10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடித்து ஓட்டுவது பாதுகாப்பானது? என்பதை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

கார் ஓட்டும்போது ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்க வேண்டும்? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும். பொதுவாக 10 மற்றும் 2 விதிமுறைப்படிதான் ஸ்டியரிங் வீலை பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. முந்தைய காலங்களில் நீங்கள் கார் ஓட்டி பழகும்போது உங்களுக்கு இப்படிதான் சொல்லி கொடுத்திருப்பார்கள்.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

சரி, அது என்ன 10 மற்றும் 2 விதிமுறை என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அதாவது காரின் ஸ்டியரிங் வீலை கடிகாரம் என நினைத்து கொள்ளுங்கள். கடிகாரத்தில் 10 மற்றும் 2 ஆகிய எண்கள் எங்கு இருக்குமோ? அங்கு உங்கள் கைகள் இருக்க வேண்டும். உங்கள் இடது கை 10ம் எண் இருக்கும் இடத்திலும், உங்கள் வலது கை 2ம் எண் இருக்கும் இடத்திலும் இருக்க வேண்டும். இதுதான் 10 மற்றும் 2 விதிமுறை.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. இனி 10 மற்றும் 2 விதிமுறைப்படி ஸ்டியரிங் வீலை பிடிக்க கூடாது என தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஏஜென்சிகள் பலவும், பாரம்பரியமான 10 மற்றும் 2 விதிமுறையை பின்பற்ற வேண்டாம் என கூறுகின்றன. அதற்கு பதிலாக 9 மற்றும் 3 விதிமுறைக்கு கார் ஓட்டுனர்கள் அனைவரும் மாற வேண்டும் எனவும் அவை தெரிவிக்கின்றன.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

கடிகாரத்தில் 9 மற்றும் 3 ஆகிய எண்கள் எங்கு இருக்குமோ, அதன்படி ஸ்டியரிங் வீலை பிடித்து ஓட்டுவதுதான் 9 மற்றும் 3 விதிமுறை. காவல் துறை மற்றும் கார் கிளப்கள் ஆகியவையும் கூட 10 மற்றும் 2 விதிமுறையை பின்பற்ற வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக 9 மற்றும் 3 விதிமுறையை பின்பற்றுங்கள் என்றுதான் அறிவுறுத்துகின்றன.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

இந்த மாற்றத்திற்கு பாதுகாப்புதான் மிகவும் முக்கியமான காரணம். முந்தைய காலகட்டத்தில் கார்களில் ஏர்பேக்குகள் இருக்காது. ஆனால் தற்போது பட்ஜெட் கார்களில் கூட ஏர்பேக்குகள் இடம்பெறுவது சாதாரணமான விஷயமாகி விட்டது. இதன்படி ஸ்டியரிங் வீலின் மைய பகுதியிலும் ஏர்பேக் வழங்கப்பட்டிருக்கும்.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

விபத்து நேரும்போது மணிக்கு 150-200 மைல்கள் வேகத்தில் ஏர்பேக் விரிவடையும். அப்போது வழக்கமான 10 மற்றும் 2 விதிமுறைப்படி நீங்கள் ஸ்டியரிங் வீலை பிடித்திருந்தால், வேகமாக விரிவடையும் ஏர்பேக்கிற்கு நேராக உங்கள் கை இருக்கும். அதாவது ஏர்பேக்கின் பாதையில் உங்கள் கைகள் இருக்கும். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

விபத்தின்போது உங்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதுவே உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. அதாவது தவறான பொஷிஷனில் உங்கள் கைகள் இருந்தால், ஏர்பேக் விரிவடையும்போது உங்களுக்கு அடிபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கடந்த காலங்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்ததும் உண்டு.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

ஏர்பேக் விரிவடையும்போது, ஸ்டியரிங் வீலில் தவறான பொஷிஷனில் கையை வைத்திருந்த காரணத்தால், சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால், 9 மற்றும் 3 விதிமுறைப்படி ஸ்டியரிங் வீலை பிடிப்பதுதான் சிறந்தது. இங்கே மற்றொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

தற்போது இருக்கும் ஸ்டியரிங் வீல்கள் உடன் ஒப்பிடும்போது கடந்த காலங்களில் இருந்த ஸ்டியரிங் வீல்கள் மிகவும் பெரியவை. பெரிய ஸ்டியரிங் வீல்களில் பாதுகாப்பாக திருப்ப வேண்டுமென்றால், 10 மற்றும் 2 விதிமுறைப்படி கையை வைத்திருப்பது அவசியம். ஆனால் தற்போதைய நவீன கார்களில் இருக்கும் ஸ்டியரிங் வீல்கள் மிகவும் சிறியவை.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

எனவே காரை பாதுகாப்பாக திருப்புவதற்கு ஸ்டியரிங் வீலை 10 மற்றும் 2 விதிமுறைப்படி பிடித்திருக்க வேண்டியதில்லை. 9 மற்றும் 3 விதிமுறைப்படி ஸ்டியரிங் வீலை பிடித்திருந்தாலே, காரை எளிதாகவும், பாதுகாப்பாகவும் திருப்ப முடியும். எனவே இனிமேல் 9 மற்றும் 3 விதிமுறையின்படி ஸ்டியரிங் வீலை பிடியுங்கள்.

10 மற்றும் 2 ரூல் தப்பு! கார் ஸ்டியரிங் வீலை எப்படி பிடிக்கணும் தெரியுமா? இந்த விஷயத்தை யாரும் சொல்ல மாட்டாங்க

காரை பாதுகாப்பாக ஓட்ட வேண்டுமென்றால், ஸ்டியரிங் வீலை சரியான முறையில் பிடித்திருப்பதும் மிகவும் முக்கியம். எனவே காரை ஓட்டும்போது எப்போதும் 9 மற்றும் 3 விதிமுறைப்படி ஸ்டியரிங் வீலை பிடிப்பதற்கு மறக்காதீர்கள். அதேபோல் ஒரு கையை மட்டும் ஸ்டியரிங் வீலில் வைத்திருப்பது போன்ற விபரீத முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டாம்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
10 And 2, 9 And 3 Hand Positions: How To Hold The Steering Wheel Correctly? Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X