ஸ்டைலா கார் ஓட்டுறதா நினைச்சுக்கிட்டு கையை ஒடச்சிக்காதீங்க! ஸ்டியரிங்கை பிடிக்குற ரூல்ஸ் தெரியுமா?
கார் ஓட்டும் போது ஸ்டியரிங்கை எப்படிப் பிடித்து கார் ஓட்ட வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதிமுறை இருக்கிறது. இதைப் பின்பற்றினால் தான் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும். இது குறித்த தெளிவான விபரங்களை இங்கே காணலாம்.

கார் ஓட்டுவது என்பது ஒரு கலை, அதை நீங்கள் ரசித்துச் செய்யத் துவங்கிவிட்டால், நீங்கள் சலிக்காமல் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் காரை ஓட்ட துவங்கி விடுவீர்கள். அந்த அளவிற்கு கார் ஓட்டுவது என்பது உங்களுக்குப் பிடித்துப்போகும். கார் ஓட்டுவதற்கு என சில விதிமுறைகள் இருக்கிறது. சாலை விதிமுறைகள் அல்ல. அது போக சில விதிமுறைகளை கார் ஓட்டும் போது பின்பற்றினால் உங்கள் பயணம் சிறப்பான அனுபவத்தைத் தரும்.

கார் ஓட்டுவதில் இருக்கும் முக்கியமான விஷயம் காரின் ஸ்டியரிங்கை கையாள்வது தான். கார் ஓட்டும் போது காரின் ஸ்டியரிங்கை பிடிக்கும் போது எந்த போசிஷனில் பிடிக்கிறோம், ஸ்டியரிங்கை திருப்பும் போது எந்த போசினில் கைகளை வைத்துக்கொண்டு திருப்ப வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறைகள் இருக்கிறது அதைப் பற்றித் தான் இங்க காணப்போகிறோம்.

நாம் எப்பொழுது காரை ஓட்டினாலும் காரை ஸ்டிரிங் வீலை இரண்டு கையாளாலும் பிடித்து ஓட்ட வேண்டும். சிலர் ஒரே கையில் காரை ஓட்டுவார்கள் இது முற்றிலும் தவறு, காரின் கியரை மாற்றும்போது மட்டுமே நமது இடது கையை ஸ்டிரிங்கிலிருந்து எடுத்து கியருக்கு கொண்டு சொல்ல வேண்டும். மற்ற நேரங்களில் எல்லாம் காரின் ஸ்டியரிங் வீலில் தான் கை இருக்க வேண்டும்.

அதுவும் காரின் கைகளை ஸ்டிரிங்கின் எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்ற ஒரு விதிமுறை இருக்கிறது. கைகளை ஸ்டிரிங் வீலில் பிடிக்கும் போது ஸ்டிரிங் வீலை பிடிக்கும் போது நாம் 10:10 என்ற விதிமுறையின் ஸ்டியரிங் வீலை பிடிக்க வேண்டும் அதாவது காரின் ஸ்டியரிங் வீலை ஒரு கடிகாரம் போல நினைத்துக்கொள்ளுங்கள் அப்பொழுது காரின் முள் 10:10 என்ற மணியில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படியாக நினைத்துக்கொண்டு அந்த முள்ளுக்குக் கீழே கை இருக்கும் படி கையை பிடிக்க வேண்டும்.

ஸ்டிரயிங் வீலை திருப்பும் போது இரண்டு விதமான விதிகளைப் பின்பற்ற வேண்டும். திருப்பங்களை நீங்கள் இரண்டு விதமாகப் பிரிக்கலாம். லேசான திருப்பம், பெரிய திருப்பம் எனப் பிரிக்கலாம். இந்த இரண்டு திருப்பத்திற்கும் நீங்கள் கடைப் பிடிக்க வேண்டியது. ஸ்டியரிங் வீலை நீங்கள் முன்னர் போல ஒரு கடிகாரமாக நினைத்துக்கொள்ளுங்கள். அதில் 6 மற்றும் 12 ஆகிய எண்களுக்கு இடையே ஒரு கோடு இருப்பதாகக் கருதிக்கொள்ளுங்கள்

அந்த கோடு தான் லக்ஷ்மண கோடு, நீங்கள் எக்காரணத்தைக் கொண்டு உங்கள் வலதுகையை அந்த கோட்டை தாண்டி இடது புறம் கொண்டு செல்லக்கூடாது, இடது கையை அந்த கையை தாண்டி வலது புறம் கொண்டு செல்லக்கூடாது. திருப்பத்தில் குறைவான ஸ்டியரிங் இன்புட் கொடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் ஸ்டியரிங்கை திருப்பி உங்கள் 12-16 ஆகிய எண்களில் இருக்கும்படி அதிகபட்சமாகக் கொண்டு செல்லலாம்.

ஒருவேளை பெரிய திருப்பம் என்றால் அதிகமான ஸ்டியரிங் இன்புட் கொடுக்க வேண்டும். அப்பொழுது திருப்பும் முதலில் லேசாக திருப்பி 12-6 என்ற இடத்தில் கை வரும் படி வைத்துக்கொண்டு பின்னர் மேல் பகுதியில் அதாவது 12 என்ற எண்ணில் இருக்கும் கையை மட்டும் எடுத்து பழைய போசினிற்க கொண்டு வந்து ஸ்டியரிங்கை பிடித்த பின்பு கீழே உள்ள கையை எடுத்து பழைய பேசிஷனிற்கு வந்து மீண்டும் திருப்ப வேண்டும்.

இப்படியாக உங்களுக்குத் தேவைப்படும் அளவிற்குத் திருப்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டு வலது கையை ஸ்டியரிங்கின் இடதுபுறமும், இடது கையை ஸ்டியரிங்கின் வலதுபுறமும் கொண்டு செல்லக்கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் கை X போன் போசிஷனிற்கு மாறிவிடும். இப்படி மாறினால் இரண்டு விதமான பிரச்சனை ஏற்படும்.

உங்கள் வாகனத்தைத் திருப்புவதற்குச் சிரமமாக இருக்கும். விரைவாக கைகளைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடியாது. அதனால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வேகமாக கார் திருப்பாது. இதனால் விபத்தில் சிக்க நேரிடும். இது ஒரு பிரச்சனை என்றால் அடுத்த பிரச்சனை இப்படியாகத் திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினால் காரில் ஏர்பேக் வெடித்து வெளியே வரும்.

பொதுவாக வாகனத்தின் ஏர்பேக் ஸ்டியரிங்கின் நடுவே வைக்கப்பட்டிருக்கும் அப்படியாக ஏர் பேக் வரும் போது உங்கள் கை X போசிஷனவில் இருந்தால் இதனாலேயே உங்கள் கைகளுக்குப் பலத்த அடி ஏற்படும். இதனால் மிகப்பெரிய அளவில் உங்கள் கைகளுக்குச் சேதாரம் ஏற்படலாம். அதனால் இப்படியாக எந்த நேரத்திலும், எப்படிப்பட்ட சிக்கலிலும் செய்யக்கூடாது.


Click it and Unblock the Notifications








