அமித் ஷாவின் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கிடுக்குப்பிடி போடும் தேசிய பசுமை தீர்பாயம்...!!

Written By:

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் பேரணி ஒன்றில் ஒரு லட்சம் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய சுகாத்துறை அமைசக்கத்திற்கு தேசிய பசுமை தீர்பாயம் நோட்டீஸ் அனுப்பவுள்ளது.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

அரியானா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடக்கும் பாஜக பேரணியில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமிஷ் ஷா பங்குபெறுகிறார். வரும் 15ம் தேதி நடக்கும் இந்த பேரணியில் சுமார் ஒரு லட்சம் அளவிலான இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

பேரணியில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை சுகாதாரத்தை பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்டி தேசிய பசுமை தீர்பாயத்தில் விக்டர் திசா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

நீதிபதி எஸ்.பி. வாங்தி முன்பு வந்த இந்த வழக்கில் மனுதாரர் விக்டர் திசா சார்பாக சுமீர் சோதி வாதாடினார். அப்போது அவர், பேரணியில் பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களால் சுற்றுப்புற காற்றில் மாசு ஏற்படும் என வாதத்தை முன்வைத்தார்.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

தொடர்ந்து அவர், மோசமான காற்றால் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதுபோன்ற மோட்டார் சைக்கிள் பேரணிகள் சுகாதாரத்தை மேலும் பாதிக்கச் செய்யும் என்று சுமீர் சோதி தெரிவித்தார்.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

விக்டர் திசா தொடர்ந்த மனுவில் அரியானா ஜிந்த் பேரணியில் பைக்குகளுக்கு பதிலாக சைக்கிள்கள் பயன்படுத்தலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

சைக்கிள்களை பேரணியில் பயன்படுத்தினால் அது சுகாதாரத்தை பாதிக்காது மற்றும் உடல்நலத்திற்கு நல்லது எனவும் மனுவில் குறிபிடப்பட்டு உள்ளது.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

பரபரப்பான சூழ்நிலையில் இந்த மனு தேசிய பசுமை தீர்பாயத்தின் நீதிபதி எஸ்.பி. வாங்தி முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

அமித் ஷா மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தீர்பாயம் செக்..!!

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பி. வாங்தி, ஹரியானா அரசு அதன் மாசுகட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை பிப். 13ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் விடுக்க உத்தரவு பிற்பித்துள்ளார்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: One Lakh Bikes Expected to Participate At Amith Shah's Jind Rally. Click for Details...
Story first published: Saturday, February 10, 2018, 14:23 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark