ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சினிமாவில் கலக்கிய 10 ஸ்போர்ட்ஸ் கார்கள்!!

Posted By:

கடந்த வியாழனன்று ரிலீசான ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 ஹாலிவுட் சினிமா பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் நாயகன் பால்வாக்கர் நடித்த கடைசி படம் என்பதால், இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படத்திற்கு வலு சேர்ப்பதில் சக்திவாய்ந்த கார்களின் சாகச காட்சிகளுக்கு பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், இந்த 7ம் பாகத்திலும் உலகின் முன்னணி கார் பிராண்டுகளின் விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் நடத்திய சாகச காட்சிகள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகின்றன. அதில், சில பிரபல கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கலக்கிய கார்கள்

கலக்கிய கார்கள்

இந்த படத்தில் 35க்கும் அதிகமான கார் மாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றில், பெரும்பாலான மாடல்களை நீங்கள் சினிமா பார்க்கும்போது இனம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த ஸ்லைடுகளில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸில் பயன்படுத்தப்பட்ட 10 கார் மாடல்களின் விபரங்கள் உங்களுக்காக....

01. அஸ்டன் மார்ட்டின்

01. அஸ்டன் மார்ட்டின்

ஜேம்ஸ்பாண்ட் ஆனாலும் சரி, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் என்றாலும் சரி, அஸ்டன் மார்ட்டின் கார்களுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் அஸ்டன் மார்ட்டின் டிபி9 மாடல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் 450 எச்பி பவரை அதிகபட்சம் அளிக்க வல்ல 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது கிராண்ட் டூரர் வகை சேர்ந்த மாடல்.

02. ஆடி ஆர்8

02. ஆடி ஆர்8

ஆடியின் வெற்றிகரமான ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த காரில் 423 எச்பி பவரை அளிக்கும் 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதுதவிர, 517 எச்பி பவரை அளிக்கும் 5.2 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது.

03. புகாட்டி வேரான்

03. புகாட்டி வேரான்

உலகின் அதிவேக கார் என்ற பெருமையின் மூலம் புகழ்பெற்ற புகாட்டி வேரான் காரும் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த காில் 1000 எச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் வல்லமை கொண்ட 8.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி சீக்குவென்ஷியல் கியர்பாக்ஸ் கொண்டது.

04. டாட்ஜ் வைப்பர் எஸ்ஆர்டி- 10

04. டாட்ஜ் வைப்பர் எஸ்ஆர்டி- 10

ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல். இந்த காரில் 640 எச்பி பவரை அளிக்கும் 8.4 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் பல்வேறு மாகாண காவல்துறைகளில் அதிகாரப்பூர்வ ரோந்து வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.

05. ஃபெராரி 458 இட்டாலியா

05. ஃபெராரி 458 இட்டாலியா

ஃபெராரி நிறுவனத்தின் வெற்றிகரமான கார் மாடல்களில் ஒன்று. கடந்த 2009ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்போர்ட்ஸ் கார். இந்த காரில் 562 எச்பி பவரை அளிக்கும் 4.5 லிட்டர் வி8 எஞ்சின் இருக்கிறது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது. கடந்த மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த காருக்கு மாற்றாக ஃபெராரி 488 ஜிடிபி கார் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

06. மஸராட்டி கிப்ளி

06. மஸராட்டி கிப்ளி

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 சினிமாவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மஸராட்டி கிப்ளி காரில் 330 எச்பி பவரை அளிக்கும் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும்.

07. மெக்லாரன் எம்பி- 4 12சி

07. மெக்லாரன் எம்பி- 4 12சி

மெக்லாரன் எம்பி- 4 12சி ஸ்போர்ட்ஸ் காரில் 592 எச்பி பவரை அளிக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டது.

 08. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ்

08. மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொகுசு வகை எஸ்யூவி கார் மாடல் இது. இந்த எஸ்யூவியில் 536 எச்பி பவரை அளிக்கும் 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 09. நிசான் ஜிடி ஆர்

09. நிசான் ஜிடி ஆர்

ஜப்பானிலிருந்து வெளியான ஓர் வெற்றிகரமான ஸ்போர்ட்ஸ் கார் மாடல். சச்சின் முதல் உசேன் போல்ட் வரை கவர்ந்த இந்த ஸ்போர்ட்ஸ் காரில் 530 எச்பி பவரை அளிக்கும் 3.8 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

10. லைகன் ஹைப்பர்ஸ்போர்ட்

10. லைகன் ஹைப்பர்ஸ்போர்ட்

அரபு நாட்டில் தயாரான முதல் ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை பெற்ற இந்த மாடல் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் மூலம் திரைப்படங்களிலும் தோன்றி தனது வல்லமையை காட்டியிருக்கிறது. இந்த காரில் 740 எச்பி பவரை அளிக்கும் 3.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

 
English summary
The Fast And The Furious 7 has finally hit the screens. The movie is packed with fast cars, explosions, gunfire and burning tires. So what if you haven't watched the movie yet, here's a closer look at 10 of these cars that have been used in the movie and how much power they actually produce.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark