இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! உங்க காருக்கு கடன் கட்டலன்னு யாரும் வீட்டு வாசலுக்கு நிக்க மாட்டாங்க!

இன்று பலருக்குச் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர். ஒரு சொந்த கார் இருந்தால் சமூகத்தில் அவர்களுக்குத் தனி அந்தஸ்து கிடைக்கிறது. ஒருவர் வாழ்க்கையை கார் எளிமையாக மாற்றுகிறது. இதனால் ஒரு காரை வாங்கப் பலர் பல்வேறு வகைகளில் முயற்சிகளைச் செய்கின்றனர்.

இப்படியாக கார் வாங்கப் பெரும்பாலானோர் தேர்வு செய்யும் வழி கடன் மூலம் வாகனங்களை வாங்குவது தான். ஒரு காரை வாங்க அரசு மட்டும் தனியார் வழங்கிகள் பல்வேறு திட்டங்களின் மூலம் கடன்களை வழங்குகிறது. இப்படியாகக் கடன் வாங்கி கார் வாங்கினால் அந்த கடனை மாதாமாதம் இஎம்ஐ செலுத்தி அடைக்க வேண்டும். பலர் இப்படிதான் கார்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க! உங்க காருக்கு கடன் கட்டலன்னு யாரும் வீட்டு வாசலுக்கு நிக்க மாட்டாங்க!

ஆனால் கார் வாங்கிய பின்பு பலருக்கு இஎம்ஐ எமனாக மாறிவிடுகிறது. ஒரு ஆசையில் அதிக மாத தவணையில் கடனை வாங்கி பின்னர் அதைக் கட்ட முடியாமல் வாகனத்தைக் கடன் கொடுத்த நிறுவனம் ஜப்தி செய்யும் வரை சென்றுவிடுகிறது. இதற்குக் காரணம் மோசமான நிதி மேலாண்மை தான். அப்படி என்றால் ஒரு காரை வாங்கும் போது எப்படிப்பட்ட கடன் திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என நாம் தெரிய வேண்டும்.

கடன் திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு ஒரே ஒரு சூத்திரம் தான் இருக்கிறது. அதான் 20/10/4 விதி முறை, இதன் படி நீங்கள் வாகன கடன் வாங்கினால் எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுக்கும் லாபமாக இருக்கும். இறுதி வரை உங்கள் வாகனம் ஜப்திக்கு செல்லாமல் இருக்கும். சரி இந்த 20/10/4 விதிமுறை என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

இதில் முதலில் உள்ள 20 என்பது வாகனத்தின் மொத்த தொகையில் 20 சதவீதம் என்பதைக் குறிக்கிறது. ஒரு வாகனம் ரூ5 லட்சம் எனில் அதில் 20 சதவீதமான ரூ1 லட்ச ரூபாயை நீங்கள் முன்பணமாகச் செலுத்தி வேண்டும். குறைவான முன்பணம் செலுத்தும் திட்டத்தில் கடன் வாங்கினால் அதிக இஎம்ஐ கட்ட வேண்டியது வரும் அதனால் குறைந்தபட்சம் 20 சதவீத முன்பணமாவது செலுத்த வேண்டும்.

அடுத்தாக உள்ள 10 என்பது இஎம்ஐயை குறிக்கும் இது உங்கள் மாத வருமானத்தில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. நீங்கள் மாதம் ரூ50 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் மாதம் ரூ5 ஆயிரத்தை மட்டும் தான் வாகன கடனிற்கு இஎம்ஐ ஆகச் செலுத்த வேண்டும் அதற்கு அதிகமாகச் செலவு செய்தால் உங்களுக்கான மற்ற செலவுகளுக்குப் பணம் இல்லாமல் திண்டாடுவீர்கள்.

கடைசியாக இருப்பது ஆண்டுகள் அதாவது நீங்கள் வாங்கிய கடனை எத்தனை ஆண்டிற்குள் திருப்பி அடைப்பீர்கள் என்பதைக் குறிக்கும். 4 என்பது நீங்கள் எந்த வாகனமாக இருந்தாலும் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை மட்டுமே கடன் வாங்குங்கள். பொதுவாக எந்த வாகனமாக இருந்தாலும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு வெகுவாக குறைந்துவிடும். அதனால் நீங்கள் 4 ஆண்டுக்குள் கடனை அடைக்கும் திட்டத்தில் மட்டுமே கடனை வாங்குங்கள்.

இதை மட்டும் சரியாக நீங்கள் பின்பற்றினால் நீங்கள் வாகன கடனை வாங்கினாலும் அதை எளிதாகத் திரும்பச் செலுத்த முடியும். வாகனத்தைக் கடன் வழங்கிய நிறுவனம் ஜப்தி செய்து செல்வதைத் தடுக்க முடியும். இது ஒரு சராசரி வருமானம் கொண்டவர்களுக்கான முக்கியமான மாதம் நிலையான வருமானம் கொண்டவர்களுக்கு ஒத்து வரும் ஒரு திட்டம்.

வருமானம் அதிகமாக அல்லது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான வருமானம் கொண்டவர்களுக்கு இந்த திட்டம் பெரிய அளவில் பலன் தராது. அதை நீங்களே கணக்கிட்டுப் பார்த்துக்கொள்வது தான் சிறந்தது. இது நிலையான நடுத்தரமான ஒரு வருமானம் கொண்டவர்களுக்குப் பொருந்தும் ஒரு டிப்ஸ்!

More from DriveSpark

Article Published On: Monday, February 27, 2023, 12:40 [IST]
English summary
What is 20 10 4 rules in vehicle loans
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+