பைத்தியக்காரதனம் எல்லாம் இல்ல... மழை பெய்யும் போது கூலிங் கிளாஸ் போட்டு கார் ஓட்டுவது சிறந்தது ஏன் தெரியுமா?
மழைக் காலங்களில் காரில் செல்லும் போது அடை மழை பெய்தால் கூலிங்கிளாஸ் போட்டு காரை ஓட்டுவது தான் சிறந்த வழிமுறை எனக் கூறப்படுகிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம்.

சாதாரண நாட்களில் கார் ஓட்டுவதை விட மழைக்காலங்களில் கார் ஓட்டுவது என்பது மிகவும் சவாலான விஷயம். சாலைகள் எல்லாம் வழுக்கும், வாகனம் இருட்டியதால் எதிரில் வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாது. மழை பெய்வதால் வாகனத்தின் ஹெட்லைட் அதிக தூரம் பரவாது. காரின் முன்பக்க கண்ணாடியில் உட்புறமாகப் பனி படியும். இப்படியா பல பிரச்சனைகள் மழைக்காலங்களில் கார் ஓட்டும் போது ஏற்படும்.

சில நேரம் நாம் காரை எடுத்து பயணத்தைத் துவங்கும் போது மழையில்லாமல் வெயிலாக இருக்கும். ஆனால் திடீரென மழை பெய்யத் துவங்கிவிடும். பாதி வழியில் நாம் மழையில் சிக்கி விடுவோம். இப்படியான நேரத்தில் நாம் கூலிங் கிளாஸ் போட்டுச் சென்றால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என ஒரு ஆய்வு சொல்கிறது அதைப் பற்றிக் காணலாம்.

என்னது அடை மழை பெய்தால் கூலிங் கிளாஸ் போட்டு கார் ஓட்டவுமா என நீங்கள் நினைப்பது எங்களுக்குக் கேட்கிறது. ஆனால் உண்மை அது தான். அடை மழை பெய்யும் போது கூலிங் கிளாஸ் போட்டு கார் ஓட்டினால் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். இது எப்படி எனக் காணலாம் வாருங்கள்.

மழைக்காலங்களில் ரோட்டில் செல்லும் வாகனங்கள் ஹெட்லைட்களை ஹைபீமில் வைத்திருப்பார்கள் ரோடு நன்றாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இதை பெரும்பாலான டிரைவர்கள் செய்வார்கள். ஆனால் இது எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்குச் சிரமமாக இருக்கும். இதனால் நீங்கள் எதிரில் ஒருவர் ஹைபீம் போட்டு வந்தால் நீங்கள் கூலிங் கிளாஸ் போடுவது மூலம் அதன் கிளரைக் குறைத்து சாலையைப் பார்த்து வாகனத்தை இயக்க முடியும்.

கூலிங் கிளாஸில் போலரைஸ்டு கிளாஸ் என்ற ஒரு வகை கிளாஸ் இருக்கிறது. இது இருட்டாக இருக்கும் இடத்தில் சாதாரண வாகனம் தெரிவதை விட மேலும் தெளிவான வசிபிலிட்டியை தரும். இந்த வகையான கூலிங் கிளாஸ்களை மழைக் காலங்களில் வாகனம் ஓட்டி செல்லும் போது அணிந்தால் இருட்டில் சாதாரணமாகக் கண்ணிற்குத் தெரியாத விஷயங்கள் கூட இந்த கண்ணாடி மூலம் தெரியும்.

ஆனால் போலரைஸ் செய்யப்பாடாத கூலிங் கிளாஸ்கள் இதைச் செய்வதில்லை. அந்த கூலிங் கிளாஸ்களை அணிந்தால் ஏற்கனவே இருட்டா இருக்கும் இடத்தை மேலும் இருட்டாகக் காட்டும். அதனால் நீங்கள் வாகனத்தில் பயணிக்கும் போது அணிவதற்காக போலரைஸ்டு கூலிங் கிளாஸ்களை வாங்குவது தான் சிறந்தது.

பலர் காருக்குள் செல்லும் போது.. அதுவும் இருட்டாக இருக்கும் போது கூலிங் கிளாஸ் போடுவது காமெடி எனச் சொல்லுவார்கள்... ஆனால் உண்மையில் போலரைஸ்டு கிளாஸ்களை அணிவது சிறந்ததாக இருக்கும். இந்த கிளாஸ் அணிந்தால் உண்மையில் விபத்துக்களைக் கூட தவிர்க்க முடியும். மழைக் காலங்களில் கார்களை ஓட்டும் போது ஏற்படும் சிரமங்களை இது குறைக்க உதவும்


Click it and Unblock the Notifications








