பைக் இன்ஜினை ஆஃப் செய்ததும் "டிக் டிக்"னு சத்தம் வருதா? உஷாரா இருங்க! இதான் உண்மையான காரணம்!

நீங்கள் நீண்ட தூரம் பைக் ஒட்டி வந்த பின்பு பைக்க நிறுத்திவிட்டுச் செல்லும் போது பைக்கின் சைலென்சர் அல்லது எக்ஸாஸ்டிலிருந்து "டிக் டிக்" எனச் சத்தம் கேட்கிறதா? அப்படிக் கேட்டிருந்தால் அது ஏன் கேட்கிறது? அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இது பைக்கிற்கு ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்துமா? இப்படியாகச் சத்தம் வருவது சாதாரணம் தானா? முழு விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.

நீங்கள் உங்கள் பைக்கில் நீண்ட தூரம் எங்காவது பயணித்து விட்டு பைக்கை ஒரு இடத்தில் நிறுத்தி ஆஃப் செய்துவிட்டு பைக்கிலிருந்து இறக்கிச் செல்வீர்கள். இப்படியாக பைக்கை நீங்கள் நிறுத்தியவுடன் பைக்கின் சைலென்ஸர் அல்லது இன்ஜின் பகுதியிலிருந்து "டிக் டிக்" என சத்தம் வந்திருக்கும். எல்லா சமயங்களிலும் இது நடக்காவிட்டாலும் சில நேரம் இப்படியான சத்தம் வந்திருப்பதை நம்மில் பலர் கவனித்திருப்போம். பலர் இதை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து சென்று விடுவார்கள். சிலர் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என யோசிப்பார்கள்.

பெரும்பாலான மக்கள் அடுத்து பைக்கை எடுக்கும்போது அது எந்த விதமான பிரச்சனையும் இல்லாமல் செயல்படுகிறது என்பதால் இந்த சத்தத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்த சத்தம் உண்மையிலேயே ஆபத்தானது தானா? இது எப்படி வருகிறது? இதனால் பைக்கிற்கு ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என இங்கே காணலாம் .

இந்த சத்தம் வருவதற்கு முக்கியமான காரணம் பைக் இன்ஜின் அதிகமாக சுடாவது தான். நீண்ட தூரம் நீங்கள் பயணித்தால் பைக்கின் இன்ஜின் சூடாக இருக்கும். இப்படியாகச் சூடான இன்ஜின் பைக் நிறுத்தப்பட்டவுடன் சூடு குறையத் துவங்கிவிடும். இப்படியாகச் சூடு குறையும் போது இப்படியாக டிக் டிக் எனச் சத்தம் வருவது சாதாரண விஷயம் தான். நீங்கள் நீண்ட நேரம் பைக்கை ஓட்டிய பின்பு இந்த சத்தம் வந்தால் நீங்கள் பெரிதாகக் கவலைப்பட ஒன்றும் இல்லை இதை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டு கடந்து சென்றுவிடலாம்.

ஆனால் நீங்கள் வெறும் 2-3 கி.மீ தான் பயணித்துள்ளீர்கள், அதற்கே இப்படியாகச் சத்தம் வந்தால் உங்கள் பைக்கின் இன்ஜின் மிக விரைவாகச் சூடாகிறது என அர்த்தம் அப்படி ஏற்பட்டால் உடனடியாக இந்த பிரச்சனையை மெக்கானிக்கிடம் சொல்லி பைக்கின் இன்ஜினை செக் செய்யச் சொல்லுவது நல்லது. நீண்ட தூரம் பயணித்த பின்பு வந்தால் உங்கள்பைக்கில் இது பிரச்சனைக்கான அறிகுறியாக இருக்காது கவலைப்படத் தேவையில்லை.

சரி இந்த சத்தம் எங்கிருந்த தான் வருகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த சத்தம் வருவதற்கு முக்கியமான காரணம் கேட்டலிஸ்ட் கன்வெர்டர். பைக்கின் இன்ஜினிலிருந்து புகை வெளியேறுவதற்காக எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எக்ஸாஸ்டில்இந்த கேட்டலிஸ்ட் கன்வெர்டர் பொருத்தப்பட்டிருக்கும். பைக்கிலிருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்த இந்த கேட்டலிஸ்ட் கன்வெர்டர் பொருத்தப்படுகிறது. இது தான் பைக்கின் இன்ஜினிலிருந்து வெளியேறும் அதிக மாசுவை குறைக்கிறது.

இந்த கேட்டலிஸ்ட் கன்வெர்டர் என்பது ஒரு மெட்டல் பொருள். நீங்கள் நீண்ட நேரம் பைக்கின் இன்ஜினை இயக்கினால் அதிக சூடு வெளியேறும் இந்த சூடு காரணமாக இந்த கேட்டலிஸ்ட்கன்வெர்டர் விரிவடையும், நீங்கள் பைக்கை நிறுத்தியதும். இன்ஜின் ஆஃப் ஆன உடன் இந்த கேட்டலிஸ்ட் கன்வெர்டர் சுருங்க துவங்கும். இப்படியாக கேட்டலிஸ்ட் கன்வெர்டர் விரிந்த பின்பு சுருங்கும் போது ஏற்படும் சத்தம் தான் இந்த டிக் டிக் சத்தம் தான்

இதனால் பயப்படத் தேவையில்லை. கேட்டலிஸ்ட் கன்வெர்டர் என்பது ஒரு வாகனத்தின் இன்ஜினிலிருந்து வெளியேறும் மாசுவை சுற்றுச்சூழலுக்கு அதிக பாதகம் இல்லாமல் மாற்றும் வேலையைச் செய்கிறது. இது இன்ஜினிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை ஆக்ஸிடைசன் மூலம் கார்பன் டைஆக்ஸைடாக மாற்றுகிறது. எரியாத ஹைட்ரோ கார்பனை CO2 மற்றும் தண்ணீராக மாற்றும் ஆக்ஸிடைசன் முறையில் மாற்றும். இப்படியாக சுற்றுச்சூழலுக்கு அதிக மாசுவை ஏற்படுத்துவதைக் குறைத்துவிடுகிறது. இந்த தகவல் உங்களுக்குப் பிடித்திருந்தால் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Thursday, December 15, 2022, 13:23 [IST]
English summary
What is the engine knocking sound after the engine is turned off
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+