மனிதர்களுக்கு வரும் கேன்சரை போல கொடியது.. சின்னதா இருக்கும்போதே அதை வேறோடு அழிக்கிறதுதான் நல்லது!
மனிதர்களுக்கு ஏற்படும் கேன்சர் வியாதியைப் போல மிகவும் கொடியதே வாகனங்களில் ஏற்படும் இந்த துரு ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததன் விளைவாகவே இது வாகனங்களைத் தாக்க ஆரம்பிக்கின்றது. சிறிது சிறிதாக வாகனத்தின் முக்கிய இரும்பு பாகங்களில் பரவி முழுவதாக தனக்கு இரையாக்கிவிடும் திறன் இதற்கு உண்டு.
இத்தகைய துருவை நம்மால் கட்டுப்படுத்த முடியும், ஏன், அதை அடியோடு அழிக்க மற்றும் மீண்டும் வராமலும் தடுக்கவும் முடியும். இதற்கு சில வழிக்காட்டுதல்களை நாம் பின்பற்றினாலே போதுமானது. அந்த வழிக்காட்டுதல்கள் என்ன என்பதையே இங்கு ஓர் நபர் நமக்கு வீடியோ வாயிலாக தெளிவுப்படுத்தி இருக்கின்றார்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், துருவை அழிக்க மக்களால் பயன்படுத்தும் அனைத்து வழிக்காட்டுதல்களையும் அவர் பின்பற்றி இருக்கின்றார். அதாவது, கோக கோலாவை பயன்படுத்துவது, பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது என பல யுக்திகளை அவர் கையாண்டிருக்கின்றார். இதில், எந்த வழிக்காட்டுதல் மிக சிறந்த முடிவை வழங்கியது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
உலோகத்தில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தால் அரங்கேறக் கூடிய ஓர் சிக்கல் ஆகும். தண்ணீர் தொடர்ச்சியாக உலோகத்தின் மீது தேங்கி இருக்கும் எனில் இந்த ஆக்ஸிஜனேற்றம் நிகழ்வு சுலபமாக அரங்கேறிவிடும். இது ஏற்பட தொடங்கிய உடன் அந்த உலோகம் அரிப்பிற்கு ஆளாகும். இதுவே துருப்பிடித்தலுக்கான ஆரம்பம் ஆகும்.

இதை தவிர்க்க வேண்டும் எனில் வாகனத்தின் மீது தண்ணீர் படர்வதை தவிர்த்தல் அவசியம் ஆகும். இதுவே முதல் வழிக் காட்டுதலாகும். இதைபோலவே இன்னும் சிலர் சில தனித்துவமான வழிகளை இந்த விஷயத்தில் கையாண்டு வருகின்றனர். மிக முக்கியமாக கோக-கோலாவா ஒரு சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.
நம்மில் பலர் கோக-கோலா துருவிற்கு எதிராக செயல்படுவதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். பலர் அதை முயற்சி செய்தும் பார்த்திருக்கின்றனர். அந்தவகையில், இந்த பழைய டெக்னிக்கை இந்த யுட்யூபரும் செய்து பார்த்து இருக்கின்றார். இதற்காக துரு பிடித்த மோட்டார்சைக்கிள் செயினை கோக-கோலாவில் குளிக்கச் செய்தார்.

இது ஊற்றப்பட்ட உடன் துரு போய்விடும் என்று பார்த்தால், அதுதான் நடக்கவில்லை. குறிப்பாக, அனைத்து துருக்களும் அப்படியே இருந்தன. அதேநேரத்தில் கோலாவால் ஊர வைத்த பின்னர், அதை இரும்பு ஸ்கிரப்பரை வைத்து தேய்த் பின்னர் துருக்கல் விளகின. ஆகையால், இதுவும் ஓர் சுலபமான ரஸ்ட் கிளீனர் என்பது தெரிய வந்திருக்கின்றது.
கோலாவை அடுத்து டி-கிரீசர் பயன்படுத்தப்பட்டது. இதற்காக டி-கிரீசர் கலக்கப்பட்ட கலவை ஓர் பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்டது. இதில், சில மணி நேரம் துரு பிடித்த சங்கிலி ஊர வைக்கப்பட்டது. இது துருவை மாயம் செய்யவில்லை. இருப்பினும், ஸ்கிரப்பரை பயன்படுத்தும்போது அது சுலபமாக நீங்கியது.

கோக-கோலாவைவிட மிக சிறப்பாக இது வேலை செய்தது என்றே கூறலாம். பேக்கிங் சோடா-வும் இதைத்தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. வீடுகளில் பொதுவாக பயன்பாட்டில் இருக்கும் ஓர் ரசாயனமே பேக்கிங் சோடா ஆகும். இல்லத்தரசிகள் பலர் இதை கழிவறையில் உள்ள படிந்த உப்பை நீக்கவும், ஆயில் பிசுக்குகளை அகற்றவும் பயன்படுத்துகின்றனர்.
இதைப் போலவே துருவிற்கு எதிராகவும் இது பயன்படுத்தப்பட்டது. ஆனால், பெரிய அளவில் அது வேலை செய்யவில்லை. பேக்கிங் சோடாவில் நீண்ட நேரம் ஊறிய பின்னரும் அதில் உள்ள துருவை அகற்ற நிறைய நேரமும், வேலையையும் அது எடுத்துக் கொண்டது. இவைகளை அடுத்தே கடைசியாக ரஸ்ட் ரிமூவர் பயன்படுத்தப்பட்டது.
மேலே பார்த்த அனைத்து வழிக்காட்டுதல்களைக் காட்டிலும் ரஸ்ட் ரிமூவர் மிக சிறப்பாக வேலை செய்தது. அது, சில துருவை மாயமாக செய்தது என்றே கூறலாம். ரஸ்ட் ரிமூவர் ஸ்பிரேவை பயன்படுத்திய உடன் துருக்கள் அனைத்தும் தானாக பெயர்ந்து வந்தன. ஆகையால், ரஸ்டை நீங்கள் போக்க வேண்டும் எனில் இந்த ரஸ்ட் ரிமூவரே மிக சிறந்த வழியாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் காசை மிச்சப்படுத்த வெவ்வேறு வழிகளையும் யுக்திகளையும் கடைபிடிக்கின்றனர். ஆனால், சுலபமாக துருவை போக்க வேண்டும் எனரில் இந்த ரஸ்ட் க்ளீனரே மிக சிறந்த வழியாகம். இது வேலையை சுலபமாக்கும். அத்துடன், ரஸ்ட்டை மீண்டும் வராமலும் தவிர்க்கும். அதேவேளையில், தண்ணீரில் அதிகம் நம்முடைய வாகனம் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம்முடைய கடமை ஆகும்.


Click it and Unblock the Notifications









