கேரளா முழுக்க இவரை பற்றி தான் பேச்சு... இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய பொறுப்பு!!

வழக்கமான சொகுசு கார்களை காட்டிலும் லேண்ட் ரோவர் கார்கள் சற்று வித்தியாசமானவை மற்றும் ஸ்பெஷலானவை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்கள் கொஞ்சம் அதிக கம்பீரமானதாகவும், பிரம்மாண்டமானதாகவும் இருக்கின்றன. இதன் காரணமாகவே லேண்ட் ரோவர் கார்களை வாங்குவதற்கு நம் இந்தியாவிலும் அதிக பேர் விரும்புகின்றனர். குறிப்பாக, ஆட்டோமொபைல் வாகனங்களை மிகவும் விரும்பக்கூடிய கேரளாவில் பெண் தொழிலதிபர் ஒருவர் இளம் வயதில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை சொந்தமாக்கி உள்ளார்.

லேண்ட் ரோவர் கார்களில் பிரபலமானவை ரேஞ்ச் ரோவர் கார்கள் ஆகும். அதற்கடுத்து அதிக வரவேற்பை பெற்று வருபவை டிஃபெண்டர் கார்கள் ஆகும். டிஃபெண்டர் கார்கள் நன்கு பெட்டகம் வடிவில் கம்பீரமானவைகளாக உருவாக்கப்படுகின்றன. இதனால், இந்தியாவில் நிறைய பேரது ஃபேவரட் கார் லிஸ்ட்டில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார் உள்ளது.

kerala s youngest entrepreneur owns defender

குறிப்பாக, மும்பையில் தெருவுக்கு ஒரு டிஃபெண்டர் காரை பார்க்க முடியும். அதேபோல், கேரளாவிலும் கணிசமான எண்ணிக்கையிலான டிஃபெண்டர் கார்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், கேரளாவில் இளம் வயதில் பெண் ஒருவர் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காருக்கு உரிமையாளர் ஆகி உள்ளார். அவர் பெயர், கிறிஸ்டீனா நோபல் (Christeena Noble) ஆகும்.

கேரளாவின் பத்தனம்திட்டாவில் இருந்து பல்வேறு பகுதிகளில் செயல்படும் SMET இண்டர்நேஷ்னல் பள்ளிகளின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டீனா நோபல் செயல்படுகிறார். இவரது பள்ளிகள் கேரளாவின் கொல்லம் மற்றும் கோட்டயம் நகரங்களுக்கு இடையே நிறைய இடங்களில் செயல்படுகிறது. மேலும், பள்ளிகளை சிறப்பாக நிர்வகிப்பதற்காக கேரள அரசாங்கத்தின் சிறந்த அகடாமி விருதையும் கிறிஸ்டீனா நோபல் பெற்றுள்ளார்.

kerala s youngest entrepreneur owns defender

இத்தகைய தொழிலதிபர் தற்போது விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை சொந்தமாக்கி உள்ளார். இதன் மூலம், கேரளாவில் இளம் வயதில் டிஃபெண்டர் காரை சொந்தமாக்கி இருப்பவராக பெண் தொழிலதிபர் கிறிஸ்டீனா நோபல் விளங்குகிறார். இதுகுறித்த அவரது சமூக வலைத்தள பதிவில், "கனவு உண்மையாகிது. பல வருட இடைவிடாத கடின உழைப்பு, எண்ணற்ற மணிநேரம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு பிறகு உண்மையிலேயே சிறப்பான ஒன்றை அடைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.

மேலும் தன் பதிவில், "இது வெறும் வாகனம் அல்ல; பகிரப்பட்ட பார்வை மற்றும் உறுதியுடன் குழுவாக ஒன்றாக இணைந்தால் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு சின்னமாகும். எதிர்கொள்ளும் ஒவ்வொரு தடைகளும், ஒவ்வொரு நள்ளிரவிலும், குழுப்பணியின் ஒவ்வொரு கணமும் இந்த பெருமைமிக்க சாதனைக்கு எங்களை இட்டு சென்றுள்ளது. ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் எங்கள் அசைக்க முடியாத குழுவிற்கு நன்றி. இந்த டிஃபெண்டர் எங்கள் பயணத்திற்கு ஒரு சான்றாகும்" என குறிப்பிட்டுள்ளார்.

kerala s youngest entrepreneur owns defender

மற்றப்படி, லேண்ட் ரோவர் டிஃபெண்டர் கார்களில் எந்த மாடலை கிறிஸ்டீனா நோபல் வாங்கியுள்ளார் என்கிற விபரம் கிடைக்க பெறவில்லை. இந்தியாவில் 90, 110 மற்றும் 130 என 3 விதமான டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.04 கோடியில் இருந்து ரூ.2.85 கோடி வரையில் உள்ளன. இதில், டிஃபெண்டர் 90 கார் ஆனது டீசல் என்ஜின் உடன் மட்டுமே கிடைக்கிறது.

இந்தியாவில் டிஃபெண்டர் கார்கள் மொத்தம் 3 விதமான பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கின்றன. இதில், 2.0 லிட்டர், 3.0 லிட்டர் மற்றும் 5.0 லிட்டர் வி8 என்கிற 3 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்கள் மற்றும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளிட்டவை அடங்குகின்றன. இவற்றுடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வாயிலாக வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடினமாக உழைத்தால் யார் வேண்டுமானாலும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் போன்ற விலையுயர்ந்த காரை வாங்கலாம் என்பதற்கு கேரள தொழிலதிபர் கிறிஸ்டீனா நோபல் சிறந்த உதாரணம் ஆகும். இருப்பினும், தன்னுடைய சொந்த முயற்சியால் கிடைத்தது என சொல்லாமல், குழுவினரின் முயற்சியால் கிடைத்துள்ளது என கூறுவது கிறிஸ்டீனா நோபலின் தாராள மனசை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 21:59 [IST]
English summary
Youngest kerala entrepreneur owns land rover defender check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X