பட்ஜெட்டுக்கு பின்னும் பழைய விலையிலேயே புதிய கார் வாங்கலாம்!

பட்ஜெட்டில் கார், பைக்குகள் மீதான உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் கார், பைக்குகள் விலையை உயர்த்தி வருகின்றன.
இந்த நிலையில், பட்ஜெட்டு்க்கு பின் கார், பைக் விலை உயர்த்தப்பட்டாலும், பழைய ஸ்டாக்குகள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட வேண்டும். சில டீலர்களில் பட்ஜெட்டுக்கு முன் வந்த பழைய ஸ்டாக்கை புதிய விலையை கூறி விற்பனை செய்ய முற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ.5,000 முதல் ரூ.80,000 வரை கார்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், பழைய ஸ்டாக்கில் வந்த கார்களை புதிய விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் நாம்தான் சற்று உஷாராக இருக்க வேண்டும்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மார்ச் 16ந் தேதி முதல் அனுப்பப்பட்ட கார் மற்றும் பைக்குக்கு மட்டுமே புதிய விலை பொருந்தும். எனவே, உற்பத்தி நிறுவனங்களிலிருந்து அனுப்பப்படும் இன்வாய்ஸ் மற்றும் ஆவணங்களை பார்த்து நீங்கள் வாங்கும் கார் அல்லது பைக் புதிய ஸ்டாக்தான் என்பதை உறுதி செய்து வாங்க வேண்டியது அவசியம்.
இதை ஹூண்டாய், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களும் விளக்கமாக தெரிவித்துள்ளன. மேலும், டீலரிடம் உள்ள பழைய ஸ்டாக்குகள் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும் என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


Click it and Unblock the Notifications








