிருப்போம். இன்ஜின் ஆயில் கருப்பாகி விட்டாலே மாற்ற வேண்டும் எனப் பலர் நம்பி வருகின்றனர். இது முற்றிலும் உண்மை கிடையாது. இன்ஜின் ஆயில் இன்ஜினில் ஏற்படும் சூடு காரணமாக இயற்கையாகவே கருப்பாக மாறும், இன்ஜின் கருப்பாக இருப்பது இன்ஜின் அயிலை மாற்றுவதற்கு ஒரு அறிகுறிதானே தவிர அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டாம். சரியான இன்ஜின் ஆயிலை மாற்ற எவ்வளவு கி.மீ பயணித்துள்ளீர்கள் என்பதைக் கணக்கில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட கி.மீக்கு ஒரு முறை இன்ஜின் ஆயிலை மாற்றுவதுதான் நல்லது.

4800 கி.மீ தான் லிமிட்!

கார் வைத்திருக்கும் பலருக்கு இன்ஜின் ஆயிலை ஒவ்வொரு 4800 கி.மீ ஒரு முறை இன்ஜின் ஆயில் கருப்பானாலும் சரி ஆகாவிட்டாலும் சரி மாற்றிவிட வேண்டும் எனச் சிலர் கருதுகின்றனர். இது 1970களிலிருந்து உள்ள பழக்கம். இது எல்லாம் அந்த காலத்தில் உள்ள இன்ஜின் ஆயிலின் தரத்தை வைத்துச் சொல்வது. இன்றைய கால காரின் உதிரிப்பாகங்கள் மற்றும் இன்ஜின் ஆயில்கள் சுமார் 16 ஆயிரம் வரை தாங்கும். இருந்தாலும் நீங்கள் கார் வாங்கும் போது அந்நிறுவனம் இன்ஜின் ஆயிலை மாற்றப் பரிந்துரை செய்யும் கி.மீ எவ்வளவு என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

சிந்தெடிக், கன்வென்ஷன் ஆயில் மிக்ஸ்

மார்கெட்டில் சிந்தெடிக் மற்றும் கன்வென்ஷனல் என மொத்தம் 2 விதமான ஆயில்கள் இருக்கிறது. சிலர் இந்த சிந்தெடிக் ஆயிலையும் கன்வெஷன் ஆயிலையும் ஒன்றாகப் பயன்படுத்தக் கூடாது. இரண்டையும் மிக்ஸ் செய்தால் சிந்தெடிக் ஆயில் அதன் தன்மையை இழந்துவிடும் எனக் கூறுவார்கள். ஆனால் உண்மையில் சந்தெடிக் ஆயிலும் கன்வென்ஷனல் ஆயிலும் கிட்டத்தட்ட ஒரே விதமான மூலப்பொருட்களால் உருவாக்கப்பட்டது. இப்படியாக சிந்தெடிக் மற்றும் கன்வென்ஷனல் ஆயிலை கலந்தே மார்கெட்டில் சிந்தெடிக் பிளான்ட் ஆயில்கள் விற்பனையாகிறது. அதனால் இதை மிக்ஸ் செய்வது பிரச்சனையில்லை.

இன்ஜின் ஆயில் லீக்

சிலர் சிந்தெடிக் அயிலைப் பயன்படுத்தினால் அது இன்ஜினில் லீக்கேஜை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதை ஒட்டு மொத்தமாக மறுத்துவிட முடியாது. ஆனால் தரமான சிந்தெடிக் அயிலைப் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகள் ஏற்படாது. தரமற்ற சந்தெடிக் ஆயில்கள் மார்கெட்டில் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்தினால் இப்படியான பிரச்சனை சிலருக்கு ஏற்படலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 10, 2022, 15:34 [IST]
English summary
Vehicle engine oil myths all you need to know
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+