இதை எதுக்கு யூஸ் பண்ணனும்னு எல்லாருக்கும் தெரியும்!ஆனா எப்படி யூஸ் பண்னும்னு யாருக்கும் தெரியல!

கார் நடுவழியில் பிரேக் டவுனாகி நிற்கும்போது பயன்படுத்தக்கூடிய எச்சரிக்கை முக்கோண சிக்னலை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த சிக்னல் இருந்தும் பயனில்லாமல் இருக்கிறது. இதை எப்படி முறையாக பயன்படுத்த வேண்டும் என இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார்களை செல்லும்போது கார் நடுவழியில் பிரேக் டவுனாவதை விட மிக மோசமான நாள் நம் வாழ்வில் இருக்கவே முடியாது. நாம் ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும் என நினைத்து பயணிக்கும் போது கார் இப்படியாக மக்கர் செய்தால் நாம் அந்த வேலையை சரியாக செய்ய முடியாது.

hazard triangle tip

இப்படியாக கார் மக்கராகும் போது நடுவழியில் நின்று விட்டால் மற்ற வாகனங்கள் வந்து நம் கார் மீது மோதுவதை தடுக்க பலர் முக்கோண எச்சரிக்கை சிக்னலை பயன்படுத்துவார்கள். இதை காருக்கு முன் பகுதியிலும் பின்பகுதியிலும் கொஞ்ச தூரம் தள்ளி வைத்துவிட்டால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு சிக்னலாக இருக்கும் என இதை செய்கிறார்கள்.

பொதுவாக இந்த எச்சரிக்கை முக்கோண சிக்னல் சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் தூரத்தில் வரும் வாகனங்கள் எளிதாக அதை கண்டறிய முடியும் இதற்காக தான் பலர் இந்த எச்சரிக்கை சிக்னலை பயன்படுத்துகிறார்கள் ஆனால் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு தான் நின்றவுடன் காருக்கு மிக அருகிலேயே இந்த எச்சரிக்கை சிக்னலை வைத்து விடுகின்றனர்.

hazard triangle tip

இவ்வளவு அருகில் இந்த எச்சரிக்கை செய்தால் இருந்தால் அதே சாலையில் வரும் மற்ற வாகனங்கள் சரியாக கனித்து உங்கள் வாகனம் மீது மோதாமல் செல்வது சிரமமாக இருக்கும். இதனால் குறைந்தபட்சம் 50 மீட்டர் தொலைவில் தான் இந்த முக்கோண எச்சரிக்கை சிக்னலை வைக்க வேண்டும்.

இதனால் ரோட்டில் ஒரு மற்ற வாகனங்கள் இதை சுலபமாக பார்த்து தங்கள் வாகனத்தை அதற்கு தகுந்தாற்போல் திருப்பி உங்கள் வாகனம் மீது மோதாமல் செல்ல முடியும். இந்த 50 மீட்டர் என்பது சாலையில் வரும் மற்ற வாகனங்களுக்கு கவனித்து திசை மாற்ற சரியான தூரமாக இருக்கும்.

இந்த எச்சரிக்கைகளை நீங்கள் சாலையில் வைக்கும் உங்களுக்காக பிரேக் டவுன் ஆனால் முதலில் நீங்கள் காரை முடிந்த அளவுக்கு சாலையின் ஒரு ஓரமாக கொண்டு செல்ல முடியுமா என்பதை பார்க்க வேண்டும். அதன் பின் காரின் இஞ்சினை ஆப் செய்து விட்டு காரில் உள்ள எச்சரிக்கை விளக்குகளை ஆன் செய்ய வேண்டும்.

அதன் பின்பு தான் காரில் இருந்து இறங்கி எச்சரிக்கை முக்கோண சிக்னல்களை காரிலிருந்து எடுத்து காருக்கு முன் பகுதியிலும் பின்பகுதியிலும் சுமார் 50 மீட்டர் தள்ளி வைக்க வேண்டும். காரிலிருந்து நீங்கள் இறங்கும்போதும் காரை ஓரங்கட்டும் போதும் சாலையில் மற்ற வாகனகள் வருகிறதா என்பதை கவனித்து அவர்களுக்கு சிக்னல் செய்து உங்கள் கார் பிரச்சனையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து பின்பு பாதுகாப்பாக காரை ஓரம் கட்டி நிறுத்த வேண்டும்.

கார் ஓட்டும் 99% இப்படியாக ஒரு விஷயம் இருப்பதே தெரியாது அவர்கள் தங்கள் கார் பிரேக் டவுன் ஆனால் இந்த முக்கோண ஆசான் லைட்டை எடுத்து காரின் டயருக்கு அருகிலேயே வைத்து விடுகின்றனர் ஆனால் இவ்வளவு அருகில் வைத்தால் அதை வைப்பதற்கான பலனை இல்லாமல் போய்விடும். குறைந்தது 50 மீட்டர் அல்லது 150 அடி கணக்கிட்டு இந்த எச்சரிக்கை செய்பவர்களை வைக்கவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலையில் வாகனம் பிரேக் டவுன் ஆகி நிற்கும்போது மிக கவனமாக இருக்க வேண்டும் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு உங்கள் கார் பிரச்சனையில் இருக்கிறது என்பது தெளிவாக இதனால் விபத்து ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. முக்கோண சிக்னலை பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதை 50 மீட்டர் தொலைவில் வைத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 27, 2023, 19:00 [IST]
English summary
What is the recommended distance for placing the hazard triangle from the car
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+