எந்த கலரில் கார் வாங்குவது சிறந்தது?

By Saravana
White Car
கார் வாங்கும்போது கலரை தேர்வு செய்வது மிக முக்கியமான விஷயம். ராசி, பராமரிப்புக்கு எளிது என அனைத்து விஷயங்களையும் பார்க்கும் அதேவேளையில் கார் வாங்கும்போது சில பாதுகாப்பு மற்றும் இதர விஷயங்களையும் பார்க்க வேண்டியது மிக அவசியம்.

கார் வாங்கும்போது வெள்ளை நிறத்தை தேர்வு செய்து வாங்குவதில் பல அனுகூலங்கள் இருக்கின்றன. கோடைகாலங்களில் வெள்ளை நிற கார்களில் வெயில் ஓரளவு எதிரொலித்து விடும் என்பதால் ஏசி போட்டால் குளிர்ச்சி நன்றாக இருக்கும்.

வெள்ளை நிற கார்களில் இன்னொரு அனுகூலமும் இருக்கிறது. இரவுப் பயணங்கள் செல்லும்போது வெள்ளை நிற கார்கள் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். குறிப்பாக, சாலை ஓரத்தில் நிறுத்தினாலும் கூட தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிற கார்கள் நிற்பது நன்றாக தெரியும்.

இதுதவிர, பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட்டிலும் வெள்ளை நிற கார்களுக்கு கூடுதல் மதிப்பு இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரமும் தெரிவிக்கிறது. வெள்ளை நிற கார்களை பராமரிப்பது மட்டுமே கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொள்வது அவசியம்.

கருப்பு நிற கார்களை தவிர்ப்பது நலம். சிலருக்கு கருப்பு நிறத்தை விரும்பி வாங்குகின்றனர். அதில் தவறில்லை என்றாலும், வெள்ளை நிறம் மற்றும் வெளிர் நிற கார்களில் இருக்கும் இந்த பாதுகாப்பு வசதிகளை கருத்தில் கொள்வது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Monday, February 18, 2013, 14:59 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+