ரோட்ல போகும் போது தீடீர்னு டயர் பஞ்சரானா என்ன செய்யனும் தெரியுமா? இதை மட்டும் செஞ்சிடாதீங்க...
பஞ்சரான (Tyre Puncher) வீலுடன் வாகனத்தை ஓட்டலாமா? கூடாதா? ஓட்டினால் வாகனத்திற்கு என்னென்ன பாதிப்புகள் எல்லாம் வரும்? பாதிப்புகள் வராமல் ஓட்டுவது எப்படி?
சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது கார் அல்லது பைக்கின் வீல் பஞ்சராகிவிட வாய்ப்பு இருக்கிறது. இப்படி பஞ்சாராகிவிட்டால் அந்த பஞ்சர் சரியாகும் வரை பயணத்தை தொடர முடியாது. பஞ்சரான வீலுடன் வாகனத்தை ஓட்டலாமா என்று பலருக்கு சந்தேகம் உள்ளது அதை பற்றி தான் இங்கே காணப்போகிறோம்.

எடுத்த எடுப்பிலேயே சொல்லி விடுகிறோம். பஞ்சரான வீலுடன் வாகனத்தை எக்காரணத்தைக்கொண்டும் ஓட்டக்கூடாது (Flat Tyre). சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும் போது பஞ்சாரகி விட்டால் சாலையின் ஒதுக்குப்புறமாக வாகனத்தை கொண்டு செல்ல சில தூரம் வாகனத்தை ஓட்டுவோம் அது தவிர்க்க முடியாதது. ஆனால் தொடர்ந்து சில நூறு மீட்டர்கள் வாகனத்தை ஓட்டுவது நல்லதல்ல
இப்படியாக பஞ்சரான வீலுடன் வாகனத்தை ஓட்டினால் வாகனத்தின் வீல், பிரேக், வீல் அலைன்மெண்ட், சஸ்பென்சன் மற்றும் ஸ்டியரிங் சிஸ்டம் (Puncher Damage) ஆகிய கருவிகள் நேரடியாக பாதிக்கப்படுகிறது. பஞ்சர் கடை பக்கத்தில் தான் இருக்கிறது. கொஞ்சம் ஓட்டிச்சென்றால் எந்த பிரச்சனையும் ஆகாது அப்படியே சென்று விடலாம் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த நேரத்தை மிச்சப்படுத்துவதற்காக மிகப்பெரிய செலவுகளை இழுத்து வைத்துக்கொள்ளாதீர்கள்.
சரி அப்படி என்றால் பஞ்சராகிவிட்டால் என்னதான் செய்யவேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது. முதலில் நீங்கள் பயணத்தை துவங்கும் முன்பே கவனிக்க வேண்டியது ஒரு டயர் பஞ்சராகிவிட்டால் அதற்கான ஸ்டெப்னி இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள் அதே நேரம் தற்காலிகமாக பஞ்சரை சரி செய்ய தேவையான பொருட்கள் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
டயர் பஞ்சரானதும் (Tire Puncher) காரை ஓரமாக நிறுத்தின் பஞ்சரை முடிந்தளவிற்கு நீங்களே தற்காலிகமாக சரி செய்ய முயற்சி செய்யுங்கள், அல்லது ஸ்டெப்னி டயரை மாற்றுங்கள் அதன்பின் பயணத்தை தொடருங்கள் அருகில் நீங்கள் ஏதேனும் பஞ்சர் கடையை பார்த்தால் பஞ்சர் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாகனத்திற்கான பஞ்சரை நீங்களே போட கற்றுக்கொள்வது சிறந்தது.
இன்று பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் 24 மணி நேர ரோடு அசிஸ்டென்ஸ் (Road Side Assitance) சேவையை வழங்குகிறது. அதற்கு தொடர்பு கொண்டாலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கலாம். இது போக இப்படி நடு வழியில் டயர் பஞ்சராகாமல் இருக்க வேண்டும் என்றால் அடிக்கடி டயர் பிரஷரை மானிட்டர் செய்து கொள்ளுங்கள்.
கிளம்பும் முன் டயரை செக் செய்து கொள்ளுங்கள் குறிபிட்ட கால இடைவெளியில் முன்டயரை பின்டயராகவும், பின் டயரை முன் டயராகவும் மாறிக்கொள்ளுங்கள். அளவனா லோடை ஏற்றுங்கள், சாலையில் பள்ள மேடுகளில் கவனமாக செல்லுங்கள்,


Click it and Unblock the Notifications








