வெள்ளத்துல முழ்குன வண்டில இதை மட்டும் எப்பயும் செய்யாதீங்க! அப்புறம் வண்டிய பேரிச்சம்பழத்துக்கு தான் போடனும்!

தற்போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் வெல்ல நீர் தேங்கி நிற்கிறது. வாகனம் வைத்திருக்கும் பலர் இப்படியாக வெள்ள நீருக்குள் சிக்கி விட்டால் அவர்கள் வாகனம் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியாக உங்கள் வாகனம் தண்ணீரில் மூழ்கினால் அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற விவரத்தை தான் இங்கே காணப் போகிறோம்

ஸ்டார்ட் செய்யாதீர்கள்: நீங்கள் வெள்ள நீர் வடிந்ததும் உங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்து உங்கள் அன்றாட பணிகளை செய்து விடலாம் என நினைக்காதீர்கள். உங்கள் வாகனம் வெள்ளை நீரில் மூழ்கி இருந்தால் உங்கள் வாகனத்தில் உள்ளே தண்ணீர் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. தண்ணீருடன் இருக்கும் இன்ஜினை ஸ்டார்ட் செய்தால் மொத்தமாக இன்ஜின் பழுதாகிவிடும் . இதனால் எக்காரணத்தைக் கொண்டும் வெள்ளநீர் வடிந்த பின்பு வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள்.

vehicle flooded in the rain tips

பேட்டரியை கழட்டவும்: ஒருவேளை நீங்கள் வெள்ள் அபாய எச்சரிக்கை உள்ள பகுதி அல்லது அடிக்கடி வெள்ள நீர் சூழூம் பகுதியில் தங்கியிருந்தால் நீங்கள் வாகனத்தை நிறுத்திய பின்பு அதிலிருந்து பேட்டரியை கழட்டி தனியாக வைத்து விடுங்கள். ஒருவேளை வெள்ள நீர் உள்ளே உங்கள் வாகனம் மூழ்கினாலும் பேட்டரி தனியாக இருந்தால் பாதிப்பை பெரும் அளவு குறைக்க முடியும். பேட்டரி கனெக்ட் செய்யப்பட்டிருந்தால் அதன் மூலம் அதிகமாக பாதிப்பு ஏற்படலாம்.

ஸ்பார்க் பிளக்கை கழட்டுங்கள்: உங்களுக்கு வாகனத்தின் இன்ஜின் உள்ளே தண்ணீர் சென்றிருக்கலாம் என்ற லேசான சந்தேகம் இருந்தாலும் வாகனத்தின் பேட்டரியை முதலில் கழட்டுங்கள். பின்னர் முக்கியமாக ஸ்பார்க் பிளக்கை கழட்டி விடவும். நீண்ட நேரம் தண்ணீர் இருக்கும் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் இணைக்கப்பட்டு இருந்தால் ஸ்பார்க் பிளக் பகுதி துரு பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அது துருப்பிடித்து விட்டால் அதை சரி செய்வது என்பது கடினமான காரியம் ஆகிவிடும்.

vehicle flooded in the rain tips

தண்ணீரை வெளியேற்றுங்கள்: நீங்கள் இருக்கும் பகுதியில் ஓரளவு தான் வெள்ள நீர் வந்தது. இதனால் வாகனத்தில் உள்ளே தண்ணீர் சென்று விட்டதா இல்லையா என உங்களுக்கு தெரியவில்லை என்றால் இரண்டு விதமாக டெஸ்ட் செய்யலாம். வாகனத்தின் எக்ஸாஸ்ட் பகுதி வழியாக தண்ணீர் வந்தால் அது நிச்சயம் பிரச்சனையான விஷயமாக தான் இருக்கும்

ஸ்பார்க் பிளக் வழியாக தண்ணீர் வந்தாலும் வாகனத்தில் உள்ளே தண்ணீர் இருக்கிறது என்பது உறுதியான விஷயமாக இருக்கும். இந்த விஷயத்தில் ஏதாவது ஒன்றை நீங்கள் கண்டாலும் அருகில் உள்ள மெக்கானிக் இருக்கும் பகுதிக்கு உங்கள் வாகனத்தை தள்ளிக் கொண்டே செல்வது நல்லது. ஸ்டார்ட் செய்ய வேண்டாம்.

vehicle flooded in the rain tips

மெக்கானிக் உதவியை நாடுங்கள்: உங்கள் வாகனம் தண்ணீரில் மூழ்கி விட்டால் வாகனத்தின் பல்வேறு பாகங்கள் செயலிழந்து போக வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சினையை நீங்களே சரி செய்து விடலாம். என நினைக்காதீர்கள் இதற்கு அனுபவம் வாய்ந்த பல மெக்கானிக்கல் இருக்கிறார்கள். உங்கள் வாகனத்தை அவர்களிடம் கொண்டு சென்று பாதிப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டுள்ளது. என்பதை அறிந்து கொண்டு அதை எப்படி சுலபமாக சரி செய்யலாம் என செக் செய்து கொள்ளுங்கள்.

தற்போது மழை காலம் என்பதால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நீங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியில் தண்ணீர் சூடும் சூழ்நிலை இருந்தால் முன்னெச்சரிக்கையாக உங்கள் வாகனத்தை எடுத்து வேறு இடத்திற்கு மாற்றி விடுங்கள். தண்ணீர் எளிதாக உள்ளே வரும் வசதி இல்லாத இடத்தில் பார்க்கிங் செய்வது சிறந்தது. வாகனத்தில் உள்ளே தண்ணீர் செல்வது என்பது வாகனத்தின் ஆயுளை மிக வேகமாக குறைக்கும் விஷயமாகும்.

vehicle flooded in the rain tips

வாகனத்தில் உள்ளே தண்ணீர் செல்லாமல் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது தான் நாம் செய்ய வேண்டிய முதல் கட்ட வேலை. இரண்டாவது வேலை தான் ஒருவேளை தண்ணீர் உள்ளே சென்றுவிட்டால் எப்படி அதிக பாதிப்புகள் இல்லாமல் வாகனத்தை காப்பாற்றுவது என்ற விஷயம். இதனால் எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாக வாகனத்தில் உள்ள தண்ணீர் செல்லாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப செயல்படுங்கள்.

ஒருவேளை உள்ளே தண்ணீர் சென்று விட்டாலும் பதற்றம் அடையாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காமல் உரிய மெக்கானிக்கிடம் வாகனத்தை கொண்டு செல்வது தான் சிறந்தது. நீங்கள் ஒருமுறை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தாலும் உங்கள் வாகனத்தின் இன்ஜின் பழுதாகி போக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் எக்காரணத்தைக் கொண்டும் அதை முயற்சி செய்யாதீர்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதற்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளங்களில் இப்படியாக தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள் பல ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கப்பட்டு மொத்தமாக வீணாகிப் போன சம்பவங்கள் எல்லாம் அதிகம் இருக்கிறது. அதன் மூலம் கற்றுக் கொண்ட பாடத்தை தான் இங்கே உங்களுக்கு டிப்ஸ்களாக வழங்கியுள்ளோம். இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, December 3, 2023, 18:52 [IST]
English summary
Vehicle flooded rain tips what to do in flooded conditions guide
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X