இவி ஓனர்களே! இது தெரியாம உங்க வண்டி பக்கமே போயிடாதீங்க! அப்புறம் ஏழை ஆகிடுவீங்க!

இந்தியாவில் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் அதிகம் வாங்கிக் கொண்டே வருகிறது புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பாரம்பரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இது குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தாலும் சிலருக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது குறித்த தயக்கங்கள் இருக்கிறது. அது முக்கியமான ஒரு தயக்கம் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் ஒரு முறை சார்ஜ் போட்டால் எவ்வளவு தூரம் செல்லும் என்ற பய மக்களுக்கு இருக்கிறது. இதனால் நீண்ட தூரம் எதற்கு ஆனால் பயணிக்க முடியாது என நம்புகின்றனர்.

world ev day

பல எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் பேட்டரி நீண்ட காலம் உழைக்கும் வகையிலும் அதே நேரம் அதிக ரேஞ்சை தரும் வகையிலும் இருக்கும் வகையில் வடிவமைத்து வருகின்றனர். இதற்கிடையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சிலர் டிப்ஸ்களை ஃபாலோ செய்வது மூலம் தங்கள் வாகனத்தில் உள்ள பேட்டரியின் ஆயுள் காலத்தை அதிகரிக்கவும் பேட்டரியின் ரேஞ்ச் தரும் திறனை அதிகரிக்கவும் முடியும் அது எப்படி என காணலாம்.

அதிக வெப்பம் வேண்டாம்: வாகனங்களை பொருத்தப்பட்ட பேட்டரி அதிக அளவில் சூடானால் அதன் திறன் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் வாகனங்களை பார்த்து செய்யும் போதும் அல்லது ஓட்டும்போதும் வாகனம் அதிக அளவில் சூடாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. வாகனத்தின் பேட்டரி அதிகமாக சூடாகாமல் இருந்தால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கும் அதில் உள்ள பேட்டரியில் உள்ள மின் சக்தியின் அளவும் அதிகமாக இருக்கும்.

world ev day

ஃபாஸ்ட் சார்ஜிங்கை தவிர்க்கவும்: பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜர் மற்றும் நார்மல் சார்ஜர் என இரண்டு விதமான சார்ஜர் வழங்கப்படுகின்றன. இதில் பாஸ்ட் சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் பேட்டரி செல்களுக்கு அதிகமான பிரஷரை குறைவான நேரத்தில் செலுத்தும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பேட்டரி வேகமாக சார்ஜ் ஆனாலும் அதன் ஆயுட்காலம் குறையும் அதனால் முடிந்த அளவிற்கு மெதுவாக சார்ஜ் ஏறும் சார்ஜர்களை பயன்படுத்தினால் அதன் ஆயுள் அதிகமாக இருக்கும் தொடர்ந்து ஒரு ஆண்டு ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரியை பயன்படுத்தினால் ஒவ்வொரு ஆண்டும் பேட்டரியின் திறன் 10 சதவீதம் வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

world ev day

சார்ஜ் பராமரிப்பு: நீங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் போது அதன் பேட்டரியை முழுமையாகவும் சார்ஜ் செய்யக்கூடாது. அதே நேரம் அந்த சார்ஜ் முழுமையாக வற்றிப் போகும் அளவிற்கு பயன்படுத்தக் கூடாது. இரண்டிற்கு
இடையில் சரியாக சார்ஜை பேலன்ஸ் செய்ய வேண்டும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் காரின் பேட்டரி 20 சதவீதம் வரும்போது அதை சார்ஜ் செய்து விட வேண்டும். 80 சதவீதம் பேட்டரி வரும்போது அதன் சார்ஜை நிறுத்தி விட வேண்டும் 20 முதல் 80 வரை பேட்டரி அவரை வைத்து தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தி வந்தால் பேட்டரியின் ஆயுள் காலம் அதிகமாக இருக்கும்.

அடிக்கடி சார்ஜ் போடாதீங்க: பேட்டரி வாகனங்களை பயன்படுத்தும் போது அதை தேவையில்லாமல் அடிக்கடி சார்ஜ் செய்து வருகிறார்கள். முழுமையாக பேட்டரி சார்ஜ் ஏறியதும் சுமார் 10-15 கிலோமீட்டர் ஓட்டிவிட்டு மீண்டும் பேட்டரியில் 80 சதவீதம் சார்ஜ் இருக்கும்போதே மீண்டும் நிரப்பி கொள்ள வேண்டும் என சார்ஜ் போடுகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம் பேட்டரி சார்ஜ் 30 சதவீதத்திற்கு கீழ் வந்த பிறகு சார்ஜ் போட்டாலே போதுமானது.

ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துங்கள்: உங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வழங்கும் போது அதன் தயாரிப்பு நிறுவனம் அதற்கான ஒரிஜினல் சார்ஜரையும் வழங்கும் அதே சார்ஜரையை நீங்கள் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். வேறு சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம் அதிகமான மின் சக்தி பேட்டரியில் ஏற வாய்ப்புள்ளது. இதனால் பேட்டரியின் திறன் குறைய வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எப்படி நாம் செல்போனை சார்ஜ் செய்கிறோமோ அதே போல் தான் எலெக்ட்ரிக் வாகனங்களையும் சார்ஜ் செய்வதும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள சரியான வழிமுறைகளை பின்பற்றி உங்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது மூலம் உங்களின் வாகனத்தின் பேட்டரி ஆயுள் அதிகமாகவும் அதே நேரம் அதிக ரேஞ்ச் கிடைக்கும் பேட்டரியாகவும் அது இருக்கும் என்பது சந்தேகம் இல்லை

More from DriveSpark

Article Published On: Saturday, September 9, 2023, 15:00 [IST]
English summary
World ev day strategies for extending the lifespan of your ev battery
மேலும்... #எப்படி #how to
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X