லோன் போட்டு வாங்குன கார திருடிட்டு போய்டாங்களா? முன்னாடியே இதை பண்ணிருந்தா இஎம்ஐ-ல இருந்து தப்பிக்கலாம்!

லோன் போட்டு கார் வாங்கியவர்களின் கார் திருடு போய்விட்டால் அந்த காருக்கான இஎம்ஐயை அவர்கள் செலுத்த வேண்டுமா? அல்லது காரே இல்லை பின்ன எதைத் தூக்கப்போகிறார்கள் என விட்டு விடலாமா? எது சரியான வழி எனக் கீழே காணலாம் வாருங்கள்

இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கார் திருட்டு என்பது நடக்கிறது. திருடர்கள் கார்களை திருட்டு அதை பார்ட்ஸ் பார்ட்ஸாக கழட்டி அதைக் கள்ள மார்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு நீண்ட நாட்களாகத் தீர்வு கிடைக்காமல் பலர் திண்டாடி வருகின்றனர். இன்று கார்கள் திருடு போவதைத் தடுக்க பல தொழிற்நுட்பம் வந்துவிட்டால் திருட்டு குறைந்துவிட்டாலும் முற்றிலும் நின்று போகவில்லை.

-

இன்றைய சூழ்நிலையில் கார் வாங்கும் பலர் அந்த காரை முழுவதுமாக பணம் கட்டாமல் லோன் மூலமே காரை வாங்குகின்றனர். காரை வாங்கிய பின்பு அந்த லோனை இஎம்ஐ மூலம் மாதம் மாதம் பணம் செலுத்திக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காரை சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் கார் லோனில் இருக்கும் போது திருடு போக அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக லோனில் உள்ள கார் திருடுபோனால் பாக்கி இஎம்ஐயை கட்ட வேண்டுமா அல்லது அதற்கு வேறு வழிகள் இருக்கிறதா?

இந்த குழப்பம் பலருக்கும் நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்த குழப்பத்தைத் தீர்க்கவே இந்த பதிவை உங்களுக்காக வழங்கியுள்ளோம். இதற்குப் பதில் தெரியவேண்டும் என்றால் கார் கடன்குறித்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். கார் லோன் என்பது குறிப்பிட்ட நிறுவனம் நீங்கள் வாங்கியுள்ள காரை அடமானமாக வைத்து உங்களுக்கு வழங்கியுள்ள கடன். இது உங்கள் காருக்கு வழங்கிய கடன் கிடையாது. அதனால் கார் உங்களிடம் இருக்கிறதோ இல்லையோ அந்த கடனுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

உங்களுக்குக் கடன் வழங்கிய நிறுவனம், உங்கள் கார் திருடு போனதற்கு எந்த விதத்திலும் பொறுப்பாகாது. அதனால் உங்கள் கார் திருடு போனதற்காக வங்கிக்கு நீங்கள் செலுத்தவேண்டிய கடனை கட்டாமல் விட முடியாது. அப்படி கட்டாயம் விட்டால் அது நேரடியாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அப்படி என்றால் கார் திருடுபோனாலும் அதற்கு இஎம்ஐ செலுத்துவதைத் தவிர வேறு வழியில்லையா என்று கேட்டால் அப்படியல்ல அதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது.

பொதுவாக கார் வாங்கும் போது இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும். அரசு 3ம் நபருக்கான இன்சூரன்ஸை மட்டுமே கட்டாயமாக வைத்திருக்கிறது. ஆனால் ஏகப்பட்ட இன்சூரன்ஸ் திட்டங்கள் இருக்கிறது. இதில் உட்சபட்சமாக காம்பிஹென்ஷிவ் இன்சூரன்ஸ் திட்டம் ஒன்று இருக்கிறது. இது சற்று விலை அதிகம் என்றாலும் இது காருக்கான எல்லா விதமான நஷ்டங்களையும் ஈடு செய்யும் வகையிலான ஒரு இன்சூரன்ஸ் திட்டமாகும்.

இந்த திட்டத்தின் கீழ் உங்கள் காரை நீங்கள் காப்பீடு செய்திருந்தால் உங்கள் கார் திருடு போனாலும் அதற்கான காப்பீட்டுத் தொகையை நீங்கள் பெற முடியும். உங்கள் காரை இன்ஸ்சூர் செய்யும் போது உங்கள் வாகனத்திற்கான மதிப்பு குறிப்பிடப்படும். அதன்படி உங்கள் வாகனம் திருடு போன பிறகு அது குறித்து நீங்கள் போலீசில் புகாரளித்து போலீசாரால் உங்கள் வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இந்த இன்சூரன்ஸை பயன்படுத்தி காரின் மதிப்பீட்டுப் பணத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் உங்கள் கார் திருடு போன பிறகு போலீஸ் புகார், இன்சூரன்ஸ் நிறுவன விசாரணை எனப் பணம் வர 2-3 மாதங்கள் வரை ஆகலாம். அதுவரை இஎம்ஐ கட்டணத்தை நீங்கள் செலுத்தியே ஆக வேண்டும். அதன் பின் காரின் மதிப்பிற்கு இன்சூரன்ஸ் பணம் வந்த பிறகு அதில் காருக்கான கடனை அடைத்துவிட்டு பின்னர் மீதம் இருக்கு தொகை உங்களுக்கு வழங்கப்படும். இது தான் கார் திருடு போனால் நாம் செய்ய வேண்டியது.

இப்படியாக கார் திருடு போனாலும் அதனால் ஏற்படும் நஷ்டம் உங்கள் தலையில் விழாமல் இருக்க வேண்டும் என்றால் காருக்கு நீங்கள் முதலிலேயே காம்ப்ரீஹென்ஷிவ் இன்சூரன்ஸை பெற்றுக்கொள்வது சிறந்தது. இந்த இன்சூரன்ஸில் கார் விபத்தில் சிக்கினாலும் சரி, கார் தொலைந்து போனாலும் சரி, இயற்கை பேரிடரால் கார் சேதமானாலும் சரி காப்பீட்டு தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, December 21, 2022, 14:01 [IST]
English summary
What happens to your car loan EMI after your car stolen
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+