பழைய கார்ல கியர் மாத்தும் போது தெரியாம கூட இதை பண்ணீடாதீங்க! புது கார்ல இதை பண்ணா எந்த பிரச்சனையும் இல்ல!

நீங்கள் காரில் வேகமாகச் செல்லும் போது திடீரென காரின் ரிவர்ஸ் கியரை போட்டால் என்னவாகும்? என்றாவது இப்படி யோசித்திருக்கிறீர்களா? பலர் கார் விபத்தில் சிக்கும் எனச் சொல்லுவார்கள். ஆனால் இது முழுவதும் உண்மையல்ல. இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நீங்கள் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். வேகத்தை மெல்ல மெல்ல கூட்டி படிப்படியாக கியரை உயர்த்திக்கொண்டே வருவீர்கள். இறுதியில் டாப் கியரில் கார் வேகமாக நெடுஞ்சாலையில் சீறி பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீங்கள் காரின் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள்?

reverse gear at high speed

காரின் ஆக்ஸிலேட்டரை அழுத்தாமல் கிளட்சை மிதித்து கியரை டவுன் செய்ய வேண்டும் என்று கார் ஓட்ட தெரிந்த எல்லோருக்குமே தெரியும். ஆனால் நீங்கள் கியரை டவுன் செய்யும் போது தெரியாமல் ரிவர்ஸ் கியர் போட்டால் என்னவாகும்? பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும்.

பலர் இதற்கான விடையாக காரின் காரின் பின் வீல் லாக் ஆகி கார் விபத்தில் சிக்கிவிடும். காரின், கியர் பாக்ஸ் பாதிக்கப்படும், கார் ஸ்கிட் ஆகி ரோட்டில் அப்செட் ஆகக் கூட வாய்ப்பு இருக்கிறது. இப்படி எல்லாம் கூறுவார்கள். இது ஓரளவிற்கு உண்மை தான் ஆனால் நவீன கார்களில் இப்படி நடக்க வாய்ப்பில்லை.

reverse gear at high speed

தற்போது வரும் நவீன கார்களில் ஸ்லிப்பர் கிளட்ச் எனப்படும் அம்சம் வழங்கப்படும். இது காரில் மெயின் சாஃப்ட்டின் வேகமும் கார் இன்ஜினின் வேகமும் மாறுபட்டால் உடனடியாக கிளட்ச் ஸ்லிப் ஆகி கார் வீல் லாக் ஆகுவதையும், கார் விபத்தில் சிக்குவதையும் தவித்துவிடும். இதனால் தான் நவீன கார்களில் ஸ்லிப்பர் கிளட்ச் என்பதை ஒரு பாதுகாப்பு அம்சமாக குறிப்பிடுகின்றனர்.

ஆனால் ஸ்லிப்பர் கிளட்ச் இல்லாத கார்களில் வேகமாகச் செல்லும் போது ரிவர்ஸ் கியரை மாற்றினால் கார் விபத்தில் சிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கார் பின் வீல் லாக் ஆகிவிடும். கார் ஸ்கிட் ஆகும். காரின் கியர் பாக்ஸ் சேதமடையும். ஆனால் இன்று பெரும்பாலான கார்களில் இந்த ஸ்லிப்பர் கிளட்ச் இருக்கிறது.

reverse gear at high speed

ஸ்லிப்பர் கிளட்ச் இல்லை என்றாலும் சில கார்களில் கார் முன்னோக்கி நகரும் போது ரிவர்ஸ் கியர் போட்டாலும் விழாதவாறு லாக் செய்திருப்பார்கள். இதனால் கார் வேகமாகச் செல்லும் போது ரிவர்ஸ் கியர் போடவே முடியாது. இதனால் ஏற்படும் விபத்தை முற்றிலுமாக இந்த வசதி கொண்ட கார்களில் தவிர்க்க முடியும்.

ஆட்டோமெட்டிக் கார்களில் கதையே வேறு. இந்த கார்களில் கியர் சிஸ்டம் முழுவதும் எலெக்ட்ரானிக் முறையில் கண்ட்ரோல் செய்யப்படுகிறது. இதில் நீங்கள் காரை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கும் போது காரை ரிவர்ஸ் கியரில் போட்டால் உங்கள் காரின் கியர் போசிஷன் ரிவர்ஸ் கியரில் இருக்கும். ஆனால் கியர் என்கேஜ் ஆகாது. கார் முற்றிலுமாக நிற்கும் வரை காத்திருக்கும்.

கார் முற்றிலுமாக நின்ற பின்பு தான் ரிவர்ஸ் கியர் என்கேஜ் ஆகும். இதனால் ஆட்டோமெட்டிக் கியர் வசதி கொண்ட கார்களிலும் இது போன்று காரை வேகமாக செல்லும் போதும் ரிவர்ஸ் கியருக்கு மாற்ற முடியாது. இதனால் ஆட்டோமெட்டிக் கார்கள் எந்த விதமான சேதாரத்தையும் சந்திக்காது. நவீன கார்களில் இந்த பிரச்சனைகள் எல்லாம் தீர்க்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோமொபைல் தொழிற்நுட்பங்கள் எல்லாம் பாதுகாப்பு விஷயத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்து வருகின்றன. பழைய கார்களில் இது மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்பட்டது. நவீன கார்களில் இந்த பிரச்சனையே இருக்காது. எதிர்காலத்தில் இப்படி ஒரு பிரச்சனை இருந்ததே நமக்கு மறந்து போய்விடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 6, 2023, 16:00 [IST]
English summary
What will happen when you engage reverse gear while riding your car in high speed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X