காரை நிழலில் பார்க் பண்ணுங்க! இல்லேன்னா பெயிண்ட், டயர், இன்ஜின், என எல்லாமே போயிடும்!
கோடைக் காலம் நெருங்கிவிட்டது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெப்ப நிலை மாற்றம் வாகனங்களுக்கு நல்லதல்ல. இந்த மாதிரியான காலகட்டங்களில் வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம், இல்லை என்றால் காருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும். குறிப்பாக நேரடியாக வெயிலில் காரை நிறுத்துவது ஆபத்தானது.
நேரடியாக வெயிலில் காரை நிறுத்துவது காரின் வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல காரின் இன்ஜினிற்கே ஆபத்து தொடர்ந்து வெளியில் காரை நிறுத்தினால் கார் சூடாகி அதன் பின் பயணிக்கும் போது இன்ஜின் செயல் இழந்து போக கூட வாய்ப்பு இருக்கிறது. இந்த பதிவில் நாம் நேரடியாக வெயிலில் காரை நிறுத்தினால் எவ்வளவு பிரச்சனை வரும் எனக் காணலாம்.

கார் பெயிண்ட் டேமேஜ் - Car Paint Damage
காரை நேரடியாக வெளியிலில் நிறுத்தும் போது நேரடியாகச் சூரிய வெப்பம் உங்கள் கார் மீது விழும். இதனால் முதலில் பாதிக்கப்படுவது உங்கள் காரின் பெயிண்ட் தான் (Car Paint Damage). காரின் மீது அதிக வெப்பம் ஏற்பட்டால் சூடு தாங்காமல் காரின் பெயிண்டில் கெமிக்கல் மாற்றங்கள் ஏற்பட்டு அதன் பொழிவு கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும். இது போக காரில் நேரடியாக வெயிலில் படும் ரப்பர் பகுதியும் வெப்பத்தால் பாதிப்படையும்.
இன்ஜின் சேதம் - Engine Damage
ஒரு வேளை நீங்கள் காரை கொஞ்ச தூரம் ஓட்டி வந்து காரை வெயிலில் பார்க் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கார் இவ்வளவு நேரம் ஓடியதால் இன்ஜின் சூடாக இருக்கும். கார் வெயிலில் இருப்பதால் தொடர்ந்து சூடு ஏறும். இதனால் இன்ஜின் சூடு குறையாமல் இருக்கும். தொடர்ந்து இன்ஜின் சூடு அதிகமாக இருந்தால் அதில் உள்ள பிஸ்டன் ரிங்க், பெல்ட் ஆகியவை பாதிப்படையும்.
தொடர்ந்து அதிக முறை இப்படி கார் வெளியிலேயே நின்றால் அவ்வளவு தான். காரை அடுத்த முறை நீங்கள் எடுக்கும் போது அது பாதி வழியில் ரிப்பேர் ஆகி நடு ரோட்டில் நின்று விடும் வாய்ப்பும் உள்ளது. ஏற்கனவே சேதமான பிஸ்டன் ரிங் அல்லது பெல்ட் உடன் காரை ஓட்டும் போது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு செயல் இழந்து போய் இந்த நிலைமை ஏற்படும்.
ஃப்யூயல் லைன் சேதம் - Fuel Line Leakage
நீங்கள் காரை நேரடியாக வெயிலில் பார்க்கச் செய்தால் உங்கள் காரின் ஃப்யூயல் லைனில் கூட பிரச்சனை வரும். அதுவும் சிஎன்ஜி காராக இருந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். வெப்பம் அதிகமாக ரப்பர் ஃபிட்டிங்கில் உள்ள ரப்பரில் வெப்பத்தில் விரிவடையத் துவங்கினால் காரில் உள்ள கேஸ் லீக் ஆக ஆரம்பித்துவிடும். இது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெடித்துப் போகக் கூட வாய்ப்பு இருக்கிறது.
டயர்கள் பாதிப்பு - Tyre Damage
காரை நீண்ட நேரம் வெயிலில் நிறுத்தினால் இந்த பாதிப்பு எல்லாம் போக காரின் டயரிலும் பாதிப்பு ஏற்படும். அது வெயிலின் தாக்கத்தால் வெப்பம் வெகுவாக அதிகரித்து காரின் டயரின் ஆயுளைக் குறைக்கும். இதனால் காரின் டயர் விரைவாகச் சேதமடையத் துவங்கிவிடும். இது தொடர்ந்தால் அதிகமாகச் செலவை இழுத்துவிட்டுவிடும்.
இவை எல்லாம் நேரடியாக வெயிலில் காரை நிறுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள். நீங்கள் காரை நிறுத்த நிழலாக இடம் கிடைக்கவில்லை. இப்ப என்ன வெயிலில் நின்று கொண்டு போகட்டும் என அசால்டாக இருந்தால் பிற்காலத்தில் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படும். அதனால் அப்பொழுதும் காரை நேரடியாகச் சூரிய வெளிச்சம் படாத பகுதியில் நிறுத்துவது நல்லது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








