போலீஸ்காரங்க பைக்கை நிப்பாட்டுறாங்களா? பயப்படாம இந்த விஷயத்தை மட்டும் பண்ணுங்க ஃபைன் போடமாட்டாங்க!

சாலையில் வாகனங்களில் செல்லும் போது போலீசார் வாகன சோதனைக்காக வாகனத்தை நிறுத்தினால் பலருக்குப் பயமும் பதற்றமும் ஏற்படுகிறது. இனி அப்படிப் பயப்படவோ பதற்றப்படவோ தேவையில்லை. போலீசார் வாகனத்தை நிறுத்தினால் என்ன செய்ய வேண்டும் என விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஒரு வாகனம் சாலையில் பயணிக்கிறது என்றால் அந்த வாகனம் கட்டாயம் சாலை விதிகளைப் பின்பற்றித் தான் பயணிக்க வேண்டும். அந்த வாகனத்தை ஓட்டுபவர்கள் சாலைகளைப் பார்த்து சாலை விதிகளை மதித்து அந்த வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டும். யாரும் கவனிக்கவில்லையே சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்குவது தவறாக இப்படியான தவறு நடந்தால் அந்த குறிப்பிட்ட வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்படும்.

இதற்காகச் சாலைகளில் டிராஃபிக் போலீசார் இருப்பார்கள். இவர்கள் சாலைகளில் விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்களைப் பிடித்து அபராதம் விதிப்பார்கள். அதே நேரம் சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் விதிமுறை மீறும் வாகனங்களை மட்டுமல்ல போலீசார் சாலையில் செல்லும் எந்த வாகனத்தை வேண்டுமானாலும் வழி மறித்து சோதனை நடந்தலாம்.

குறிப்பிட்ட வாகனத்திற்கு அனைத்து விதமான சான்றுகளும் இருக்கிறதா? இந்த வாகன ஓட்டிக்கு வாகனத்தை ஓட்ட உரிமம் இருக்கிறதா என்று எல்லாம் சோதனை செய்யலாம். இதற்காக ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இப்படியாக நாம் ரோட்டில் செல்லும் போது போலீசார் வாகனங்களை வழி மறித்து சோதனை செய்வதைப் பார்த்திருப்போம். சில நேரம் அந்த சோதனைக்கு நாமும் உட்படுத்தப்பட்டிருப்போம்.

அதனால் இனி சாலையில் போலீசார் வாகன சோதனை செய்வதைப் பார்த்தாலே பயமும் பதற்றமும் ஏற்படும். இந்த பதிவில் நாம் சாலையில் வாகன சோதனைக்காக போலீசார் உங்கள் வாகனத்தை நிறுத்தினால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எது எது எல்லாம் செய்ய போலீசாருக்கு உரிமை இருக்கிறது எதற்கு உரிமை இல்லை என்பது குறித்துக் காணலாம்.

பதற்றம் வேண்டாம்

நீங்கள் சாலையில் வாகனத்தில் செல்லும் போது போலீசார் உங்கள் வாகனத்தை நிறுத்தினால் ஏதாவது காரணத்தைச் சொல்லி அபராதம் விதிக்கப்போகிறார்கள் என நீங்கள் பயமோ பதற்றமோ அடைய வேண்டாம். நீங்கள் பொறுமையாக உங்கள் வாகனத்தை மற்ற வாகன ஓட்டிகளுக்குத் தொந்தரவில்லாமல் நிறுத்துங்கள். உங்களிடம் ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தால், நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனம் ஓட்டியிருந்தால் உங்களுக்கு போலீசார் அபராதம் எல்லாம் விதிக்கமாட்டார்கள். அதனால் அந்த சூழ்நிலையைப் பொறுமையாகவும், நிதானமாகவும் கையாளுங்கள்.

அமைதியாக நடந்து கொள்ளுங்கள்

போலீசார் உங்கள் வாகனத்தை நிறுத்தியது சோதனை செய்யத் தானே தவிர உங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக அல்ல. அதனால் நீங்கள் போலீசார் வாகனத்தை நிறுத்தியதும் பதற்றத்தில் கோபப்பட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். அது முற்றிலும் தேவையில்லாதது, மற்றும் நேரத்தை வீணடிக்கக்கூடியது. நீங்கள் வாகனத்தை நிறுத்தியதும் போலீசார் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு, அவர்கள் ஆவணங்கள் கேட்டால் அதை அவர்களிடம் காட்டிவிட்டுக் கிளம்பலாம். கோபப்பட்டு வாக்குவாதம் செய்வதால் எதுவும் நடக்கப்போவதில்லை.

அதிக பயம் வேண்டாம்!

ஒரு வேலை நீங்கள் உங்களையே அறியாமல் ஏதாவது சாலை விதிமுறையை மீறிவிட்டால் அதை மீறிய பின்பே அதை நீங்கள் உணரும் நிலையில் போலீசார் உங்கள் வானகத்தை நிறுத்த முயன்றால் அப்பொழுது தேவையில்லாமல் பதற்றமடையாதீர்கள். வாகனத்தை நிறுத்தி நடந்ததை போலீசாருக்கு விளக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் மீது தவறு இல்லை,சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்த விதிமீறல் நடந்துவிட்டதாக போலீசார் உணர்ந்தால் உங்களுக்கு அபராதம் விதிக்காமல் எச்சரிக்கையுடன் அனுப்பவும் வாய்ப்பு இருக்கிறது.

சாலை விதிகளை மதியுங்கள்!

நீங்கள் சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டியது கட்டாயம். இப்படியாக நீங்கள் செல்லும் போது போக்குவரத்து விதிகளைச் சரியாகத் தான் மதித்தீர்கள் ஆனால் ஏதோ சந்தர்ப்பத்தில் நீங்கள் விதிகளை மீறியதாக போலீசார் நினைத்தாலும் நீங்கள் என்ன நடந்தது என்பதை போலீசாருக்கு விளக்கிச் சொல்ல முயற்சி செய்யுங்கள் உங்கள் மீது தவறு இல்லை என்றால் போலீசார் உங்களுக்கு அபராதம் விதிக்கமாட்டார்கள்.

இதேநேரம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. நீங்கள் வாகன சோதனையின் போது தேவைப்பட்டால் மட்டுமே வாகனத்திலிருந்து இறங்கினால் போதும் எல்லா சோதனைகளுக்கும் வாகனத்திலிருந்து இறங்கிச் செல்ல வேண்டியவையில்லை. அதே நேரம் சோதனையின் போது உங்கள் வாகனத்தின் சாவியைப் பிடுங்கி வைத்துக்கொள்ள போலீசாருக்கு அதிகாரம் கிடையாது. அதனால் இனி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதால் பதற்றம் அடையாமல் தைரியமாக அதை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்!

More from DriveSpark

Article Published On: Friday, December 30, 2022, 17:33 [IST]
English summary
What to do when police stop your vehicle for checking
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+