எப்படி பெட்ரோல் போடுவது சிறந்தது? லிட்டர் கணக்கிலா அல்லது ரூபாய் கணக்கிலா?
பெரும்பாலான மக்கள் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் போது இவ்வளவு ரூபாய்க்கு என பெட்ரோல் போடுகிறார்கள். உண்மையில் ரூபாய் கணக்கில் பெட்ரோல் போடுவது சிறந்ததா? அல்லது லிட்டர் கணக்கில் பெட்ரோல் போடுவது சிறந்ததா? முழு தகவலைக் காணலாம் வாருங்கள்.

இன்று பெட்ரோல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று வாகனம் இல்லாத மனிதர்களே எண்ணிக்கையில் மிகக் குறைவுதான் இந்த பெட்ரோல் விலை இன்று நேரடியாக ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்கிறது என்றே சொல்லி விடலாம். இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100ஐ தாண்டி விற்பனையாகிறது. இது பலருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் விலையேற்றம் குறித்த செய்தி வரும் போது எல்லாம் சிலர் காமெடியாக என்னதான் பெட்ரோல் விலை ஏறினாலும், நான் தினமும் ரூ100க்கு தான் பெட்ரோல் போடுகிறேன் எனச் சிலர் காமெடியாக பதிவிடுவதைப் பார்க்க முடியும். இப்படியாக வரும் பதிவுகளைப் பார்த்து சிரித்து விட்டுக் கடந்து போயிருப்போம். ஆனால் இந்த பதிவுகள் நமக்கு சில விஷயங்களை உணர்த்துகின்றன. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு இவ்வளவு என கணக்கிடப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் இவ்வளவு பணத்திற்கு பெட்ரோல் போட வேண்டும் என்றுதான் பெட்ரோல் பங்கிற்குப் போய் கேட்கிறார்கள்.

இன்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பலர் இத்தனை லிட்டர் போடுங்கள் எனக் கேட்காமல் இத்தனை ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என்றே கேட்பது பழக்கமாகிவிட்டது. உண்மையில் உங்கள் வாகனத்திற்கு லிட்டர் கணக்கில் பெட்ரோல் போடுவது சிறந்ததா? அல்லது ரூபாய் கணக்கில் பெட்ரோல் போடுவது சிறந்ததா? என்றுதான் பார்க்கப்போகிறோம். எப்படிப் போட்டாலும் ஒரே அளவு தானே இருக்கப்போகிறது இதில் நல்லது எது கெட்டது என எப்படிச் சொல்வது என நீங்கள் கேட்கலாம் அதற்கும் காரணங்கள் இருக்கிறது.

லிட்டர் கணக்கில் போட வேண்டுமா? ரூபாய் கணக்கில் போட வேண்டுமா எனக் கேட்டால் இரண்டும் இல்லை நீங்கள் டேங்க் கணக்கில் தான் பெட்ரோல் போட வேண்டும். அது தான் வாகனத்திற்குச் சிறந்தது. பொதுவாக டேங்க்கின் முழு கொள்ளளவு பிடிக்கும் அளவிற்கு எப்பொழுதும் பெட்ரோலை நிரப்பினால் உங்கள் இன்ஜின் உட்பட வாகனத்தின் செயல்பாட்டிற்கே சிறந்தது. அது தான் உண்மையில் லாபம் கூட.

இது எப்படி லாபம் என்றால் நீங்கள் தினமும் உங்கள் பைக்கிற்கு ரூ100க்கு பெட்ரோல் போடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் பைக் 15 லிட்டர் பெட்ரோலை பிடிக்கும் என வைத்துக்கொள்வோம். இன்றைய பெட்ரோல் விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் வாகனம் ரூ1500 மதிப்பிலான பெட்ரோலை பிடிக்கும். நீங்கள் மாதம் பெட்ரோலுக்காக தினம் ரூ100 விதம் மாதம் ரூ3000 செலவு செய்கிறீர்கள்.

இப்பொழுது தினம் ரூ100 பெட்ரோல் போடும் போது நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து பெட்ரோல் ஸ்டேஷனிற்கு செல்ல நீங்கள் 1 கி.மீ பயணிக்க வேண்டும் என்றால் தினமும் போய் வர 2 கி.மீ 15 நாளுக்கு 30 கி.மீ வரை எஸ்ட்ராவாக தான் பயணிக்க வேண்டும். உங்கள் வாகனம் 60 கி.மீ மைலேஜ் கொடுத்தாலும் ஒவ்வொரு 15 நாளுக்கும் நீங்கள் 500 மில்லி பெட்ரோலை பெட்ரோல் ஸ்டேஷனிற்கு சென்று வருவதற்காகப் பயன்படுத்துவீர்கள். அப்படிப்பார்த்தால் ஒரு மாதத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இதற்காகச் செலவாகிறது.

ஒரு வேலை நீங்கள் மாத துவக்கத்தில் முழு டேங்க் ரூ1500க்கு பெட்ரோலை நிரப்பி விட்டால் அடுத்த 15 நாட்கள் நீங்கள் பெட்ரோல் ஸ்டேஷன் பக்கம் செல்ல வேண்டியது இல்லை. இதனால் மாதம் 2 முறை மட்டுமே பெட்ரோல் ஸ்டேஷன் செல்லலாம். இதனால் நீங்கள் மாதம் 900 மில்லி பெட்ரோல் வரை சேமிக்க முடியும். இன்றைய பெட்ரோல் விலையை ஒப்பிட்டால் ரூ90 மதிப்பிலான பெட்ரோல் சேமிப்பாகும். இது நல்ல மைலேஜ் தரும் பைக்கிற்கான கணக்கு தான் இதுவே காராக இருந்தால் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் எவ்வளவு வீணாகும் என்று.

சிலர் தாங்கள் அலுவலகம் அல்லது மற்ற பணிக்குச் செல்லும் வழியில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷனில்தானே பெட்ரோல் பிடிக்கிறேன். இதற்காகத் தான் அதிகமாகச் செலவு செய்யவில்லை எனச் சொல்லலாம். ஆனால் அப்படியாக இருந்தாலும் மொத்தமாக பெட்ரோல் நிரப்புவது தான் சிறந்தது. பொதுவாக பெட்ரோல் ஸ்டேஷன் எப்பொழுதும் கூட்டம் இல்லாமல் இருப்பதில்லை. பல நேரங்களில் அதிகமாகக் கூட்டத்தில் நின்று நாம் பெட்ரோல் போட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம்.

இப்பொழுது உங்களுக்கு அவசர வேலை ஏற்பட்டால் அன்று பெட்ரோல் ஸ்டேஷனில் கூட்டம் இருந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். இதனால் வாகனத்தில் முழு டேங்க் பெட்ரோல் போட்டால் நீங்கள் வேலையில்லாமல் இருக்கும் நேரத்தில் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம். இதனால் தேவையில்லாத நேர விரயத்தைத் தவிர்க்க முடியும். அதனால் சிறந்த வழி என்பது லிட்டர் கணக்கிலோ அல்லது ரூபாய் கணக்கிலோ பெட்ரோல் போடுவது கூடாது டேங்க் கொள்ளளவு கணக்கில்தான் பெட்ரோல் போடுவது சிறந்தது.

இதுமட்டுமல்ல சிலர் குறிப்பிட்ட ஒரே நிறுத்தின் பெட்ரோலை மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவும் சிறந்தது தான். ஒரே நிறுவனத்தின் பெட்ரோலுக்கு உங்கள் வாகனம் செட் ஆகிவிட்டால் அதையே தொடர்ந்து செய்யலாம். இதனால் இன்ஜினின் ஆயுள் கூட அதிகமாகும். அதே போல வாகனத்தின் பெட்ரோல் முழுவதும் காலியாகும் வரை பெட்ரோல் போடாமலும் இருக்க வேண்டாம். வாகனம் ரிசர்வ் அல்லது பெட்ரோல் குறைவாக இருக்கிறது என நீங்கள் உணர்ந்தால் உடனடியாக டேங்க்கை நிரப்பிக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








