டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் மிகவும் அவசியமாகிறது. இன்டர்கூலர் இல்லை என்றால் இன்ஜின் விரைவாக பழுதாகிவிடும் என்று உங்களுக்கு தெரியுமா? டர்போ சார்ஜ் என்றால் என்ன? அதனால் வாகனத்திற்கு என்ன பயன்

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் மிகவும் அவசியமாகிறது. இன்டர்கூலர் இல்லை என்றால் இன்ஜின் விரைவாக பழுதாகிவிடும் என்று உங்களுக்கு தெரியுமா? டர்போ சார்ஜ் என்றால் என்ன? அதனால் வாகனத்திற்கு என்ன பயன்? அதற்கும் இன்டர்கூலருக்கும் என்ன தொடர்பு? இன்டர்கூலர் இல்லை என்றால் டர்போ சார்ஜ் இன்ஜினில் என்ன நடக்கும்? வாருங்கள் பார்க்கலாம்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

உலகில் அதிகமாக இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்தான் ஆட்டோமொபைல் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது. இது எரிபொருளை தனக்குள் எடுத்து அதன் மூலம் ஏற்படும் திறனை கொண்டு இயங்குகிறது. அதாவது எரிபொருளை எரித்து அதன் மூலம் ஏற்படும் திறனில் பிஸ்டன் கீழ் நோக்கி நகர்ந்து கிராங் சாஃப்டில் சுழற்ச்சியை ஏற்படுத்தி அதை வீலுக்கு கொண்டு செல்கிறது. இவ்வாறுதான் வாகனங்கள் இயங்குகின்றன.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

இதில் இன்டர்னல் கம்பஷன் இன்ஜினில் எரிபொருள் எரியும் போது வெப்பமும் வெளியாகும். இது சாதாரண இன்ஜின்களில் எக்ஸாட் வழியாக வெளியாகும் புகையிலும் வெளிப்புற சூழலில் உள்ள வெப்ப நிலையிலும் இன்ஜினிற்குள் ஏற்படும் வெப்பம் தானாக குறைந்து விடும்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

இதற்கிடையில் கார்களில் எரிபொருள் எரியும் திறனை அதிகரித்து இன்ஜினை அதிகமாக வேலை செய்ய தூண்டுவதற்கு ஏற்ற மாதிரியான இன்ஜின் டர்போ சார்ஜ் இன்ஜின் என கூறுவார்கள். இது இன்ஜினிற்குள் காற்றை அதிக அளவிற்கு செலுத்தி அதன் மூலம் அதிக ஆக்ஸிஜனை கொண்டு அதிக கம்பஷனை செய்ய வைப்பதுதான் இதன் நோக்கம்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

இதனால் பிஸ்டனின் வேகம் அதிகரித்து வாகனத்தின் டார்க் எதிர்பாராத அளவிற்கு வேகமாக மாறும். இதன் காரணமாகவே இன்ஜினில் இந்த வசதியை கார் நிறுவனங்கள் பொருத்துகின்றனர். இவ்வாறாக டர்போ சார்ஜர் மூலம் இன்ஜின் இயங்கும் போது இன்ஜினில் அதிகமாக வெப்பம் உற்பத்தியாகும்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த வெப்பம் தொடர்ந்து இன்ஜினிற்குள் இருந்தால் இன்ஜினிற்கு விரைவில் கேடு ஏற்பட்டு விடும். அதனால் இந்த வெப்பத்தை குறைக்க இன்டர்கூலர் என்ற தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இதில் உள்ள வெப்பம் பெரும் அளவிற்கு குறைகிறது.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

இன்டர்கூலர் என்பது இன்ஜினிற்குள் செல்லும் காற்றை குளிர்விக்கிறது. முதலில் சூடான காற்றை எடுத்து அதை அந்த காற்று பிடிக்கும் அளவை விட பெரிய இடத்திற்கு கொண்டு செல்கிறது. அங்கு சூடான காற்று பிரிந்து இன்டர்கூலரின் மேல் அதன் சூட்டை இறக்குகிறது. அந்த வெப்பம் மெல்ல காற்றில் கலந்து விடுகிறது.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

அதன் பின் அந்த காற்று ஃபின் வழியாக செல்கிறது. அந்த ஃபின் என்பது காற்றை மேலும் குளிரூட்டுகிறது. அப்பொழுதும் ஃபின்னிற்கு வரும் காற்றில் உள்ள மிச்ச சொச்ச வெப்பமும் காற்றில் கலந்துவிடும். இதனால் காற்று முற்றிலுமாக குளிரூட்டப்பட்டு இன்ஜினிற்குள் செல்லும்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

காற்று குளிராக இருப்பதால் சிறிது இடம்தான் பிடிக்கும். இதனால் அதிக காற்றை இன்ஜினிற்குள் அனுப்ப முடியும். அதன் மூலம் கம்பஷன் ஸ்டோர்க்கில் அதிக பவரை வெளிப்படுத்த முடியும். இவ்வாறு சிலிண்டருக்கும் அதிக பவரில் ஸ்டோக் ஏற்பட்டால் கிராங் ஸாப்டிலும் அதன் தாக்கம் இருக்கும். அது அப்படியே வலுக்கும். தொடர்ந்து வாகனம் எதிர்பாராத அளவிற்கு வேகமாக செயல்பட துவங்கிவிடும்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

இவ்வாறு காற்றை குளிர்விக்காமல் இன்ஜினிற்குள் அனுப்பினால் இன்ஜினிற்குள் ஏற்படும் கம்பஷனால் அதிக வெப்பம் ஏற்படும். அதே நேரத்தில் காற்றில் வெப்பம் அதிகமாக இருந்தால் குறைந்த காற்றைதான் இன்ஜினிற்குள் அனுப்ப முடியும்.

டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் ஏன் அவசியம் தெரியுமா?

அவ்வாறு அனுப்பினால் குளிர்ந்த காற்று செல்லும் போது ஏற்படும் கம்பஷனை விட இதன் திறன் குறைவாகதான் இருக்கும். எனவே டர்போ சார்ஜ் இன்ஜினிற்கு இன்டர்கூலர் மிக அவசியமாகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 5, 2018, 17:30 [IST]
English summary
Why intercooler is more important to turbocharged engine.Read in Tamil
மேலும்... #ஆட்டோ டிப்ஸ்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+