கார் ஓட்டும்போது நிறைய பேரு இந்த தவறு பண்ணுறோம்!! வெளிநாடுகளில் இதுக்கு தடை இருக்கு...

செருப்பு அணிந்துக் கொண்டு வாகனம் ஓட்டுவது ஆபத்தானது என சிலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். எதற்காக அவ்வாறு செல்கிறார்கள்? ஏன் செருப்பு அணிந்துக் கொண்டு கார் டிரைவ் செய்யக்கூடாது? இந்த விஷயத்தில் அரசாங்க விதிமுறைகள் கூறுவது என்ன? வாருங்கள் அதற்கான பதில்களை இனி பார்க்கலாம்.

செருப்பு அணிந்துக் கொண்டு கார் ஓட்டுவதும், ஓட்டாததும் உங்களது விருப்பம். நம் இந்தியா போன்ற வெப்பமான நாட்டில் எல்லா நேரங்களிலும் ஷூ அணிந்திருக்க முடியாது என்பதால், செருப்பு அணிந்துக் கொண்டு கார் உள்பட மற்ற ஆட்டோமொபைல் வாகனங்களை ஓட்டுவதற்கு எந்தவொரு தடையும் கிடையாது. ஆனால், சில வெளிநாடுகளில் செருப்பு உடன் கார் ஓட்டுவதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

driving a car in slippers

எங்களை கேட்டால் செருப்பு அணிந்துக் கொண்டு கார் ஓட்டுவதை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். நமது இந்திய அரசாங்கமும் ஷூ அணிந்துக் கொண்டு வாகனம் ஓட்டினால் நல்லது என்றே அறிவுறுத்துகிறது. ஏனெனில், செருப்பு அணிந்தப்படி கார் ஓட்டுவதால் சில தீமைகள் உள்ளன. செருப்பு அணிந்து வாகனம் ஓட்டுவதினால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

செருப்பு அணிந்திருக்கும் போது, நமக்கு ஒரு காலில் இரு பாதங்கள் இருப்பது போன்று ஆகும். நிலையான இடத்தில் நடப்பதற்கும், ஓடுவதற்கும் செருப்பு ஏற்றதாக இருக்கலாம். ஆனால், குலுக்கலுடன் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செருப்பு நமது கால் பாதங்களை முழுவதுமாக கவர் செய்யாமல் விலகி செல்லலாம். இதன் காரணமாக, துரிதமாக செயல்பட வேண்டிய நேரத்தில் உங்களால் செயல்படாமல் போகலாம்.

அதாவது, செருப்பு அணிந்திருக்கும்போது, நாம் காரின் பெடல்களின் மீது சரியாக கால் வைத்திருப்பது போல் தோன்றும். ஆனால், அவசர நேரத்தில் கொஞ்சம் பதற்றத்துடன் செயல்பட நேரிடும் போது, செருப்பு பெடலில் இருந்து விலகிவிடலாம். அல்லது, தேவையற்ற நேரங்களில் கூடுதல் ஆக்ஸலரேஷன் அல்லது பிரேக்கை நாம் தவறுதலாக கொடுத்துவிட நேரிடலாம். இது விபத்துகளை ஏற்படுத்திவிட கூடும்.

அதேபோல், செருப்பு அணிந்திருக்கும்போது டிரைவர்களுக்கு பெடலின் மீது வலுவான பிடிமானம் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. சடர்ன் பிரேக் கொடுக்கும்போது அல்லது நீண்ட நேரத்திற்கு வலுவான பிரேக் கொடுக்கும்போது செருப்பு பிரேக் பெடலில் இருந்து வழுக்கி கீழே விழலாம். பின் மீண்டும் நீங்கள் உங்களது காலை பிரேக் பெடலின் மீது வைக்க ஒரு நொடி ஆகலாம். உதாரணத்திற்கு, மணிக்கு 100kmph வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அந்த ஒரு நொடி கூட பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

driving a car in slippers

மேலும், இரு பெடல்களுக்கு இடையே செருப்பு தவறுதலாக சிக்கிக் கொள்வதற்கும் வாய்ப்புள்ளது. செருப்பு இடையில் இருப்பதால், உங்களால் ஆக்ஸலரேஷன் அல்லது பிரேக் கொடுக்க முடியாமல் போகலாம். அத்தகைய நேரத்தில் டிரைவர் குனிந்து செருப்பை சரி செய்ய வேண்டியிருக்கும். அதிவேகத்தில் செல்லும்போது ஒரு நொடி என்பதே பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும் எனும்போது, நீங்கள் குனிந்து செருப்பை சரி செய்வதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

ஒரு கட்டத்திற்கு மேல், செருப்பு உடன் காரை ஓட்ட முடியாது என நீங்கள் அதை தனியாக கழற்றி வைத்துவிட்டு, வெறும் காலில் ஓட்டலாம் என முடிவெடுப்பீர்கள். ஆனால், வெறும் காலில் கார் ஓட்டுவது நீங்கள் நினைப்பதை விட கடினமாகும். வெறும் காலில் கார் ஓட்டும்போது வழக்கத்தை காட்டிலும் நீங்கள் அதிகமாக வலு கொடுக்க வேண்டியிருக்கும். பெடல்கள் இலகுவாக இருக்கும் கார்களில், நீங்கள் வெறும் காலில் வழக்கத்தை விட வலுவாக அழுத்திவிடவும் வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார்களில் ஆக்ஸலரேஷன், பிரேக் & கிளட்ச் பெடல்கள் சிறந்த பிடிமானத்திற்கு ஏற்றவாறே வடிவமைக்கப்படுகின்றன. இருப்பினும், செருப்புடன் காரை ஓட்டும்போது ஒரு சில நேரங்களில் தவறு நடப்பதற்கும் வாய்ப்புள்ளதை மறந்துவிடாதீர்கள். ஆதலால், முடிந்தவரையில் ஷூ அணிந்துக் கொண்டு கார் ஓட்ட பழகிக் கொள்ளுங்கள். நம் சென்னை போன்ற நகரத்தில் மதிய வேளையில் ஷூ அணிவது கொஞ்சம் சிரமமான காரியம் தான் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2024, 19:41 [IST]
English summary
Why should avoid driving a car in slippers disadvantages need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+