பனி நேரத்துல வண்டி ஸ்டார்ட் பண்ணாம மக்கர் பண்ணுதா? இப்படி பண்ணுங்க உடனே ஸ்டார் ஆகிடும்!
தற்போது மார்கழி மாதம் இந்தியா முழுவதும் பனிக் காலம் இருக்கிறது. காலை நேரங்களில் அதிகமான பனி இருக்கிறது. பலர் வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத அளவிற்குப் பனி பொழிகிறது. இப்படியான சூழ்நிலையில் தற்போது பலரும் சந்திக்கும் பிரச்சனை குளிர் நேரத்தில் உங்கள் வாகனம் ஸ்டார்ட் ஆகாமல் சிரமப்படுத்தும். காலை எழுந்ததும் முதல் முறையாக வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது ஸ்டார்ட் ஆகாமல் இருக்கும். இந்த பிரச்சனையைச் சரி செய்வது எப்படி எனக் காணலாம்.
பொதுவாக வெயில் காலங்களில் வராத இந்த பிரச்சனை பனிக் காலங்களில் மட்டும் வருகிறது. என்றால் குளிர் தான் முக்கியமான காரணமாக இருக்கும் என உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் குளிர் காலத்தில் மட்டும் இப்படி வண்டி ஸ்டாண்ட் ஆகாமல் மக்கர் செய்வது எதனால்? இதை எப்படிச் சமாளிப்பது? இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

குளிர் காலத்தில் ஒரு வண்டி ஸ்டார்ட் ஆகாமல் திணறினால் அதற்கு இரண்டு விஷயம் தான் காரணமாக இருக்க முடியும் ஒன்று பேட்டரி, மற்றொன்று இன்ஜின் ஆயில், இந்த இரண்டும் தான் குளிர் காலத்தின் தனது தன்மையை மாற்றம் திறன் கொண்டவை மற்ற எல்லா விஷயங்களும் வெயில் காலத்தில் எப்படி வேலை செய்யுமோ அதே மாதிரி தான் குளிர் காலத்திலும் வேலை செய்யும். இப்படிக் குளிர் காலத்தில் மட்டும் இது இரண்டும் தன்மை மாறுவதற்கான காரணத்தைக் காணலாம் வாருங்கள்.
பொதுவாக பேட்டரியை தேர்வு செய்யும் போது அது எத்தனை வோல்ட் பேட்டரி என்று தான் கணக்கிடுவோம். அதாவது பேட்டரியில் எவ்வளவு கொள்ளளவு இருக்கிறது எனப் பார்ப்போம். பைக்குகளில் பெரும்பாலும் 12 வோல்ட் பேட்டரியை பயன்படுத்துவோம். 12 வோல்ட் என்றால் சரியாக 12 வோல்ட் இருக்காது. மாறாக 12.6 வோல்ட் இருக்கும். இது போக இந்த பேட்டரி பைக் ஓடும் போது ஆல்டர்னேட்டர் மூலம் சார்ஜ் ஏறும் திறன் கொண்டதாக இருக்கும். இதனால் 14 வோல்ட் வரை சார்ஜ் ஏறும் திறனுடன் இருக்கும்.
ஆனால் பேட்டரியில் சார்ஜ் இல்லை என்பது குளிர்காலத்தில் வண்டி ஸ்டார்ட் ஆகாமல் இருப்பதற்குக் காரணம் அல்ல. இதற்கு முக்கியமான காரணம் CCA, கோல்டு கிராக்கிங் ஆம்ஸ் எனப்படும் விஷயம் தான். ஒவ்வொரு பேட்டரிக்கும் ஒவ்வொரு கோல்டு கிராங்கிங் ஆம்ஸ் இருக்கும். இது தான் காரின் மோட்டாரை ஸ்டார் செய்ய அனுப்பும் இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறோம்.
ஒரு பேட்டரியில் வோல்ட் என்பது ஒரு டேங்கில் இருக்கும் தண்ணீர் போல, அதில் உள்ள CCA என்பது, டேங்கில் உள்ள பைப் போல என்னதான் டேங்க் நிறையத் தண்ணீர் இருந்தாலும் பைப்பை திறக்க முடியவில்லை என்றால் தண்ணீர் வராது அது போலத் தான் பேட்டரியில் சார்ஜ் இருந்தாலும் குளிர் காலத்தில் வேலை செய்யாத அளவு பேட்டரி இருந்தால் ஸ்டார்ட் ஆகத் திணறும். இது செல்ஃப் ஸ்டார்ட்டில் மட்டும் இருக்கும். பிரச்சனை தான், இந்த பிரச்சனை இருக்கும் வண்டியில் கிக்கரை கொண்டு ஸ்டார்ட் செய்துவிட்டால் அசால்டாக ஸ்டார்ட் ஆகிவிடும்.
CCA எவ்வளவு குளிரிலும் எவ்வளவு பேட்டரி திறனை வெளியிடும் என்பதாகும். இது குளிர் நேரத்தில் குறைவான பவரை வெளியிட்டால் வண்டி ஸ்டார்ட் ஆகாது. நல்ல சிசிஏ இருக்கும் பேட்டரியை பயன்படுத்துவது சிறந்தது. பொதுவாக இந்தியாவில் பைக்குகளுக்கு 270 சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரிகளும், கார்களுக்கு 600 சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரிகளையும் பயன்படுத்துவது சிறந்தது. இது எல்லா காலகட்டத்திலும் சிறப்பாக வேலை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
குளிர் காலத்தில் பேட்டரிக்கு அடுத்ததாக மக்கள் செய்வது இன்ஜின் ஆயில்தான். இன்ஜின் ஆயிலுக்கு குளிரில் இருக்கும் தன்மையும், வெப்பத்தில் உருகும் தன்மையும் உண்டு குளிர்காலத்தில் மிகவும் கட்டியாகிவிடும். வெளியில் காலத்தில் அதிக வெப்பத்தால் அதிகமாக லூசாகிவிடும். இந்த இரண்டுமே பிரச்சனை தான். இன்ஜின் ஆயில் சிறந்த லூப்ரிகெண்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதனால் அது எப்பொழுதும் சரியான பதத்தில் இருக்க வேண்டும்.
இப்படியாக இன்ஜின் ஆயிலை வாங்கும் போதே அது எவ்வளவு குளிர் வரை தாங்கும் எவ்வளவு வெப்பம் வரை தாங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் அதன் டப்பாவில் 0W-30 அல்லது 5W-20 எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதில் W எனக் குறிப்பிடப்பட்டிருப்பது அதன் குளிர் அளவை குறிக்கும் அதன் பின் இருப்பது வெப்பத்தைக் குறிக்கும். 0W-30 என்பது 0 டிகிரி குளிர் முதல் 30 டிகிரி வெப்பம் வரை அதன் தன்மை சிறப்பாக இருக்கும். 5W-20 என்பது 5 டிகிரி குளிர் முதல் 20 டிகிரி வெப்பம் வரை சிறப்பாக இருக்கும். வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குளிர் குறைந்தாலோ அதன் தன்மை மாறுபடும். அதனால் இன்ஜின் ஆயிலை வாங்கும் போது அதை செக் செய்துவிட்டுவாங்குவது சிறந்தது.
சரி இப்படி வண்டி ஸ்டார்ட் ஆகாமல் பிரச்சனை செய்வது எப்படித் தடுப்பது எனக் கேட்டால் அதற்கும் வழி இருக்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் பணி காரணமாகவே இப்படியாக நடக்கிறது. இதனால் இரவு நேரம் காரை நீங்கள் ஏதாவது முற்றிலும் மூடப்பட்டு வெளியில் உள்ள குளிர் உள்ளே வராத ஒரு இடத்தில் காரை பார்க் செய்வது, அதாவது முற்றிலும் மூடப்பட்ட ஒரு இடத்தில் காரை பார்க் செய்வது தான் சிறந்தது. அப்படியான இடம் இல்லை என்றால் மார்கெட்டில் வெதர் ஃப்ரூப் கவர் இருக்கிறது. அதை வைத்து காரை மூடி வைப்பதும் மூலமும் கார் இன்ஜின் மற்றும் பேட்டரி அதிக குளிராவதைத் தடுக்க முடியும்.
ஒரு வேலை இதைச் செய்ய மறந்து உங்கள் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்றால் பைக் என்றால் அதில் கிக்கர் இருந்தால் முயற்சி செய்யலாம் பேட்டரி மட்டும் பிரச்சனை என்றால் வண்டி ஸ்டார்ட் ஆகிவிடும். ஆனால்இன்ஜின் ஆயிலும் பிரச்சனை என்றால் மீறி ஸ்டார்ட் செய்தால் வாகனத்தின் இன்ஜின் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் எப்பொழுதும் வாகனத்திற்குச் சிறப்பான இன்ஜின் அயிலைப் பயன்படுத்துங்கள். பேட்டரியையும் சிறப்பாக சிசிஏ ரேட்டிங் கொண்ட பேட்டரியை பயன்படுத்துங்கள்!


Click it and Unblock the Notifications








