கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸ் காலியாகிடும்

ஒரே காரை நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் அதில் ஏகப்பட்ட பிரச்சனை வரும். அதைப் பற்றித் தான் இங்குத் தெளிவாகக் காணலாம்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இன்று பலருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். கார் சமூகத்தில் மனிதனிற்கு ஒரு அந்தஸ்தைத் தருகிறது. இதன் காரணமாகவே பலர் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். பயன்பாடு இருக்கிறதோ இல்லையோ இன்று கார் என்பது நடுத்தர குடும்பத்தினருக்கு ஒரு அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

பலர் தனக்கென சொந்தமாக ஒரு காரை ஆசைப்பட்டு வாங்கிவிடுகின்றனர். ஆனால் அதிக போக்குவரத்து நெருக்கடி, எரிபொருள் செலவு காரை நிறுத்த இடம் இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் காரை வெகு குறைவாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இவர்கள் காரை ஷெட்டில் நிறுத்தி வைத்து விட்டு வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இப்படியாகப் பயன்படுத்துபவர்கள் கார்கள் பார்க்கிங்கில் பத்திரமாக நிறுத்தப்பட்டிருப்பதால் கார் பாதுகாப்பாக இருக்கும் எந்த பிரச்சனையும் ஏற்பாடு எனக் கருதுகின்றனர்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

ஆனால் நீண்ட நாட்களாக கார்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும் பிரச்சனை வரும். அப்படி நீண்ட நாட்களாக கார்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்துக் காணலாம் வாருங்கள்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

பேட்டரி டிஸ்சார்ஜ்

உங்கள் வாகனம் நீண்ட நேரம் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் வாகனத்தின் பேட்டரி டிஸ்சார்ஜ் ஆகக் கூடும். நீண்ட நேரம் வாகனத்தின் பேட்டரி செயல்படாமல் இருந்தால் அதன் சார்ஜ் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே தான் இருக்கும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இதுவே அவ்வப்போது காரை ஆன் செய்துவிட்டால் இப்படியாக பேட்டரி பயன்பாடு இல்லாமல் இருப்பதைத் தவிர்க்க முடியும். நீண்ட நாட்களாக பேட்டரியை பயன்படுத்தாமல் விட்டால் அது சார்ஜ் இறங்கி கடைசியில் பேட்டரியையே மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

பாழாகும் டயர்

நீண்ட நாட்களாக காரை பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் காரின் மொத்த எடையும் டயரின் அடிப்பாகத்திலேயேதான் இருக்கும். இதனால் அந்த பகுதி நாளாக நாளாக அதிகமாகச் சேதமடையத் துவங்கும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இது மட்டுமல்ல நாளாக நாளாக காரின் டயரில் உள்ள காற்றின் அளவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே இருக்கும். குறைவான காற்று இருப்பதால் டயர் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் விரைவாக டயர் சேதமாகிப் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விடும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

ஹேண்ட் பிரேக்

இப்படியாக நீண்ட நாட்களாகக் காரை ஒரே இடத்தில் நிறுத்தும் போது கார் அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடக் கூடாது என்பதற்காகப் பலர் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்துவார்கள். கார் ஹேண்ட்பிரேக்கின் சப்போர்ட்டில் நீண்ட நேரம் இருந்தால் இந்த ஹேண்ட் பிரேக்கும் சேதமடையும். இதனால் பிரேக் ஷூ சேதமாகிவிடும். அப்படி நடந்தால் பின்னர் இந்த காரை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்று தான் சரி செய்ய வேண்டிய நிலை வரும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

ஹீட்டிங் பிரச்சனை

கார்களில் இன்ஜின் வெப்பத்தைத் தணிக்க ரேடியேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் காரை நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் காரில் தூசு குப்பைகள் சேரும் இதனால் ரேடியேட்டர் பாதிக்கப்பட்டு அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இப்படி நடந்தால் அதன் பின் கார எடுக்கும் போது ரேடியட்டர் தனது முழு செயல்பாட்டைச் செய்ய

முடியாத நிலை ஏற்படும். இதனால் ரேடியேட்டர் சோக் ஆகி இன்ஜின் விரைவாகச் சூடாகும் நிலை ஏற்படும். இதனால் இன்ஜினின் வாழ்நாள் குறையும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

துருப் பிடிக்கும்

ஒரு கார் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் அந்த கார் துருப்பிடித்துப் போக அதிகமாக வாய்ப்பு இருக்கிறது அந்த பகுதியில் வீசும் காற்றில் மண் எல்லாம் பறந்து வந்து இந்த கார் முழுவதும் படியும்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

பின்னர் மழை பெய்தாலும் ஒரே இடத்தில் அதிக நேரம் ஈரம் இருக்கும். இதனால் கார் துருப் பிடிக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. மண்ணும் தண்ணீரும் அதிகமாக இருக்கும் இடத்தில் துருப் பிடிப்பது சாதாரண ஒரு விஷயம் தானே இதுவும் நடக்கலாம்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

இது எல்லாம் காரை பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் அதனால் நீங்கள் அவ்வப்போது காரை எடுத்து சிறிது சிறிதாகவாவது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கார சும்மா ஒரே இடத்தில நிறுத்துனா கூட இவ்வளவு பிரச்சனை வருமா ? உங்க பர்ஸே காலியாகிடும்

அப்படியான தேவை இருந்தால் மட்டும் சொந்தமாக கார் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். இல்லை என்றால் உங்களுக்குச் சொந்தமாக கார் தேவையில்லை தேவைப்படும் போது வாடகை காரை பயன்படுத்திக்கொள்ளவும்.

More from DriveSpark

Article Published On: Monday, October 24, 2022, 14:16 [IST]
English summary
What will happen if you park your car for a long time without driving it
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+