மழை வெள்ளத்துல மூழ்குன வண்டிய ஏன் ஸ்டார்ட் பண்ண கூடாது தெரியுமா? இதுதான் உண்மையான காரணம்!

சென்னையில் தற்போது மிக்ஜாம் புயல் தாக்கிய நிலையில் பல வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கார்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் அடித்து செல்லும் வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கார் பைக் வைத்திருப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக உங்கள் வாகனம் நீரில் மூழ்கி விட்டால் அதை ஸ்டார்ட் செய்ய வேண்டாம் என பலர் சொல்லி வருகிறார்கள்.

நாமும் இதற்கு முந்தைய பதிவுகளில் இப்படியான பல அறிவுரைகளை வழங்கியிருந்தோம். உங்கள் வாகனம் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கி இருந்தால் தயவு செய்து அதை மீட்டெடுத்த பின்பு உடனடியாக ஸ்டார்ட் செய்து அதை இயக்கம் முயற்சி செய்யாதீர்கள் என சொல்லி இருந்தோம். அப்படி ஸ்டார்ட் செய்தால் என்ன நடக்கும் என பலருக்கும் புரியவில்லை. அவர்களுக்கான விளக்கத்தை தான் இங்கே காணப் போகிறோம்.

Water Flooded Engine Tips

எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்திற்குள் உங்கள் வாகனம் சிக்கிவிட்டால் உங்கள் வாகனத்தை சுற்றி தண்ணீர் ஏற துவங்கிவிடும். பல இடங்களில் கார்களை விட உயரமான அளவுக்கு தண்ணீர் ஏறி இருக்கிறது. இப்படியான நேரங்களில் உங்கள் வாகனத்திற்கு உள்ளேயும் தண்ணீர் சென்றதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. அப்படி காரின் இன்ஜின் பகுதியை சுற்றி தண்ணீர் நிரம்பி இருந்தால் மெல்ல மெல்ல இன்ஜினிற்குள் தண்ணீர் செல்ல வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரம் எக்ஸாஸ்ட் பகுதி வழியாகவும் தண்ணீர் உள்ளே வந்து இன்ஜினிற்குள் நேரடியாக செல்லவும் அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த இடத்தில் தான் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படுகிறது. இப்படியாக வாகனத்தின் உள்ளே செல்லும் தண்ணீர் என்பது ஓர் அளவுக்கு மேல் பரவாது. இன்ஜினில் உள்ள உதிரி பாகங்கள் இடையே உள்ள இடைவெளி மிக சிறியதாக இருக்கும் என்பதால் மிகக் குறைவான தண்ணீர் தான் உள்ளே சென்று இருக்கும்.

Water Flooded Engine Tips

இதனால் இன்ஜின் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால் இன்ஜினிற்குள் கொஞ்சமாவது தண்ணீர் இருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கம்பேஷன் இன்ஜின்களை தயாரிக்கும் போது அதன் உட்பகுதியில் அதிக பெர்பார்மன்ஸ் வேண்டும் என்பதற்காக எந்த வித ரசாயன கலவையும் இல்லாமல் நேரடி உலோகங்களை மட்டுமே பயன்படுத்தியிருப்பார்கள்.

இப்படியாக நேரடியாக பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்பது தண்ணீருக்கு அதிகம் துருப்பிடிக்கும் தன்மை வாய்ந்ததாக இருக்கும். இதனால் வாகனத்தில் உள்ளே சென்ற தண்ணீர் குறிப்பிட்ட இடத்தில் அதிக நேரம் இருந்தால் அந்த இடம் துருப்பிடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சொல்லப்போனால் அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நேரத்தில் நீங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முயன்றால் வாகனத்தில் உள்ள இன்ஜின் உள்ளே இருக்கும் தண்ணீரை பெட்ரோல் என நினைத்து அதை இன்ஜின் முழுவதும் பரவ வழி செய்து விடும். இதனால் கொஞ்சமாக இருந்த தண்ணீர் இன்ஜின் முழுவதுமாக பரவி விடும்.

அடுத்து இதை உணர்ந்து நீங்கள் மெக்கானிக்கிடம் சென்று அவர் இதை கழட்டி சரி பார்ப்பதற்குள் இந்த தண்ணீர் அதிக நேரம் இன்ஜின் முழுவதும் இருந்து இன்ஜினில் பெரும்பாலான பகுதியை துருப்பிடிக்க வைத்து விடும். இப்படி நடந்து விட்டால் அடுத்து உங்கள் இன்ஜின் செயல்படாது. அதை முழுவதுமாக கழட்டி துருவை நீக்கி வேலை செய்தால் தான் அடுத்து இந்த இன்ஜினை மாட்டி நீங்கள் வாகனத்தை இயக்க முடியும்.

இப்படியாக வாகனத்தின் இன்ஜின் உள்ளே துருப்பிடித்து விட்டால் அந்த துருவை நீக்குவது ஒன்றும் கடினமான வேலை அல்ல. ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் வேலை. இன்றைய மெக்கானிக்குகள் பலர் இந்த வேலையை செய்வதே இல்லை இப்படியாக வேலை வந்து விட்டால் அவர்களை வேறு கார் வாங்கவே பரிந்துரை செய்து விடுகின்றனர். அதிக நேரம் எடுத்து இதை சரி செய்ய அவர்களிடம் நேரமும் இல்லை, அதற்கான பணமும் கிடைக்காது.

ஒருவேளை நீங்கள் ஸ்டார்ட் செய்யாமல் இருந்தால் இன்ஜின் உள்ளே குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தான் தண்ணீர் வந்திருக்கும். அந்த இடத்தில் மட்டும் லேசான துரு பிடித்திருக்கும். அதை சுலபமாக மெக்கானிக்குகள் நீக்கிவிடுவார்கள் நீக்கிவிட்டு இன்ஜினை மீண்டும் செட் செய்து உங்களுக்கு தருவார்கள் அதன் மூலம் நீங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முன்பு எப்படி வாகனம் ஓட்டினீர்களோ அதே போல வாகனத்தை ஓட்ட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் வாகனம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக வாகனத்தை ஸ்டார்ட் செய்யாதீர்கள். பலருக்கு இதற்கான தெளிவான விளக்கம் தெரியாததால் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்து ஒட்டுமொத்த வாகனத்தையே வீணாக்கி விடுகின்றனர். வாகனத்தை ஸ்டார்ட் செய்யாமல் நேரடியாக மெக்கானிக்கிடம் கொண்டு சென்றால் உங்கள் வாகனத்தின் ஆயுள் எந்த பிரச்சினையும் இல்லாமல் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, December 4, 2023, 20:22 [IST]
English summary
Water flooded engine tips chennai rain rust details
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X