இந்த டிசம்பர் மாசம் லவ்வரை விட கார்ல உள்ள இந்த ரப்பர் தான் ரொம்ப முக்கியும்! எதுக்கு யூஸ் ஆகும் தெரியுமா?
கார்களில் பொருத்தப்பட்டுள்ள வைப்பர்கள் மழைக்காலத்தில் மட்டுமல்லாமல் அதிக தூசு படர்ந்து இருக்கும் நேரத்திலும், காற்று காலங்களிலும் பயன்படும். ஆக மொத்தம் 365 நாளும் இந்த வைப்பர்களின் தேவை இருக்கிறது. ஆனால் குளிர்காலத்தில் அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. இது குறித்த பாதுகாப்பு டிப்ஸ்களை தான் இங்கே நாம் காண போகிறோம்.
குளிர்காலத்தில் நாம் நமது வாகன வைப்பர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் பயண நேரத்தில் திடீரென இந்த வைப்பர் வேலை செய்யவில்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் நீங்கள் பயணிக்கும் போது வெப்பநிலை குறைந்தால் காரின் கண்ணாடியில் பனித்துளிகள் படர ஆரம்பித்து விடும். இந்த பணி துளிகளை நீக்க வைப்பர்கள் வேலை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு கிளியரான விசிபிலிட்டி கிடைக்கும்.

வைப்பர்களை கண்ணாடியில் இருந்து அகற்றி வையுங்கள்: குளிர்காலத்தில் நீங்கள் நீண்ட நேரம் காரை ஒரே இடத்தில் பார்க் செய்துவிட்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் நீங்கள் வைப்பரை கண்ணாடியில் இருந்து அகற்றி வைப்பது தான் சிறந்தது. குளிர்காலங்களில் வைப்பர் பிளேடில் இருக்கும் ரப்பர் கண்ணாடியுடன் ஒட்டி போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதை தவிர்க்க வைப்பறை அகற்றி வைக்கலாம்.
தண்ணீர் தெளிப்பானை கவனியுங்கள்: வாகனத்தில் நீங்கள் பயணிக்கும் போது கண்ணாடியில் அதிகமாக அழுக்கு படர்ந்தால் தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் நேரடியாக காரின் கண்ணாடிகளுக்கு தண்ணீர் தெளிப்பதற்காக கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கருவிகளை பயன்படுத்தி தண்ணீரை தெளித்துக் கொள்ள முடியும். இதில் உள்ள சிறிய ஓட்டையில் இருக்கும் தண்ணீர் குளிர் நேரங்களில் உரைந்து போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த இடத்தை செக் செய்து விட்டு பயணத்தை துவங்குங்கள்.

சுடுதண்ணீரை பயன்படுத்தி சுத்தப்படுத்தாதீர்கள்: காரை தினமும் காலையில் சுத்தப்படுத்தும் சிலருக்கு குளிர்காலம் என்பதால் சுடுதண்ணீரை பயன்படுத்தி காரின் கண்ணாடிகளை சுத்தப்படுத்த முயற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். சுடுதண்ணீரை பயன்படுத்தி காரின் கண்ணாடிகளை சுத்தப்படுத்த முயற்சி செய்தால் குளிர் காலங்களில்விசிபிலிட்டி பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் இதை எக்காரணத்தைக் கொண்டும் செய்யாதீர்கள்.
ரெகுலராக சுத்தப்படுத்துங்கள்: கார் வைப்பரை சில நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் பிரச்சனை தான். அதனால் நீங்கள் அவ்வப்போது கார் ஏறி உங்கள் வைப்பர்களை ஆன் செய்து செக் செய்து கொள்ளுங்கள். தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளித்தாவது காரின் கண்ணாடியை சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக குளிர் காலங்களில் சுத்தப்படுத்தாமல் காரின் கண்ணாடியை வைத்திருந்தால் இது பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

ரப்பரை பாதுகாப்பாக வைத்திருங்கள்: வாகன வைப்பர்களில் இருக்கும் பிளேடு ரப்பரால் ஆனதாகவும் குளிர்காலத்தில் இந்த ரப்பரில் தான் அதிகமான பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இந்த ரப்பர் குளிர் காலத்தில் இறுகிப்போய் கல் போல மாற வாய்ப்புள்ளது. இதனால் அவ்வப்போது உங்கள் காரின் வைப்பர்களில் ரப்பர் சரியாக இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.
ரப்பரை கழட்டி வைப்பது சிறந்தது: குளிர்காலத்தில் நீங்கள் காரை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தாமல் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்க போகிறீர்கள் என்றால் அதிக குளிர் காரணமாக ரப்பரால் உங்கள் காரின் கண்ணாடிக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இப்படியான கார்களில் வைப்பதில் உள்ள ரப்பர் பிளேடுகளை கழட்டி வைப்பது நல்லது.

கார் கண்ணாடி படிமங்களை தனியாக துடையுங்கள்: கார் கண்ணாடிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தால் அதில் தூசி உள்ளிட்ட பல்வேறு படிமங்கள் இருக்கும் இதை நீங்கள் வைப்பரை வைத்து துடைக்க முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் தனியாக ஒரு துணியை வைத்து தூசி எல்லாம் தட்டி விட்டு தூசி எல்லாம் போன பின்பு கார் கண்ணாடியில் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குளிர்காலத்தில் கார் கண்ணாடியை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும். இந்த நேரத்தில் விசிபிலிட்டி சிறப்பாக இருக்க வேண்டும். அதனால் காரின் வைப்பரை முறையாக பராமரிக்க வேண்டிய கட்டாயமாக உள்ளது. இந்த குளிர் காலத்தில் நீங்கள் கார் கண்ணாடியில் கவனம் செலுத்தவில்லை என்றால் பிற்காலத்தில் கார் கண்ணாடியை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் இப்பொழுதே அது சரியாக பராமரித்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









