டீசல் இன்ஜினில் ஏன் ஸ்பார்க் பிளக் கிடையாது தெரியுமா? பலருக்கு தெரியாத ரகசியம் இது!
இன்று பெரும்பாலும் வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்கள் தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் இன்று அதிகமாக பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்தாலும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாகனங்களில் எண்ணிக்கை பார்க்கும்போது கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளன. இந்தப் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் வாகனங்களுக்கு உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அதை விரிவாக காணலாம் வாருங்கள்.
பெட்ரோல் இன்ஜினாக இருந்தாலும் சரி டீசல் இன்ஜினாக இருந்தாலும் சரி அதை கம்பஷன் இன்ஜின் என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இந்த இரண்டிற்கும் பொதுவாக இன்டர்னல் கம்பஷன் இன்ஜின் என்ற பெயரில் அறியப்படுகிறது. அதாவது பெட்ரோல் மற்றும் காற்று ஒன்றாக சேர்ந்து எரிவதன் மூலம் கிடைக்கும் சக்தியை வைத்து இயங்கும் இன்ஜின் கம்பஷன் இன்ஜின் ஆகும். இதில் கெமிக்கல் சக்தி, தெர்மல் சக்தியாக மாறி அது மெக்கானிக்கல் சக்தியாக மாறுகிறது.

இப்படி இருக்கும் போது இந்த இரு இன்ஜின்களுக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. பெட்ரோல் இன்ஜினில் மட்டுமே ஸ்பார்க்பிளக் என்ற கருவி பயன்படுத்தப்படும். டீசல் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் என்ற கருவி இருக்காது. டீசல் இன்ஜின் உள்ளே டீசலும் காற்றும் ஸ்பார்க் பிளக் இல்லாமலேயே எரிகிறது. பெட்ரோல் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் இருந்தால் மட்டுமே பெட்ரோலும் காற்றும் சேர்ந்து எறிய முடியும். டீசல் இன்ஜினில் மட்டும் ஏன் ஸ்பார்க்பிளக் தேவையில்லை?
இதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் நாம் ஸ்பார்க் பிளக் என்றால் என்ன என தெரிந்து கொள்ள வேண்டும். பெட்ரோலையும் காற்றையும் சேர்த்து எரிக்க எலெக்ட்ரிக்கலாக ஸ்பார்க்கை உருவாக்கும் கருவி தான் ஸ்பார்க் பிளக். ஆனால் டீசல் இன்ஜினின் வடிவமைப்பில் இந்த ஸ்பார்க் பிளக் என்பது தேவையில்லை. டீசல் என்ற எரிபொருள் காற்றுடன் சேர்ந்து அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் போது தானாக எரிகிறது.

டீசல் எரிய வேண்டும் என்றால் அதிக வெப்பம் இருந்தாலே போதுமானதாக இருக்கிறது. டீசலும் காற்றும் சேர்ந்து சிலிண்டருக்குள் சென்று அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் போது அந்த இடத்தில் இருக்கும் காற்று அதிக வெப்பம் ஆகிறது. இந்த வெப்பத்தில் டீசல் இருக்கிறது இதனால் ஸ்பார்க் பிளக் துணை இல்லாமலேயே டீசல் இன்ஜினால் செயல்பட முடிகிறது. இதற்குப் பெயர் செல்ஃப் இக்னேஷியன் என அழைக்கிறார்கள்.
பெட்ரோலையும், டீசலையும் ஒப்பிடும்போது பெட்ரோல் என்பது எடை குறைவான எரிபொருளாக இருக்கிறது. இது எளிதாக காற்றில் கரைந்து விடும் தன்மையாகவும் அதே நேரம் எளிதாக தீப்பற்றி விடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆனால் டீசல் அப்படி அல்ல அது அதிக அடர்த்தியான எரிபொருளாக இருக்கிறது. இது சுலபமாக தீப்பிடிக்காது இதற்கு சுற்றுவட்டாரத்தில் அதிகமான வெப்பம் தேவைப்படுகிறது.

இதன் காரணமாகவே பெட்ரோல் இன்ஜினில் ஸ்பார்க் பிளக் என்ற கருவியின் தேவை இருக்கிறது. அதே நேரம் டீசல் இன்ஜினில் அது தேவையில்லை. பலருக்கும் இப்படியான விஷயம் தெரியாது. இன்றளவும் ஆட்டோமொபைல் குறித்து பெரிய அளவில் புரிதல் இல்லாத பலர் ஒரே இன்ஜினில் தான் டீசலையும் ஊற்றுகிறார்கள் பெட்ரோலியும் ஊற்றுகிறார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இது முற்றிலும் தவறானது.
டீசல் என்பதும் பெட்ரோல் என்பதும் அந்த இன்ஜினில் திறனிற்காகவே வேறு வேறு விதமாக வழங்கப்படுகிறது. டீசல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் அதிக எடைகளை சுமந்து செல்லும் கனரக வாகனங்களாக பெரும்பாலும் இருக்கும். பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாகனங்கள் அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனமாக இருக்கும். இதனால் தான் பெரும்பாலும் கார்களில் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. கனரக வாகனங்களில் டீசல் இன்ஜின் மட்டுமே பொருத்தப்படுகிறது.
இன்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜின் தயாரிப்பை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு நாடும் தற்போது மாசு கட்டுப்பாட்டு குறித்து பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து மாசுவை கட்டுப்படுத்த இன்ஜின் தயாரிப்பில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவதால் டீசல் இன்ஜின்கள் அதற்கு ஏற்றார் போல் தயாரிக்க அதிக பொருட்செலவு ஆகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டீசல் இன்ஜினுக்கான முக்கியத்துவத்தை குறைத்து வருகின்றன
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு காலத்தில் இன்ஜினை விட டீசல் இன்ஜின் வாகனங்களை தேர்வு செய்வது தான் மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். இதற்கு டீசல் விலை குறைவாக இருந்தது முக்கிய காரணமாக இருந்தது. மேலும் டீசல் இன்ஜின் கொண்ட வாகனத்தை பயன்படுத்துவது மக்களுக்கு சுலபமாக இருந்ததன் காரணமாக இதை வாங்கினார்கள். ஆனால் இன்று டீசல் இன்ஜின் வாகனங்கள் என்பது வெகுவாக குறைந்து விட்டது.


Click it and Unblock the Notifications









