சாவியைப் போட்டதும் ஓடோ மீட்டரில் முள் முழுவதும் ஏறி இறங்குமே இது ஏன் தெரியுமா?

கார் பைக் ஓட்டும் பலருக்குக் குறிப்பிட்ட விஷயங்கள் கார் பைக்கில் ஏன் நடக்கிறது என்றே தெரியாது. ஆனால் தினந்தோறும் அதைப் பார்த்து வந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள காரணம் பலருக்குத் தெரியாது. இப்படியான ஒரு விஷயம் தான் இன்ட்ஸ்ரூமென்ட் கண்ட்ரோல் மூவ் மெண்ட்ஸ். பொதுவாக இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் வேகம், ஃப்யூயல் அளவு, வெப்பம், ஆபிஎம் உள்ளிட்ட தகவல்களை நாம் பார்ப்போம்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த வாகனங்களில் எல்லாம் நாம் சாவியைப் போட்டு கார்/ பைக்கை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கும் போது வாகனத்தில் உள்ள ஓடோ மீட்டரில் உள்ள அனலாக் முள்கள் பூஜ்யத்திலிருந்து அது முடிந்த அளவிற்கு ஏறிவிட்டு பின்னர் இறங்கும். இது ஸ்பீடு, ஆர்பிஎம், ஃப்யூயல் அளவு என எல்லா இடத்திலும் நடக்கும்.

சாவியைப் போட்டதும் ஓடோ மீட்டரில் முள் முழுவதும் ஏறி இறங்குமே இது ஏன் தெரியுமா?

இதற்குக் காரணம் பலருக்கும் தெரியாது. இதைப் பலர் கார் பைக், தன்னை செக் செய்து கொள்கிறது என்ற மூட நம்பிக்கையில் கூட இருப்பார்கள். இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இது எப்படி வேலை செய்கிறது என்பதைத் தெரிய வேண்டும். பழைய கார்/ பைக்குகளில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் அப்படியில்லை. அதற்குக் காரணம் அதை கண்ட்ரோல் செய்தது ஸ்பிரிங்க் தான்.

வாகனத்தின் டயர் வேகமாகச் சுற்றும் போது இந்த ஸ்பிரிங் விரிந்து வேகத்தைக் காட்டும். ஆனால் இது நீண்ட நாட்களுக்கு துல்லியமாக்கக் காட்டும் எனச் சொல்ல முடியாது. நாளடைவில் ஸ்பிரிங் தன் திறனைக் குறைக்கும் போது இந்த வேகம் தவறாகக் கூட மாற வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இதற்காக ஸ்டெப்பர் மோட்டார் என்ற கருவியைப் பயன்படுத்தத் துவங்கினர்.

ஸ்டெப்பர் மோட்டார் என்பது என்பது எலெக்ட்ரிக் பவரில் இயங்கும் ஒரு கருவி. இது ஸ்பிரிங்கை விடச் சற்று துல்லியமாக்க வேகத்தைக் கணக்கிட்டுக் காட்டும் அது மட்டுமல்ல இது நீண்ட கால உழைப்பிற்கும் ஏற்றது என்பதால் இதை மாற்றினர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை இருந்தது. ஒரு வாகனம் எந்த இடத்தில் ஆஃப் செய்யப்பட்டதோ அந்த இடத்திற்கு இது தானாக ரீ செட் ஆகாது.

இதை ரீ செட் செய்தால் தான் மீண்டும் ரீசெட் ஆகும். அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு முறை இக்னீஷியன் ஆன் ஆகும் போதும் இந்த ஸ்டெப்பர் மோட்டார் ரீ செட் ஆகும்படி செட்டிங் செய்து வைத்திருப்பார்கள். இந்த செட்டிங் செயல்பாட்டிற்கு வரும் போது தான் இந்த நீடில் மேலும் கீழும் முழுமையாக அசைவதை நாம் பார்க்க முடியும்.

இது தன்னை தானே முழுமையாகச் செயல்படுத்திப் பார்த்து ரீ செட் செய்யும். இப்படி தன்னை தானே அது முழுமையாகச் செயல்படுத்திப் பார்க்கும் போது இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள நீடிலுக்கும் இந்த பிரஷர் வந்து இது முழுமையாக நகர்வதை நம்மால் காண முடிகிறது. இதைத் தான் பலர் வாகனம் இயங்க தன்னை தானே தயார் செய்து கொள்கிறது எனச் சொல்லுகின்றனர். ஆனால் இது உண்மையில் ஸ்டெப்பர் மோட்டாரின் வேலை தான்.

சிலர் இப்படியாக நீடில் நகரும் போது கார்/ பைக்கை ஸ்டார்ட் செய்யக்கூடாது, வாகனத்தை நகர்த்த கூடாது என்று எல்லாம் சொல்கிறார். ஆனால் இது உண்மையில்லை. இது வெறும் ஸ்டெப்பிங் மோட்டாரின் ரீசெட் ஃபங்சன் தான். இதற்கும் வாகனத்தின் இயகத்திற்கும் சம்மந்தம் இல்லை. இது ரீ செட் ஆகும் போதே வாகனம் நகர்ந்தாலும் அதுவும் ஆகாது.

இது ரீசெட் ஆகும் போது வாகனம் நகர்ந்தாலும் அது ரீ செட் ஆக பின்பு வாகனத்தின் நிலை என்ன என்பதை துள்ளியமாக உங்களுக்கு வழங்கி விடும். இதனால் இதை நம்பி வாகனத்தின் சாவியை போட்டு இது ரீசெட் ஆகும் வரை காத்திருக்க வேண்டாம். இந்த தகவல் புதிதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 12:40 [IST]
English summary
Why the odometer needle moves up and down while the ignition on
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+