1.6 லட்சம் பேர் பயன்படுத்திய டிஜி யாத்ரா ஆப்! இனி விமான பயணம் செய்யும் போது நீங்களும் பயன்படுத்துங்க!

விமான பயணம் என்பது மிகவும் வேகமானது. நாம் விமானத்தில் ஏறி அமர்ந்த சில மணி நேரங்களில் வெகு தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று விட முடியும். விமான பயணம் என்பது வேகமானது என்பதால் பலர் விமானத்தில் செல்ல விரும்புவார்கள். ஆனால் விமானத்தில் பயணிப்பது எவ்வளவு விருப்பமோ விமான பயணத்தைத் துவங்குவதற்கு முன்பு விமானத்தில் விமானத்தில் ஏறுவதற்கு இருக்கும் நடைமுறை மிகவும் தலைவலி மிக்கது.

விமான நிலையத்திற்குள் நுழைவதற்கே விமான டிக்கெட் மற்றும் டிக்கெட் நம்முடையது தான் என்பதற்கான அடையாள அட்டை ஆதாரம் ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். பின்னர் போர்டிங் பாஸ், செக்யூரிட்டி செக், விமானத்தின் போர்டிங், வெளிநாட்டுப் பயணம் என்றால் இமிகிரேஷன் உள்ளிட்ட பல இடங்களில் விமான பயணம் குறித்த ஆவணங்களை எல்லாம் காட்ட வேண்டும்.

1.6 லட்சம் பேர் பயன்படுத்திய டிஜி யாத்ரா ஆப்! இனி விமான பயணம் செய்யும் போது நீங்களும் பயன்படுத்துங்க!

இது பயணிகளுக்கு மிகப்பெரிய அசெளகிரியத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதற்காக மத்திய அரசு விமான நிலையங்களில் டிஜிட்டல் முறையில் இந்த சோதனை மாற்ற டிஜி யாத்ரா என்ற ஆப்பை அறிமுகம் செய்துள்ளனர். அதன்படி நீங்கள் இந்த ஆப்பை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆப்பில் உங்கள் அடிப்படைத் தகவல்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இதை நீங்கள் விமான நிலையத்தில் காட்டினால் போது உங்களுக்கான அடையாளம் செக் செய்யப்படும்.

இந்த ஆப்பை கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா என்பவர் டில்லி, பெங்களூரு மற்றும் வாரணசி விமான நிலையங்களில் அறிமுகப்படுத்தினார். பின்னர் இது முதல் கட்டமாக கொல்கத்தா, புனே, விஜயவாடா மற்றும் ஐதராபாத் ஆகிய விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பை கடந்த 2022 டிசம்பர் 1 முதல் கடந்த பிப்.,14ம் தேதி மொத்தம் 1.6 லட்சம் பயணிகள் பயன்படுத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த டிஜி யாத்ரா என்பது பயணிகள் விரும்பினால் பயன்படுத்தலாம் என்ற வகையிலான ஆப் தான். இந்த ஆப் கட்டாயம் கிடையாது. மேலும் இந்த ஆப்பை பயன்படுத்துவது மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுவிடுமோ என்ற பயம் வேண்டாம். இந்த ஆப்பில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் சர்வரில் சேமிக்கப்படாது.

இந்த ஆப்பில் நீங்கள் பதிவு செய்யும் தகவல்கள் உங்கள் செல்போனிலேயே தான் பதிவு செய்யப்படும் பின்னர். இந்த தகவல்கள் குறிப்பிட்ட விமான நிலையத்திற்கு உங்கள் பயணம் நெருங்கும் காலத்திற்கு மட்டும் பகிரப்பட்டும். அதுவும் உங்கள் பயணம் முடியும் வரை மட்டும் தான். உங்கள் பயணம் முடிந்த பின்பு அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் இது தானாக விமான நிலையத்தின் சர்வரிலிருந்து அழிக்கப்பட்டு விடும். இதனால் உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு இல்லை.

இந்த ஆப் இருந்தால் விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் விமானத்தில் ஏறிச் செல்வது வரை அனைத்திற்கும் அடையாள அட்டையாக இந்த ஆப்பை பயன்படுத்திக்கொள்ள முடியும். எளிதாக இருப்பதால் ஏராளமான பயணிகள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆப் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் இதற்கான அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. மேலும் விமான நிலையங்களில் இதற்கான விளம்பர பலகைகளும் அதில் இந்த ஆப்பை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற செய்முறை விளக்கமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் முறையான போர்டிங்கை பயோமெட்ரிக் போர்டிங் சிஸ்டம் என ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி கூறுகிறது. தற்போது இது ஒரு சில முக்கியமான விலை நிலையங்களில் மட்டுமே இருந்தாலும் விரைவில் அனைத்து விமான நிலையங்களுக்கும் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, February 24, 2023, 18:30 [IST]
English summary
1 6 lakh air travel passangers used digi yatra in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+