புதுசா வாங்குன காரை யாராவது திருடிட்டாங்கன்னா இன்சூரன்ஸ் பணம் கிடைக்குமா? கிடைக்காதா?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளில் இந்தியாவில் நடந்துவரும் கார் திருட்டு தொடர்பான செய்திகளை அதிகம் படித்திருப்பீர்கள். இந்த செய்திகளில் இந்தியாவில் உள்ள கார் திருட்டு குறித்த தரவுகள் வெளியானது குறித்து பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தன. எந்த கார்கள் அதிகம் திருடப்படுகின்றன,எந்த ஊர்களில் அதிகம் கார்கள் திருடப்படுகின்றன, என்ற தகவல்கள் எல்லாம் இருந்தன.

உலக நாடுகள் முழுவதும் இந்த கார் திருட்டு பிரச்சினை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களை உட்பகுத்தி கார் திருடப்படுவதை தடுக்கவும் மீறி திருடப்பட்டாலும், உடனடியாக அதை கண்டுபிடிக்கவும் பல்வேறு யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

car theft insurance claim

இருந்தாலும் திருடர்கள் அதையும் மீறி கார் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கார் திருட்டு சம்பவம் என்பது குறைந்து கொண்டு வந்தாலும், இன்றளவும் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் நீங்கள் புதிதாக வாங்கி பயன்படுத்தி வரும் கார் ஒரு வேளை திருடப்பட்டால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படுமா இதை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை தான் இங்கே காண போகிறோம்.

புதிதாக கார் வாங்கும் போது அதற்கு இன்சூரன்ஸ் என்பதை கட்டாயம் எடுக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி மூன்றாம் நபருக்கான இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக இருக்கிறது. இதுபோக வாகன பாதிப்பிற்கான இன்சூரன்ஸ் மற்றும் காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் என்ற இரண்டு விதமான இன்சூரன்ஸ் இருக்கிறது. வாகனத்தின் முழு பாதுகாப்பிற்காக பெரும்பாலும் காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் தான் பலர் விரும்பி எடுப்பார்கள்.

car theft insurance claim

இன்சூரன்ஸ் என்பது எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டாலும், உங்கள் நஷ்டத்தை ஈடு செய்வதற்கான இன்சூரன்ஸ் முறையாகும். இந்த இன்சூரன்ஸ் கார் திருடு போனாலும் உங்களுக்கு இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்யக்கூடிய உரிமை இருக்கிறது. இதுவே நீங்கள் வாகன பாதிப்பிற்கான இன்சூரன்ஸ் எடுத்தால், அந்த இன்சூரன்ஸில் வாகனம் தொலைந்து போனால் அதற்கான இன்சூரன்ஸ் பணத்தை நீங்கள் கிளைம் செய்ய முடியாது.

காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் முறையில் நீங்கள் வாகனத்தை வாங்கி இருந்தால் உங்கள் வாகனம் திருடு போன பிறகு, நீங்கள் போலீசில் புகார் அளிக்க வேண்டும். அதன் பின்பு போலீசார் உங்கள் வாகனத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள். ஒரு கட்டத்தில் உங்கள் வாகனம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் போலீஸ் தரப்பில் இருந்து அதற்கான சான்று தரப்படும்.

car theft insurance claim

அதை வைத்து நீங்கள் இன்சூரன்ஸ் பணத்தை கிளைம் செய்து கொள்ளலாம். இப்படியாக நீங்கள் கிளைம் செய்யும்போது காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸில் எவ்வளவு பணம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த பணம் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் காம்ப்ரிஹென்சிவ் இன்சூரன்ஸ் எடுக்கும் போது ரிட்டர்ன் ஆப் இன்வாய்ஸ் என ஆப்ஷனை தேர்வு செய்து எடுத்திருந்தால் உங்களுக்கு அதிக பலன் கிடைக்கும்.

அதாவது நீங்கள் கார் வாங்கும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்திற்கு ஈடான தொகைக்கு காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் என்பது வழங்கப்பட்டிருக்கும். இதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உங்களுக்கு எந்த வித நஷ்டமும் ஏற்படாமல் இன்வாய்ஸில் குறிப்பிடப்பட்டுள்ள முழு பணமும் உங்களுக்கு ரிட்டன் கிடைக்கும்.

இதனால் உங்கள் கார் திருடப்பட்டால் உங்களுக்கு எந்த விதமான நஷ்டமும் ஏற்படக்கூடாது. நீங்கள் காம்ப்ரிஹென்ஸிவ் இன்சூரன்ஸ் எடுக்கும் போது ரிட்டர் ஆப் இன்வாய்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து வாகனத்தை இன்ஸ்சூர் செய்வது தான் சிறந்த வழிமுறையாக இருக்கும். இதற்கான இன்சூரன்ஸ் பிரீமியம் என்பது அதிகமாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன திருட்டு என்பது தற்போதைய சூழ்நிலையில் தடுக்க முடியாத ஒரு விஷயமாக இருக்கிறது. அதனால் நீங்கள் வாகனத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியமான விஷயமாக இருக்கிறது. வாகனத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் உங்களுக்கு நஷ்டம் மற்றும் மன உளைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியும். இதனால் உங்கள் கார் விஷயத்தில் கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 17, 2024, 7:00 [IST]
English summary
Vehicle insurance claim process for a stolen vehicle in india
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X