பனி காலம் வந்தாச்சு! காலையில வண்டிய ஸ்டார்ட் பண்ண கஷ்டமா இருக்கா இதை பண்ணுங்க ஈஸியா ஸ்டார்ட் பண்ணலாம்!
குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது, தற்போது வாகனங்களில் உள்ள இன்ஜினில் இருக்கும் ஆயில் இந்த குளிர் நேரத்தில் அதிக திக்காக மாறிவிடும் இதனால் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் போது இன்ஜினியர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது இப்படியாக வாகனத்தின் இஞ்சின் உள்ளே இருக்கும் ஆயில் குளிரில் உறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற சில முக்கியமான டிப்ஸ்களை தான் இங்கே காணப்படுகிறோம்.
குளிர் நேரங்களில் நாம் வாகனங்களில் இன்ஜின் ஆயிலை மாற்றும் போது திக்கான ஆயுளை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆயிலும் அது உறையும் நிலை குறித்த சில தகவல்களிடம் பெற்றிருக்கும். முக்கியமாக 5w-30 அல்லது 10w-40 என குறிப்பிடப்பட்டிருக்கும். இது இன்ஜினின் குளிர் மற்றும் வெப்பம் தாங்கும் அளவை காட்டுகிறது.

இதில் w க்கு முன்பு உள்ளது தான் எத்தனை டிகிரியில் அந்த இன்ஜின் ஆயில் உரையும் என்பதற்கு அர்த்தமாகும். அதனால் முடிந்த அளவுக்கு முன்னால் இருக்கும் நம்பர் குறைவாக இருக்கும் படியான ஆயிலை பார்த்து வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அது அதிக குளிர் நேரத்திலும் உரையாமல் இருக்கும் இதனால் இன்ஜினிற்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்.
குளிர்ந்த காலத்தில் முடிந்த அளவுக்கு இரவு நேரத்தில் காரை நிறுத்தும் போது காரை ஒரு கவர் செய்து மூடி விடுங்கள். அப்பொழுது வெளியில் உள்ள குளிர் காரணமாக இன்ஜின் பாதிக்கப்படும் அளவு குறையும். இதன் காரணமாக கூட இன்ஜின் ஆயில் உறையும் தன்மை குறையும். இதனால் வாகனத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

சிலர் வெளி மார்க்கெட்டில் கிடைக்கும் பிளாக் ஹீடரை வாங்கி இன்ஜின் பகுதியில் பொருத்தி விடுகிறார்கள். இரவு நேரத்தில் இதை பொறுத்து விட்டால் பகல் நேரம் வரும் வரை இது இன்ஜினுக்கு கதகதப்பான சூழ்நிலையை கொடுத்து இன்ஜின் உள்ளே இருக்கும் ஆயில் உறையாமல் பாதுகாக்கும். இதனால் இன்ஜின் வாழ்நாள் அதிகமாகும்.
குளிர்காலத்தில் கார் தொடர்ந்து பயன்பாட்டில் இல்லை என்றாலும் கார் இன்ஜின் அதிக குளிரை உள்வாங்கி இன்ஜின் உள்ளே இருக்கும் ஆயுளை குறைய வைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் குளிர் காலத்தில் தினமும் வாகனத்தை ஸ்டார்ட் செய்து பயன்படுத்துவது இப்படியான பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க வழிவகுக்கும்.

மார்க்கெட்டில் ஆயில் ஹீட்டர் மற்றும் இன்ஜின் ஹீட்டர்கள் பயன்பாட்டில் உள்ளன. இதை பயன்படுத்துவதன் மூலமும் இன்ஜின் மற்றும் ஆயிலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள முடியும். இதனால் அதிக குளிரான சூழ்நிலைகளிலும் இன்ஜின் உள்ளே இருக்கும் ஆயில் உறையாமல் இருக்கும். இதனால் இன்ஜினில் வாழ்நாள் பாதுகாக்கப்படும்.
குளிர்காலத்தில் இன்ஜின் ஆயில் மட்டுமல்ல பேட்டரியின் செயல்பாடும் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இதனால் குளிர் காலத்தில் நீங்கள் பேட்டரியையும் அவ்வப்போது கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது அப்பொழுதுதான் பேட்டரியின் வாழ்நாளும் அதிகமாகும் நல்ல ஹெல்த்தியான பேட்டரி தான் இஞ்சினை வேகமாக ஸ்டார்ட் செய்ய உதவி செய்யும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாகனத்தை ஸ்டார்ட் செய்ய செல்ப் மோட்டார் சிறப்பாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது இதற்கு போதுமான அளவு பவர் பேட்டரியில் இருந்து தான் எடுக்க வேண்டும் என்பதால் பேட்டரியின் ஆயிரம் இதற்கு முக்கியமான தேவையாக இருக்கிறது. அதனால் அதையும் இந்த குளிர் காலத்தில் பராமரிக்க வேண்டியது கட்டாயம் தான்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குளிர்காலத்தில் வாகன ஓட்டிகள் பலர் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு பல்வேறு சிரமங்களை அனுபவித்து வைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்சனை நீண்டு கொண்டிருக்கும் நிலையில், மேலே சொன்ன டிப்ஸ்களை பாலோ செய்தால் நிச்சயம் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்


Click it and Unblock the Notifications









