ஊரே ஊட்டி மாதிரி மாறிக்கிட்டு இருக்குது! கார்ல இதை பண்ணலேன்னா அப்புறம் அவ்வளவு தான்!

தற்போது பனி காலம் அதிகரித்து விட்டதால் கார் கண்ணாடிகளில் பனித்துளி படரும் பிரச்சனை வரத்துவங்கிவிட்டது. இதனால் கார் உரிமையாளர்கள் பலர் காலையில் எழுந்து காரை எடுக்கும்போது பெரும் பிரச்சனையை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனை ஏற்படாமல் எப்படி தவிர்க்க வேண்டும் குளிர்காலத்தில் கார்களை பராமரிப்பது எப்படி என்ற விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.

தற்போது குளிர்காலம் துவங்கி விட்டது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாகி விட்டது. இதனால் இரவு நேரம் நீங்கள் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு காலை வந்து பார்த்தால் காரின் கண்ணாடிகளில் பனித்துளிகள் படர்ந்து இருப்பதை காண முடியும். காலை எழுந்து வந்து காரை எடுக்கும்போது இப்படியான பனித்துளிகளை பார்த்தால் பலருக்கு கடுப்பாக இருக்கும். இந்த பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

winter car care tips

இதை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த நீர் துளிகள் எப்படி உருவாகின்றன என நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் இரவு நேரம் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு கார் ஜன்னல் கண்ணாடிகள் அனைத்தையும் முழுவதுமாக ஏற்றிவிட்டு பாதுகாப்பாக காரை லாக் செய்துவிட்டு வந்து விடுவோம். முழுவதுமாக லாக் செய்யப்பட்ட காருக்குள் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி கொண்டே இருக்கும்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் குளிர்காலத்தில் நம் சுற்றுப்புற சூழல் என்பது குளுமையாகிவிடும். காரின் உட்புறம் இருக்கும் வெப்பத்தைவிட காரின் வெளிப்புறம் இருக்கும் வெப்பம் குறைவாக இருக்கும். இதனால் காருக்குள்ளே இருக்கும் வெப்பம் தன்னைத்தானே குளிர்வித்துக் கொள்ள துவங்கிவிடும். அந்த நேரத்தில் வெளிப்புறம் உள்ள வெப்பத்திற்கும் உள்புறள் உள்ள வெப்பத்திற்கும் இடையே இருக்கும் பகுதியில் இதுபோன்ற நீர் துளிகள் உருவாகும்.

winter car care tips

நீர்த்துளிகள் உருவாகிவிட்டால் அதை நீக்குவது என்பது சற்று கடினமான காரியம் தான். இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான கார்களில் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் இருக்கிறது. இந்த சிஸ்டம் இருந்தால் காரை ஸ்டார்ட் செய்தவுடன் அது தானாகவே இந்த பிரச்சனையை எல்லாம் சரி செய்து விடும். ஆனால் இன்றும் சில கார்கள் அந்த சிஸ்டம் இல்லாமல் இருக்கிறது. அப்படியான நேரங்களில் இதை எப்படி சரி செய்வது என முதலில் காணலாம்.

காரில் உள்ள ஏசியை ஹீட்டருக்கு மாற்றி விட்டு விண்டு ஸ்கிரீன் பகுதியை செலக்ட் செய்து ஏசியை பரவ விட்டால் அதிலிருந்து சூடான காற்று வெளியாகி காரின் விண்டு ஷீல்டு பகுதியில் உள்ள நீர் துளிகள் எல்லாம் உடனடியாக ஆவி ஆகிவிடும். அதே நேரம் காரில் உள்ள அனைத்து கண்ணாடிகளையும் ஒரு முறை கீழே இறக்கி மறுபடியும் மேலே ஏற்றி விட்டால் காரின் கண்ணாடியில் உள்ள அனைத்து நீர்த்துளிகளும் அதிலிருந்து நீங்கிவிடும்.

சில காரில் பின்புறம் வைப்பதற்கும் அதே நேரம் பின்புறம் ஹீட்டர் இருக்கும் இதை இரண்டையும் பயன்படுத்தி பின்புறம் உள்ள கண்ணாடியில் உள்ள நீர் துளிகளை நீக்க முடியும். ஆனால் பெரும்பாலான கார்களில் இது இருக்காது. அது இல்லாத கார்களில் துணியை வைத்து துடைப்பதை தவிர வேறு வழி இல்லை.

சரி இப்படியான நீர்த்துளிகள் நம் காரில் படராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து அதை செய்தால் இந்த பிரச்சனை எதுவும் ஏற்படாமலேயே நம் காரை தடுக்க முடியும். இப்படியான ஒரு விஷயம் நம் காரில் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இதற்காக நம் காரை எப்பொழுதும் முற்றிலும் மூடப்பட்ட ஒரு கராஜ் பகுதியில் நிறுத்த வேண்டும். அங்கே பார்க் செய்யப்பட்டால் வெளிப்புறத்தில் உள்ள குளிர் காரை தாக்காமல் இருக்கும். இதனால் இந்த நீர் துளிகள் உருவாவதை தடுக்க முடியும். ஆனால் அனைவருக்கும் இது சாத்தியம் கிடையாது.

ஒருவேளை நீங்கள் காரை வெளியில் தான் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் காருக்குள் எந்தவிதமான தண்ணீரும் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். காருக்குள் இருக்கும் தண்ணீர் கார் உள்ளே கண்டன்ஸேசனை ஏற்படுத்த வழி செய்து விடும். இதனால் காருக்குள் எந்த விதத்திலும் தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் இருந்தால் அதை சுத்தமாக துடைத்து விட்டுப் பின்னர் காரை லாக் செய்து விட்டு செல்லுங்கள்.

அப்படி இல்லை என்றால் மார்க்கெட்டில் டிஹுமிடிஃபையர் விற்பனைக்கு இருக்கிறது. இது குறைந்த விலை தான் இதை வாங்கி உங்கள் காரில் பயன்படுத்தினால் அது காரில் உள்ள நீர் துளிகளை எல்லாம் எடுத்து விடும். சேவிங் கிரீமை கார் கண்ணாடிகளில் வைத்து ஒரு துணியை வைத்து துடைத்து எடுக்கலாம்.

அப்படி செய்தால் அது கார் கண்ணாடி மேல் ஒரு லேசான திரையை உருவாக்கி விடும். அது நீர் துளிகளை கண்ணாடியில் நிற்க விடாது இதன் மூலமும் கார் கண்ணாடிகளில் நீர்துளிகள் படிவதை உங்களால் தடுக்க முடியும். இதில் ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி கார் கண்ணாடிகளில் நீர் படிவதை தவிர்த்துவிடுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: குளிர்காலத்தில் காரை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம் குறிப்பாக இந்த நீர் துளிகள் படராமல் நிச்சயம் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. நீர் துளிகள் கண்ணாடியில் படர்ந்தால் அது கண்ணாடியின் திறனை குறைக்க கூடும். விரைவில் கார் கண்ணாடி பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதே நேரம் நீர் துளிகள் உடன் கார் பயணித்தால் டிரைவருக்கு கண்ணாடி வழியாக சாலையில் உள்ளது தெரிவதும் கஷ்டமாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 1, 2023, 14:34 [IST]
English summary
Winter car care tips how tostop car windows fogging
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+