இந்த விண்டர் சீசனில் அதிக மைலேஜை பெறுவது எப்படி? இந்த டிப்ஸ் உங்க காசு வேஸ்டாவதை தடுக்க ரொம்ப உதவியா இருக்கும்
நாளுக்கு நாள் இந்தியாவில் குளிர் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, வட இந்தியாவில் குளிர் மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கி இருக்கின்றது. கடந்த சில வாரத்திற்கு முன்னர் வரை வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்து வந்தநிலையில், தற்போது குளிர் மக்களை நடுங்க செய்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழல் நமக்கு மட்டுமில்லைங்க நம்முடைய வாகனத்திற்கும் சில வழிகளில் இன்னலை ஏற்படுத்தும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதனால், அவை மைலேஜை குறைவாக கொடுக்கும் சூழலும் ஏற்படக் கூடும். இதனால்தான் சில குறிப்பிட்ட டிப்ஸ்களை கட்டாயம் இந்த விண்டர் சீஷனில் கடைபிடிக்க வேண்டும் என வாகன வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த சில டிப்ஸ்கள் என்னென்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கார் டயரில் காற்று இருப்பதை உறுதி செய்துக் கொள்ளவும்: சிலர் வெயில் காலத்தில்தான் காரின் டயர்களில் காற்று போதுமானது இருக்க வேண்டும். மழை மற்றும் குளிர் காலத்தில் இந்த விஷயத்தில் பெரிய அளவில் அக்கறை காட்ட வேண்டாம் என அவர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுதான் இல்லை. வெயில் காலத்தைப் போலவே மழை மற்றும் குளிர் காலத்திலும் போதிய அளவு காற்று டயரில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
டயரில் போதிய அளவு காற்று இருந்தால் மட்டுமே போதுமான கிரிப் டயருக்கும்-சாலைக்கும் இடையில் கிடைக்கும். கிரிப்பை மட்டுமி இல்லைங்க, போதிய அளவு மைலேஜ் கிடைக்கவும் இதுவே வழி வகுக்கும். இதுதவிர, தேவையில்லா பஞ்சர் மற்றும் பிற சிக்கல்களில் இருந்தும் தப்பிக்க முடியும். ஆகையால், எந்த நேரத்திலும் டயரில் காற்று குறைவாக இருப்பதை அனுமதிக்காதீர்கள்.
உங்களின் மோசமான கார் ஓட்டும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்: எந்த நேரத்திலும் வாகனத்தை மோசமாக ஓட்டக் கூடாது என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். பலர் மழைக் காலத்தில் மட்டுமே வாகனம் சறுக்கிவிடும். ஆகையால், ஈரப்பதமான சாலையில் மட்டுமே வாகனத்தை பார்த்து ஓட்ட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், பனி காலத்திலும் இதுமாதிரியான சிக்கல் ஏற்படக் கூடலாம்.
அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது என்பது ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமில்லைங்க எரிபொருளையும், அதி விரைவில் விரையமாக்கும். இதனால்தான், தேவையில்லாமல் வாகனத்தின் ஆக்சலரேஷனை அழுத்துவது, அடிக்கடி பிரேக் பிடித்து வாகனத்தை ஓட்டுவது என்பது கூடாது என்கின்றனர். இதை செய்வதனால் எரிபொருள் சிக்கனத்தையும், பாதுகாப்பான ரைடையும் உங்களால் மேற்கொள்ள முடியும்.
எஞ்ஜினை வார்ம்-அப் செய்யவும்: குளிர் மற்றும் மழைக் காலத்தில் எஞ்ஜின் விரைவில் குளிர்ந்த நிலைக்கு சென்றுவிடும். ஆகையால், காலை முதலில் வாகனத்தை ஸ்டார்ட் செய்யும்போது கிக்கரை பயன்படுத்தவும். அதேவேளையில், சில விநாடிகளுக்கு வாகனத்தை ஐடிலிங்கில் ஸ்டார்ட் செய்த வண்ணம் விட வேண்டும். ஆக்சலரேஷனைக் கொடுக்கக் கூடாது.
எஞ்ஜின் குளிர்ந்த நிலையில் இருக்கும் விரைவில் சூடேற்றும் வகையில் இந்த செயல் அமையும். மேலும், தூக்கத்தில் இருந்த ஒருவரை விழிக்கச் செய்து உடனேயே அவரை சுறுசுறுப்பாக ஓட சொல்வதைப் போல் ஆகும். இதனால் எஞ்ஜினின் ஆயுட்காலம் குறைவதோடு எரிபொருளும் தேவையில்லாமல் விரையமாகும். ஆகையால், காலையில் வாகனத்தை ஸ்டார்ட் செய்த உடன் போதுமான அளவு அதை சூடேற அனுமதிப்பது அவசியமாக உள்ளது.
சரியான ஆயிலை தேர்வு செய்யவும்: எஞ்ஜின் ஆயிலைத் தேர்வு செய்யும்போது கட்டாயம் விழிப்புணர்வு தேவை. சிந்தடிக் வகை ஆயிலால் சிலர் தங்களின் கியர்பாக்ஸ் பாதிப்படைந்து இருப்பதாக குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர். இது எஞ்ஜினை பாதிப்படையச் செய்வதோடு தேவையில்லாமல் பெட்ரோலைக் குடிக்கவும் வழிவகுக்கும். ஆகையால், சரியான எஞ்சின் ஆயிலை பன்படுத்துவதே மிக சிறந்த வழியாகும்.
கூடுதல் எடை ஏற்றப்படுவதை தவிர்க்கவும்: மைலேஜ் குறைவதற்கு காணப்படும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக அதிக பாரம் உள்ளது. அதிக பாரத்தை ஏற்றிச் செல்வதனால் கூடுதல் இழுவை திறனில் எஞ்ஜின் இயங்க வேண்டி இருக்கின்றது. இந்த நிலை அதிக எரிபொருள் செலவிற்கு வழிவகுக்கும். ஆகையால், போதுமான அளவு தேவையற்ற எடைகளைக் குறைப்பதே நல்லது. இதனால், கணிசமான அளவு மைலேஜை அதிகரிக்கச் செய்ய முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே கூறப்பட்டவை உடன் சேர்த்து வாகனத்தை எப்போதும் மிக சிறந்த பராமரிப்பில் வைத்திருப்பதும் அவசியமானதாகக் காட்சியளிக்கின்றது. இது உங்கள் வாகனத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்க பெரும் உதவியாக இருக்கும். அத்தோடு, அதிக மதிப்புமிக்க வாகனமாகவும் அது மாற்ற உதவும். இதனால்தான் வாகன பராமரிப்பு என்பது எப்போதும் கட்டாயம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications








