டிராஃபிக்கில் நிற்கும் போது கூட நேரம் வீணாகாது!! வயர்லெஸ் தான் எல்லாவற்றிலும் பெஸ்ட்!
மின்சார வாகனங்கள் (EV கள்) அவற்றின் சுற்றுச்சூழல் நட்பு தன்மை மற்றும் உயர் செயல்திறனுடன் வாகனத் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நன்மைகளை மேம்படுத்துவதற்கான முக்கியமான அம்சம் திறமையான சார்ஜிங் நடைமுறைகளை கொண்டுவருவது ஆகும். EV சார்ஜிங்கில் உலகில் கவனத்தை ஈர்த்த ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பம் வயர்லெஸ் EV சார்ஜிங் ஆகும். ஆனால் அதன் நன்மை, தீமைகள் என்ன?
வயர்லெஸ் EV சார்ஜிங், தூண்டல் சார்ஜிங் என்றும் அழைக்கப்படுகிறது, இது கார்டுகள் மற்றும் பிளக்குகளின் பயன்பாட்டை நீக்குகிறது. இது இரண்டு சுருள்களை உள்ளடக்கியது - வாகனத்தில் ஒரு ரிசீவர் சுருள் மற்றும் சார்ஜிங் நிலையத்தில் ஒரு டிரான்ஸ்மிட்டர் சுருள். வாகனத்தை சார்ஜிங் பேட் மீது நிறுத்தும்போது, காந்தப்புலத்தின் மூலம் ஆற்றல் நிலையத்திலிருந்து பேட்டரியை சார்ஜ் செய்கிறது.

வயர்லெஸ் EV சார்ஜிங் என்பது EVகளின் எதிர்காலத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது. கேபிள்கள் மற்றும் பிளக்குகள் இல்லாதது சார்ஜிங் ஸ்டேஷனின் வசதி மற்றும் அழகியல் கவர்ச்சிக்கு பங்களிக்கிறது. இந்த தொழில்நுட்பம், வானிலைக்கு சாதகமாக இருப்பதால், மழையின் போது ஏற்படும் மின் அபாயங்கள் பற்றிய கவலையை நீக்குகிறது.
பேட்டரி நிரம்பியவுடன் சார்ஜ் செய்வதை புத்திசாலித்தனமாக நிறுத்தும் சிஸ்டத்தின் திறன் தேய்மானத்தைக் குறைத்து, பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கிறது. இவ்வாறு வயர்லெஸ் சார்ஜிங் வசதியினால் பல நன்மைகள் இருந்தபோதிலும், வயர்லெஸ் EV சார்ஜிங் சில குறைபாடுகளையும் கொண்டுள்ளது. வயர்லெஸ் மோடின் செயல்திறன் வழக்கமான பிளக்-இன் மோட்களை விட குறைவாக உள்ளது. ஏனெனில் ஆற்றல் காற்று மூலம் மாற்றப்படுகிறது, இது ஆற்றல் இழப்புக்கு வழிவகுக்கிறது.

அதுமட்டுமின்றி, வாகனம் மற்றும் சார்ஜிங் பேட் இடையே சீரமைப்பு சிக்கல்கள் ஏற்படலாம். லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு ஆகும் செலவு அதிகமாக இருப்பதன் காரணமாக, சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கு ஆகும் செலவுகள் அதிகமாக இருக்கும். இறுதியாக, ஃபாஸ்ட் சார்ஜிங்கையே பெரும்பாலானோர் விரும்புதால், வயர்லெஸ் சார்ஜிங்கில் மெதுவாக சார்ஜ் ஆகுவது கஸ்டமருக்கு ஒரு தடையாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வயர்லெஸ் EV சார்ஜிங் என்பது தொந்தரவில்லாத சார்ஜிங் மற்றும் வானிலை எதிர்ப்பு வசதிகள் போன்ற குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்ட ஒரு நம்பிக்கைக்குரிய தொழில்நுட்பமாகும். இருப்பினும், இதனிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. பாரம்பரிய சார்ஜிங் முறைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த சார்ஜிங் திறன், நிறுவுவதற்கு ஆகும் அதிக செலவுகள் மற்றும் மெதுவான சார்ஜிங் வேகம் ஆகியவை இதன் சாத்தியமான குறைபாடுகளை எடுத்துக் காட்டுகின்றன.

வாகனத் துறையில் புதுமை முக்கிய இடத்தைப் பெறுவதால், தடையற்ற, திறமையான EV சார்ஜிங்கின் சகாப்தத்தை முன்வைத்து, இந்த சவால்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதை கண்டறிவது சுவாரஸ்யமாக இருக்கும். கார்களில் மொபைல் போன்களை முந்தைய காலங்களில் பிளக்-இன் முறையில் சார்ஜ் செய்துக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று பல கார்களில் வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி வந்துவிட்டது. அதுபோல, வயர்லெஸ் இவி சார்ஜிங் வசதியையும் எதிர்காலத்தில் பரவலாக பயன்படுத்துவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









