சொகுசு கார்களில் மட்டுமே காணக்கிடைக்கும் டாப் - 10 ஆடம்பர வசதிகள்!!

Written By:

கார் பயணங்களை இனிமையாக்குதற்கு அதில் இருக்கும் வசதிகளும், தொழில்நுட்பங்களும் உறுதுணையாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் சொகுசு கார்களில் பார்த்த வசதிகளை தற்போது பட்ஜெட் கார்களில் கூட பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில், சொகுசு கார்களில் காணக்கிடைக்கும் சில கவர்ச்சிகர வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. காற்று சுத்திகரிப்பு வசதி

01. காற்று சுத்திகரிப்பு வசதி

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் உள்ளிட்ட சில உயர்வகை கார்களில் கேபினில் சுத்திகரிக்கப்பட்ட காற்றை செலுத்தும் தொழில்நுட்ப வசதி உள்ளது. பயணிப்பவருக்கு மாசற்ற, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை இந்த தொழில்நுட்ப வழங்குகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் வழங்கப்படும் இந்த வசதிக்கு ஏர் பேலன்ஸ் பேக்கேஜ் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

 02. ஃபுட்ரெஸ்ட்

02. ஃபுட்ரெஸ்ட்

ஆடி ஏ8 காரின் பின்புற இருக்கையில் அமர்பவர்கள் கால்களை சாவகாசமாக வைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஃபுட்ரெஸ்ட் ஒன்று முன் இருக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும்போது அந்த ஃபுட்ரெஸ்ட்டை வெளியில் எடுத்து கால்களை அதில் வைத்துக் கொண்டு பயணிக்க முடியும்.

 03. சுகமான பயணம்

03. சுகமான பயணம்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் கூபே காரில் Curve tilting என்ற தொழில்நுட்ப வசதி வழங்கப்படுகிறது. வளைவுகளில் அல்லது சரிவான சாலைகளில் கார் சென்றாலும், பயணிப்பவர்க்கு அது தெரியாத வகையில், கார் சமநிலையாக செல்லும். இதனால், பயணிப்பவர்க்கு இருக்கையிலிருந்து சறுக்குவது அல்லது சாய்வது போன்ற உணர்வு இரு்ககாது.

04. குளிரூட்டி

04. குளிரூட்டி

பென்ட்லீ முல்சான் கார் மாடல்களின் பின்புற இருக்கைகளுக்கு இடையில் மது பாட்டில்களை குளிரூட்டும் வசதி கொண்ட கூலர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு பட்டனை அழுத்தினால் மதுக் கிண்ணங்கள் மற்றும் மது பாட்டில்களை வெளியே எடுக்க முடியும்.

05. நிசப்தமான கேபின்

05. நிசப்தமான கேபின்

கார் பயணிக்கும்போது உட்புறத்தில் நிசப்தமான உணர்வை தரும் விசேஷ சப்த தடுப்பு வசதியை மெர்சிடிஸ் மேபக் கார் கொண்டுள்ளது. புவியிலேயே இதுபோன்ற ஒரு நிசப்தமான கேபினை எந்த காரிலும் பார்க்க முடியாது என்று அடித்துக் கூறுகிறது மெர்சிடிஸ் நிறுவனம்.

06. தரமிக்க தோல் அலங்காரம்

06. தரமிக்க தோல் அலங்காரம்

பென்ட்லீ கான்டினென்டல் காரின் உட்புறத்தில் பயன்படுத்தப்படும் தோல் மிகவும் உயர்தரமிக்கது. வட ஐரோப்பாவில் காணப்படும் எருதுகளின் தோல்தான் பென்ட்லீ கார்களின் உள்பக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.

07. உயர்வகை மியூசிக் சிஸ்டம்

07. உயர்வகை மியூசிக் சிஸ்டம்

பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில் வழங்கப்படும் பேங் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் மிகவும் உயர்தர துல்லியத்தை வழங்கும். 1,200 வாட்ஸ் சக்தி கொண்ட இந்த மியூசிக் சிஸ்டத்தின் 2 சப் ஊஃபர்கள் காரின் பாடியில் நேரடியாக பொருத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அதிர்வுகள் இல்லாத மிக துல்லியமான இசை தரத்தை பெற முடியும். இத்துடன் 16 ஸ்பீக்கர்களுடன் கூடிய சரவுண்ட் சவுண்ட் சிஸ்டத்தின் மூலம் மிகவும் உன்னதமான இசையை கேட்டு மகிழலாம்.

08. மேஜிக் பாடி கன்ட்ரோல்

08. மேஜிக் பாடி கன்ட்ரோல்

காரின் விண்ட்ஷீல்டில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மூலம் சாலையில் இருக்கும் மேடுபள்ளங்களை முன்கூட்டியே உணர்ந்து கொண்டு சாலைநிலைகளுக்கு தக்கவாறு சஸ்பென்ஷன் அமைப்பு தொடர்ந்து மாறும். அதாவது, அதிர்வுகள், ஆட்டங்கள் இல்லாமல் பறந்து செல்வது போன்ற ஓர் அனுபவத்தை வழங்கும். சஸ்பென்ஷன் அமைப்பு சாலைநிலைகளுக்கு தக்கவாறு மாறுவது மில்லிசெகண்டில் நடைபெறும்.

09. தோல் அலங்காரம்

09. தோல் அலங்காரம்

போர்ஷே பனமெரா காரின் எக்ஸிகியூட்டிவ் எடிசன் காருக்கு தோல் அலங்காரம் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஏசி வென்ட்டுகள், ரியர் வியூ கண்ணாடிகள், இருக்கைகள், சென்டர் கன்சோல், டேஷ்போர்டு மற்றும் மிதியடிகள் என சகலத்தையும் தோல் அலங்காரம் மூலம் அழகுப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதற்கான கட்டணத்தை கேட்டால்தான் தலைசுற்றுகிறது. ஏசி வென்ட்டுகளுக்கான லெதர் அலங்காரத்திற்கு 2,505 டாலர்கள் கூடுதலாக கட்ட வேண்டும். இதுபோன்று, ஒவ்வொனறிற்கும் தனித்தனியாக கணக்கு போட்டால் 24,000 டாலர்(15.5 லட்சம்) கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

10. மசாஜ் வசதி

10. மசாஜ் வசதி

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரில் பின் இருக்கை மசாஜ் வசதியுடன் கிடைக்கிறது. இருக்கையை வெதுவெதுப்பாக்கி மசாஜ் செய்யும் வகையில் வசதி கொண்டது இந்த இருக்கை. இந்த இருக்கை சாய்மான வசதி கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Here’s some of the ultimate in present-day automobile opulence.
Story first published: Wednesday, April 1, 2015, 13:52 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark