வேகமா போகனும்னு ஆக்ஸிலேட்டரை ஏறி மிதிக்காதீங்க! இதை ஃபாலோ பண்ணுங்க, லேசா மிதிச்சாலும் சிட்டா பறக்கும்!

என்னதான் நீங்கள் நல்ல மைலேஜ் தரும் காரை வாங்கினாலும் இறுதியில் காரின் மைலேஜ் என்பது நீங்கள் கார் ஓட்டும் விதத்தில் தான் இருக்கிறது. குறிப்பாக மோசமான டிரைவிங் பேட்டன் கொண்ட டிரைவர்கள் எந்த காரை ஓட்டினாலும் அதன் மைலேஜ் வழக்கத்தைக் காட்டிலும் குறைவாகத் தான் கிடைக்கும்.

இப்படியாக நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு சில மோசமான பழக்கம் தான் குறைவான மைலேஜிற்கு காரணம். நம்மில் பலர் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக ஆக்ஸிலேட்டரை அதிகமாக மதித்துக்கொண்டே இருப்போம். ஆனால் இது மோசமான பழக்கம் எனச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஆக்ஸிலேட்டரை அதிகமாக மதித்துக்கொண்டே இருப்பதால் அதிகமாக பெட்ரோல் செலவாகும். இதனால் மைலேஜ் பெரும் அளவிற்குப் பாதிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது எப்படி வேகமாகச் செல்வது என நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்காகத் தான் லைட்ஃபூட் டிரைவிங் என்ற டெக்னிக் இருக்கிறது.

இந்த டெக்னிக்கை பயன்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் நெடுஞ்சாலைக்குள் நுழைந்ததும் முதலில் நீங்கள் செல்லப்போகிற லேனை தேர்வு செய்து அதில் காரை செலுத்துங்கள் பின்னர் நீங்கள் காரின் ஆக்ஸிலேட்டரை அதிகம் மிதித்த காரை வேகமாகச் செல்ல வையுங்கள். ஆனால் அப்படியே தொடர்ந்து செல்லாதீர்கள்.

கார் குறிப்பிட்ட அளவு வேகத்தை எட்டியதும் ஆக்ஸிலேட்டரிலிருந்து ஒரு நொடி காலை எடுத்துவிட்டு பின்னர் லேசாக ஆக்ஸிலேட்டரை மதித்தாலே போதும் கார் குறிப்பிட்ட வேகத்தைத் தானாக பிக்கப் செய்து தொடர்ந்து பயணிக்கும். இதனால் நீங்கள் குறைவான பெட்ரோல் செலவிலேயே அதே வேகத்தை மெயின்டெயின் செய்யமுடியும், மைலேஜூம் அதிகமாகும்.

இது மட்டுமல்ல சிலர் நெடுஞ்சாலையில் கூட அடிக்கடி கிளட்சை மதித்து கியரை மாற்றி காரை ஓட்டுகின்றனர். அடிக்கடி கியரை மாற்றுவது கூட அதிகமாக பெட்ரோல் செலவாக வழி வகுக்கும். இதனால் நெடுஞ்சாலைகளில் நீங்கள் உங்கள் பயணத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு பயணம் செய்யுங்கள். உங்களுடன் பயணிக்கும் சக வாகன ஓட்டிகளின் வேகத்திற்குச் செல்ல வேம் என நினைக்காதீர்கள்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது முடிந்தளவிற்கு வேகமாக டாப் கியருக்கு வந்துவிட்டால் பின்னர் காரை நீங்கள் ஓட்டும் விதத்தில் தான் மைலேஜ் இருக்கிறது. இன்று பல கார்களில் கியர் ஸ்விஃப்ட் இண்டிகேட்டர்கள் இருக்கிறது. அப்பொழுது நீங்கள் எந்த கியருக்கு காரை மாற்ற வேண்டும் என அதுவே குறிப்பிடும். அதை ஃபாலோ செய்து கூட டாப் கியருக்கு உடனே சென்று விடலாம்.

Article Published On: Tuesday, March 21, 2023, 9:26 [IST]
English summary
What is light foot driving how it helps to improve mileage
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+