இதை யாருமே சொல்ல உங்ககிட்ட மாட்டாங்க! கார் பம்பர்கள் ஏன் பிளாஸ்டிக்கில் இருக்கிறது தெரியுமா?

கார்களில் எல்லாம் நீங்கள் பம்பரை பார்த்திருப்பீர்கள் கார்களின் முன் பக்கமும் பின்பக்கமும் அது பொருத்தப்பட்டிருக்கும். இது கார்களின் பாதுகாப்புக்காக வழங்கப்படும் ஒரு கருவியாகும். இந்த பம்பர் எல்லாம் பெரும்பாலும் பிளாஸ்டிக் ஆகவே இருக்கிறது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி தான் இங்கு விரிவாக காணப்போகிறோம்.

1901 ஆம் ஆண்டு தான் உலகிலேயே முதல் முதலாக கார்களுக்கு பம்பர் என்ற ஒரு விஷயம் வழங்கப்பட்டது. முதன்முதலாக பம்பரை வழங்கும்போது அதை மெட்டல் மூலம் தான் உருவாக்கினார்கள். கார்களின் முன்பக்கமும் பெருக்கமும் கார் விபத்தில் சிக்கினால் சேதாரத்தை தவிர்ப்பதற்காக இந்த பம்பர் வழங்கப்பட்டது.

car bumper plastic

கார்களில் பம்பர் மட்டும் இல்லை என்றால் கார் சின்னதாக ஒரு இடத்தில் சென்று மோதினால் கூட அதன் ஹெட் லைட், டெயில்லைட், எக்ஸாஸ்ட் மற்றும் கூலிங் சிஸ்டம் எல்லாம் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு விடும். இந்த பம்பர் இருந்தால் சின்னதாக ஏற்படும் மோதல்களில் வரும் இம்பேக்ட்டை இந்த பம்பரை எடுத்துக் கொள்ளும் இதனால் மற்ற பாகங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். இந்த காரணத்திற்காகவே கார்களில் பொருத்தப்படுகிறது.

பழைய கார்களில் நீங்கள் பார்க்கும்போது அதில் பம்பர்கள் எல்லாம் மெட்டல் ஆக வழங்கியிருப்பார்கள். ஆனால் இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான கார்களில் பம்பர்கள் பிளாஸ்டிக் மூலப் பொருட்களை வைத்து தான் தயாரிக்கப்படுகிறது. இன்று கமர்சியல் வாகனங்கள் உள்ளிட்ட வெகு சில வாகனங்களில் மட்டுமே பம்பர்கள் மெட்டல் பாகங்களால் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் கார்களில் பிளாஸ்டிக் தான் பயன்படுத்தப்படுகிறது இதற்கு என்ன காரணம் தெரியுமா?

car bumper plastic

குறைவான விலை: ஒரு காரின் விலை என்பது தயாரிக்க ஆகும் செலவை கணக்கிட்டு தான் முடிவு செய்யப்படுகிறது. இப்படியாக பம்பரை மெட்டலில் தயாரிக்க அதிக செலவாகிறது. அதே பிளாஸ்டிக்கில் தயாரித்தால் குறைவான செலவாகிறது. இதனால் கார்களின் விலையை ஓரளவுக்கு குறைக்க முடிகிறது. பிளாஸ்டிக் மூலப் பொருட்களை வைத்து பம்பரை தயாரிக்க ஆகும் செலவும் மெட்டல் மூலப் பொருட்களை வைத்து பம்பர் தயாரிக்கவும் செலவுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் தான் லாபகரமாக இருக்கிறது.

வளைந்து கொடுக்கும் தன்மை: மெட்டலை விட பிளாஸ்டிக் தான் அதிக வளைந்து கொடுக்கும் தன்மையுடன் இருக்கிறது. இதனால் சின்ன மோதல்கள் வரும் போது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பம்பர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் உழைக்கிறது. மெட்டலால் செய்யப்பட்ட பம்பர்கள் சேதம் ஆகின்றன. மேலும் மெட்டல் பம்பர்கள் அதிகமாக சேதமாகும் போது அது காரின் மெயின் ஃபிரேமையும் பாதிக்கிறது. மெட்டலை ஒப்பிடும்போது பிளாஸ்டிக் பம்பர் தான் அதிகமான மோதலை தாங்குகிறது.

car bumper plastic

குறைவான எடை: பிளாஸ்டிக் பம்பர்கள் மெட்டல் பம்பரை விட குறைவான எடையில் இருக்கின்றன. இதனால் காரின் எடை குறைகிறது. ஒரு காரின் எடை குறைய குறைய அதன் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் மைலேஜ் அதிகமாக இருக்கும் இதன் காரணமாகவும் கார் தயாரிப்பாளர்கள் மெட்டல் பம்பை தவிர்த்து விட்டு பிளாஸ்டிக் பம்பருக்கு மாறி விட்டனர்.

ரிப்பேர் செய்வது எளிது: பிளாஸ்டிக் பம்பர்களை சுலபமாக ரிப்பேர் செய்துவிடலாம் ஆனால் மெட்டல் பம்பர்களை ரிப்பேர் செய்வது கடினம். பிளாஸ்டிக் பம்பர் சுலபமாக டென்ட் ஆகாது. ஆனால் மெட்டல் பம்பர்கள் சுலபமாக டென்ட் ஆகிவிடும். அந்த டென்டை போக்குவதற்கான செலவும் ஜாஸ்தியாக இருக்கும். இதுவும் கார் தயாரிப்பாளர்கள் பிளாஸ்டிக் பம்ப் பெருக்கு மாறியதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

பாதுகாப்பு: பிளாஸ்டிக் பம்பர் ஒரு காரின் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. இந்த மாதிரியான நம்பர்கள் கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு ஏற்படும் பாதிப்பு அதன் அளவுகளை குறைக்கிறது. இதனால் காரில் உள்ள டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் லேசான மோதல்களில் காரில் ஏதாவது மனிதர்கள் சிக்கினால் அவர்களுக்கு மெட்டல் பம்பர் இருக்கும் போது அதிகமான பாதிப்பு ஏற்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது பெரும்பாலும் கார்களில் மட்டுமே பிளாஸ்டிக் பம்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் லாரிகள் போன்ற கனரக வாகனங்களில் உள்ள பம்பர்கள் இரும்புகளாகவே இன்னும் இருக்கிறது. இதற்கு காரணம் கனரக வாகனங்கள் லேசான மோதல் என்றாலும் அதன் இம்பேக்ட் அதிகமாக இருக்கும் என்பதால் அதை தாங்க பிளாஸ்டிக் பம்பர்களால் முடியாது. இதற்கு பதிலாக தான் மெட்டல் பம்பர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 29, 2023, 19:03 [IST]
English summary
Why are car bumpers exclusively plastic know the reason behind this
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X