கோடை காலங்களில் திடீர் திடீரென தீப்பிடித்து எரியும் கார் பைக்குகள்! தடுப்பது எப்படி?

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்த கோடை காலங்களில் கார் பைக் போன்ற வாகனங்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவது குறித்த செய்திகள் வெளியாகி வருகிறது. கோடை காலங்களில் இப்படியாக வாகனங்கள் தீப்பிடித்து எரிய என்ன காரணம் இதை தடுப்பது எப்படி உள்ளிட்ட விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழுவதும் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மதிய நேரங்களில் மக்கள் நடமாட்டமே வெளியில் இல்லாத அளவுக்கு கோடை வெயில் உச்சத்தில் இருப்பதால் இந்த நேரங்களில் பல்வேறு விதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. முக்கியமாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் பல தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன.

vehicle fire in summer

கோடை வெயிலுக்கு வாகனங்கள் தீப்பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம் வாகனம் தீ பிடிப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன? இதை தடுப்பது எப்படி என்று பலரும் தேடி வருகிறார்கள். அவர்களுக்கான ஒரு சில டிப்ஸ்களை தான் நாம் இங்கே உங்களுக்கு விரிவாக வழங்கப் போகிறோம். சமீபத்தில் கூட இப்படியான செய்திகள் எல்லாம் ஊடகங்களில் இடம் பெற்றன.

கோடை வெயிலில் பெரும்பாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் தீப்பிடித்து எரியும் என சில நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படி எல்லா பெட்ரோல் டீசல் வாகனங்களும் கோடை வெயிலால் தீப்பிடித்து எறிவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனம் எந்த அளவுக்கு எரியுமோ அதேபோல பெட்ரோல் டீசல் வாகனங்களும் எரிய வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் உள்ளன.

vehicle fire in summer

வாகனத்தின் பேட்டரி லோடு அதிகமாக இழுத்தால் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீப்பிடித்து எறிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனத்தில் உள்ள மியூசிக் பிளேயர்,லைட் உள்ளிட்ட பல்வேறு விதமான கருவிகளுக்கு வாகனத்தின் பேட்டரி பவரை எடுக்கும் போது ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டால் வாகனத்தில் தீப்பிடிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த தீப்பொறி வாகனத்தில் உள்ள எரியும் விதமான மற்ற பொருட்கள் மீது பரவி ஒட்டுமொத்த வாகனமே தீயில் எரிய வாய்ப்புள்ளது.

வாகனங்களில் பேட்டரியில் இருந்து பவரை மின்சாதன பொருட்களுக்கு எடுத்து செல்வதற்காக வயர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த ஒயர்களின் கட் ஏற்பட்டால் அது வாகனத்தின் இரும்பு பகுதியில் பட்டு சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எலெக்ட்ரிக் வாகனம் மற்றும் பெட்ரோல், டீசல் வாகனம் என எந்த வாகனமாக இருந்தாலும் இந்த பிரச்சனையால் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

vehicle fire in summer

பெட்ரோல்,டீசல் வாகனங்களில் மற்றும் ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பெட்ரோல்,டீசலில் லீக் ஏற்பட்டால் அந்த லீக் மூலம் வாகனம் தீப்பிடிக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதனால் வாகனங்களில் இருந்து பெட்ரோல் டீசல் கசிகிறதா என அவ்வப்போது சோதனை செய்து கொள்வது நல்லது.

ஒருவேளை நீங்கள் எல்பிஜி அல்லது சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்தி வந்தால் கேஸ் டேங்கில் இருந்து இன்ஜினுக்கு செல்லும் பைப்பில் ஏதாவது லீக் இருந்தாலும் அந்த வாகனம் எளிதில் தீப்பற்றி எறிய அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இதை எல்லாம் விட மிக முக்கியமான காரணம் பேட்டரி அதிகமாக சூடாவது. கோடை காலங்களில் வாகனங்களில் உள்ள பேட்டரி அதிகம் சூடானால் இப்படியாக தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

இதனால் வாகனத்தை பார்க் செய்யும்போது எப்பொழுதும் நிழல் உள்ள பகுதியில் பார்த்து பார்க் செய்வது நல்லது. இதனால் வாகனத்திற்கு அதிக வெப்பம் வராது. அதே நேரம் கோடைகாலங்களில் வாகனங்களை பார்த்து செய்யும்போது முழுவதுமாக அனைத்து கண்ணாடி முடிவிடாமல் லேசாக அதை திறந்து வைத்து காருக்குள்ளே காற்றோட்டம் இருக்கும்படி செட் செய்து கொள்வது நல்லது. இல்லையென்றால் காருக்குள் வெப்பம் அதிகமாகி அதனால் பாதிப்புகள் வரவும் வாய்ப்பு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் வாகனங்கள் எந்த சூழ்நிலையிலும் தீப்பிடிக்காத வகையில் தான் வடிவமைத்திருப்பார்கள். ஆனால் நாம் சரியாக அதை பராமரிக்கவில்லை என்றால் அதில் ஏற்படும் மாற்றங்கள் வாகனம் தீப்பிடிக்க காரணமாகிவிடும். இதனால் அவ்வப்போது வாகனங்களை பராமரித்துக் கொள்ளுங்கள். கோடைகாலங்களில் முடிந்த அளவு வாகனங்களை வெயிலில் நிறுத்தாமல் வைத்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 9, 2024, 7:00 [IST]
English summary
Vehicle fire summer useful prevention methods
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X