இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... எலெக்ட்ரிக் பஸ்ஸில் பயணம் செய்தால் ஐபேடு... அரசின் சூப்பரான திட்டம்!
எலெக்ட்ரிக் பஸ்ஸில் பயணம் செய்தால், ஐபேடு பரிசாக வழங்கப்படும் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மே 24ம் தேதி, 150 புதிய எலெக்ட்ரிக் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் 3 நாட்களுக்கு அனைவரும் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவித்தார். அதாவது மே 24, மே 25 மற்றும் மே 26 ஆகிய 3 நாட்கள் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் அனைவருக்கும் இலவச பயணம் வழங்கப்பட்டது.

இந்த சூழலில், மேற்கண்ட 3 நாட்களில் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி 3 நாட்களில் சுமார் 1 லட்சம் பயணிகள் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் இலவசமாக பயணித்துள்ளனர். டெல்லி அரசு இந்த தகவலை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

டெல்லி அரசின் தரவுகளின்படி முதல் நாளான மே 24ம் தேதி இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் 12 ஆயிரம் பயணிகள் இலவசமாக பயணித்துள்ளனர். அதற்கு அடுத்த நாள், அதாவது மே 25ம் தேதி 28 ஆயிரம் பயணிகள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். 3வது மற்றும் கடைசி நாளான மே 26ம் தேதி 52 ஆயிரம் பயணிகள் இலவச பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மூன்று நாட்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக சுமார் 1 லட்சம் பயணிகள் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் பயணம் செய்துள்ளனர். 3 நாட்களிலும் ஒட்டுமொத்தமாக பயணம் செய்தவர்களில், சுமார் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆண், பெண் பாகுபாடு இன்றி அனைவருக்கும் மேற்கண்ட 3 நாட்கள் இந்த எலெக்ட்ரிக் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களை ஆய்வும் செய்தனர்.

இதற்கிடையே #IRideEbus என்ற செல்ஃபி போட்டியையும் முதல் அமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தொடங்கி வைத்துள்ளார். எலெக்ட்ரிக் பஸ்களில் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட செல்ஃபிக்கள் மூலமாக பயணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த போட்டிக்கு சமூக வலை தளங்களில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த போட்டியில் அதிகம் லைக் செய்யப்பட்ட மற்றும் அதிகம் பகிரப்பட்ட 3 புகைப்படங்கள் தேர்வு செய்யப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. அந்த பயணிகளுக்கு ஐபேடு பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் பலர் தற்போது எலெக்ட்ரிக் பஸ்களில் செல்ஃபி எடுத்து, அதனை சமூக வலை தளங்களில் ஆர்வமாக பகிர்ந்து வருகின்றனர்.

எலெக்ட்ரிக் பஸ்கள் குறித்த விழிப்புணர்வை அனைவர் மத்தியிலும் ஏற்படுத்துவதுதான் இந்த போட்டியின் நோக்கம். டெல்லி அரசு தற்போது அறிமுகம் செய்துள்ள எலெக்ட்ரிக் பஸ்களில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதில், ஜிபிஎஸ் டிவைஸ்கள், சிசிடிவி கேமராக்கள், பேனிக் பட்டன்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இதுதவிர மாற்றுத்திறனாளிகள் ஏறி, இறங்குவதற்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. டெல்லி அரசு காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக பல்வேறு விதங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை வேகமாக ஊக்குவித்து வருகிறது. டெல்லியை இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதை அடைவதற்காக இப்படி பல்வேறு முயற்சிகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து கொண்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாது, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள பலரும், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் வாகனங்கள் பொதுமக்கள் மத்தியில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் செல்வாக்கை இழக்க தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








