இதுக்கு முன்ன எலெக்ட்ரிக் காரையே வாங்குனது கிடையாதா? முதல்முறையாக ஷோரூம் போறவங்களுக்கு சில டிப்ஸ்!!

உலக இவி தினம் (World EV Day), ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதியில் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்தும் விதமாகவும் உலக இவி தினம் ஆனது கிட்டத்தட்ட அனைத்து நாட்டு அரசாங்கங்களினாலும் கொண்டாடப்படுகிறது.

மின்சார வாகனங்கள் பிரபலமடைந்து வருவதால், அவற்றை பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியமாகிறது. மற்ற பெட்ரோல்/ டீசல் வாகனங்களை போன்று எலெக்ட்ரிக் வாகனங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த பேட்டரி தொழிற்நுட்பம், மோதல் சோதனை (Crash Test) மற்றும் மென்பொருள் புதுப்பிப்புகளில் கார் கம்பெனிகள் கவனம் செலுத்துகின்றன.

tips for first-time electric car buyers

இதன் மூலமாக எலெக்ட்ரிக் கார்களில் கொண்டுவரப்படும் தொடர் முன்னேற்றங்கள் நிலையான போக்குவரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதுகாப்பதை நோக்கி நம்மை நகர்த்தும். இதன் மூலமாகவே, பெட்ரோல்/ டீசல் கார்களை வாங்கியவர்களை முதல்முறையாக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்க வைக்க ஊக்கப்படுத்த முடியும்.

மேலும், இதுவரையில் எந்தவொரு காரை வாங்காதவர்களையும் முதல் காரையே எலெக்ட்ரிக் காராக வாங்க வைக்க முடியும். அவ்வாறு முதல்முறையாக எலெக்ட்ரிக் காரை வாங்குபவர்கள் ஒரு சில விஷயங்களை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். வாங்கும் எலெக்ட்ரிக் காரின் பேட்டரி திறன் மிகவும் முக்கியமானது. முழு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

tips for first-time electric car buyers

உங்களது வழக்கமான தினசரி பயணத் தூரத்தையும், வாங்கும் காரின் பேட்டரி திறனையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதிக தூரம் பயணிக்க வேண்டியிருந்தால், அதிக திறன் கொண்ட பேட்டரி உள்ள எலெக்ட்ரிக் காரை தேர்வு செய்யலாம். வாங்கும் எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு அடுத்த முக்கியமான அம்சம் ஆகும்.

உங்கள் வசிப்பிடத்திலும், நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சார்ஜிங் நிலையங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டிலேயே காரை சார்ஜ் செய்ய முடியுமா என்பதையும் ஆராய வேண்டும். பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் அவற்றின் வகைகளையும் (AC, DC ஃபாஸ்ட் சார்ஜிங்) கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், எலெக்ட்ரிக் காரின் பராமரிப்புச் செலவுகள் குறித்தும் அறியவும்.

tips for first-time electric car buyers

வழக்கமான பெட்ரோல்/டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், எலெக்ட்ரிக் கார்களின் பராமரிப்புச் செலவு குறைவாக இருக்கும். இருப்பினும், பேட்டரி மாற்றுவதற்கான செலவு போன்ற நீண்ட காலத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளும் விஷயங்களையும் கவனத்தில் கொள்வது நல்லது. இவற்றுடன், அரசாங்கத்தின் சலுகைகள் மற்றும் மானியங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். பல நாடுகள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க வரிச் சலுகைகள், மானியங்கள் மற்றும் பிற ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன.

இவை வாகனத்தின் ஒட்டுமொத்த விலையைக் கணிசமாகக் குறைக்க உதவும். இவற்றுடன், வாகனத்தின் பாதுகாப்பு அம்சங்களையும் சரிபார்க்க வேண்டும். வாகனத்தின் செயல்திறன், ஓட்டும்போது கிடைக்கும் அனுபவம் ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். சோதனை ஓட்டம் மேற்கொள்வது சிறந்த முடிவை எடுக்க உதவும். பல்வேறு மாடல்களை ஒப்பிட்டு, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த எலெக்ட்ரிக் காரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல்/ டீசல் கார்களை வாங்குவது போன்றதுதான் எலெக்ட்ரிக் கார்களை வாங்குவதும். காரை சார்ஜ் செய்யும் வசதி எளிதில் அணுகக்கூடியதாக உள்ளதா, காரின் பேட்டரியின் திறன் என்ன? அதனை முழுமையாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக எவ்வளவு தொலைவு பயணிக்கலாம்? என்பது உள்ளிட்ட சில விபரங்களை தெரிந்துக் கொண்டால் ஜாலியாக ஷோரூமில் இருந்து எலெக்ட்ரிக் காரை ஓட்டி செல்லலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2025, 22:56 [IST]
English summary
World ev day special tips for first time electric car buyers check all details here
மேலும்... #electric car #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X