கார் பானட்களுக்கு மட்டும் ஏன் 2 லாக் இருக்கிறது தெரியுமா? எல்லாம் உங்க உசுர காப்பாத்த தான்!
இன்று நாம் கார் பானட்களை திறக்க வேண்டும் என்றால் முதலில் டிரைவர் சீட் அருகே உள்ள லாக்கை எடுக்க வேண்டும், பின்னர் வெளியே வந்து பானட்டிற்கு அடியில் விரலை விட்டு இரண்டாவது லாக்கை எடுக்க வேண்டும். கார் பானட்டிற்கு மட்டும் ஏன் இரண்டு லாக் இருக்கிறது தெரியுமா? இதைப் பற்றித் தான் இங்கே விரிவாகக் காணப்போகிறோம்.
ஒரு காருக்கு பானட் என்பது மிகவும் என்பது ஒரு பாதுகாப்பு கவசம் போன்றது. இன்று இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்களில் காரின் முன்பக்கம் தான் இன்ஜின் இருக்கிறது. வெகு சில கார்களில் மட்டுமே காரின் அடி பகுதி அல்லது பின்பகுதியில் இன்ஜின் பொருத்தப்படுகிறது. காரின் முன்பக்கம் இன்ஜினை பொருத்த முக்கியமான கார் விபத்தில் சிக்கினாலும், காருக்குள் இருப்பவர்களுக்குச் சேதாரம் குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படியாக வடிவமைத்துள்ளனர்.

இந்த இன்ஜினை பாதுகாக்க இருக்கும் கவசம் தான் பானட்கள் கார் தயாரிக்கப்பட்ட ஆரம்பகாலட்டத்தில் காரின் பானட்டை திறக்க வேண்டும் என்றால் காரிலிருந்து இறக்கி பானட்டிற்கு கீழ் அல்லது சைடு பகுதியில் உள்ள லாக்கை பயன்படுத்தித் தான் திறக்க வேண்டும். அன்று அந்த ஒரு லாக் தான் இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் கார்களுக்கு இரண்டு லாக்குகள் கொடுக்கப்படுகின்றன. இதற்குப் பின்னால் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.
காரின் வெளிப்பகுதியில் மட்டும் பானட்டிற்கு லாக் வைத்தால் பலர் காரை பொது இடத்தில் நிறுத்திவிட்டு நீண்ட நேரம் வெளியில் செல்லும்போதோ அல்லது காரை பொதுவான ஷெட்டில் நிறுத்தும்போதோ சில சமூக விரோதிகள் இந்த லாக்கை பயன்படுத்தி பானட்டை திறந்து காரில் உள்ள இன்ஜின் உட்பட காரின் உதிரிப்பாகங்களைக் கழட்டித் திருடிச் சென்று விடும் அதிகமாக நடந்தது. இதனால் காரின் வெளியே அதன் லாக்கை திறக்கும் ஆப்ஷன் வைப்பது ஆபத்தாக இருந்தது.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண கார் தயாரிப்பு நிறுவனங்கள் யோசித்த போது காரின் உள்ளே இந்த லாக்கை திறக்கும் ஆப்ஷனை வழங்கலாம் என யோசித்தனர். ஆனால் அப்படி வழங்கினார். கார் வேகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது டிரைவர் தெரியாமல் இந்த லாக்கை ஓப்பன் செய்யும் பட்டனைப் பயன்படுத்திவிட்டால் கார் ஓடும் போது, பானட் திறந்து காற்றில் தூக்கிப் பறக்கும். இதனால் பெரும் விபத்து நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால் உள்ளேயும் வழங்க முடியாது.
இதனால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணவே காரின் பானட்டிற்கு மட்டும் இரண்டு விதமான லாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் லாக் காரின் உள்ளே டிரைவர் சீட்டின் அருகே வழங்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் டிரைவர் சீட்டிற்குக் கீழே இந்த லாக் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதைத் திறந்தால் மட்டும் போதாது, பின்னர் கீழே இறங்கி பாட்னட்டிற்கு கீழ் அல்லது பக்கவாட்டு பகுதியில் ஒரு லாக் இருக்கும். இந்த இரண்டு லாக்கும் திறந்தால் மட்டுமே காரின் பானட் திறக்கும்.
இதன் காரணமாகவே காரின் பானட்களுக்கு மட்டும் இரண்டு லாக்குகள் வழங்கப்பட்டுள்ளன. காரின் பூட் கதவுகளுக்கும் சில கார்களில் இரண்டு லாக்குகள் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இது அனைத்து கார்களிலும் இருக்காது. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமான லாக் வசதி இருக்கிறது. ஆனால் பானட்டை பொருத்தவரை மட்டும் தற்போது வரும் அனைத்து கார்களிலும் இரண்டு விதமான லாக்குகள் வழங்கப்படுகின்றன.
இந்த வசதி காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காகவும், கார் பார்க் செய்யப்பட்டிருக்கும் போது பானட்டின் உள்ள இருக்கும் கருவிகளின் பாதுகாப்பிற்காகவும் தான் இது வழங்கப்படுகிறது. இந்த தகவல் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








