உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

சிலர் தங்கள் காரை விற்க்கும் போது சின்ன சின்ன காரணங்களுக்காக காரை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. காரை வாங்குபவரும் சில காரணங்களை காட்டி காரின் விலையை குறைத்து பேசுகின்றனர்.

மார்கெட்டில் புதிய மாடல்கள் கார்கள் அறிமுகம் அதிகரித்து வருகிறது. அதிக வசதி மற்றும் சொகுசிற்காக நாம் தற்போது வைத்திருக்கும் காரை விற்று விட்டு புதிய கார்களை வாங்குகிறோம். அவ்வாறாக சிலர் காரை விற்க்கும் போது சின்ன சின்ன காரணங்களுக்காக காரை குறைந்த விலையில் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. காரை வாங்குபவரும் சில காரணங்களை காட்டி காரின் விலையை குறைத்து பேசுகின்றனர். காரை வாங்குபவர்கள் சொல்லும் குறைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என இங்கு காணலாம்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

1. முறையான பராமரிப்பு

உங்கள் காரை சரியான கால இடைவெளியில் பராமரியுங்கள். அது உங்கள் காரின் வாழ்நாளை அதிகரிக்கும். காரின் எந்த உதிரிபாகங்களை மாற்றினாலும் அங்கீரிக்கப்பட்ட உதிரிபாகங்களையே வாங்குங்கள் அது தான் அந்த காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்கும்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

2. ஆவண பாதுகாப்பு

உங்கள் காரை அங்கீரிப்பட்ட இடத்தில் சர்வீஸ் செய்ததற்கும், அங்கீரிக்கப்பட்ட உதிரிபாகங்களை தான் மாற்றினோம் என்பதற்கும், அதற்காக வழங்கப்பட்ட ஆவணங்களே சாட்சி. அதனால் நீங்கள் சர்வீஸ் செய்தபோதும், உதரிபாகங்கள் மாற்றியபோதும் அதற்காக வழங்கப்படும் ஆவணங்களை பாதுகாத்து வைத்திருங்கள். இதன் மூலம் காரை மறுவிற்பனை செய்யும் போது நல்ல விலைக்கு விற்க முடியும்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

3. வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ்

உங்கள் காருக்கான வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ்களும் மறுவிற்பனை விலையில் முக்கியத்துவம் பெறுகிறது. உங்கள் கார்களுக்கு இலவச சர்வீஸ் மீதம் இருந்தால் அதை கொண்டு விலை குறைப்பை கட்டுப்டுத்தலாம். முடிந்தால் குறைந்த செலவில் உங்கள் காரின் வாரண்டி காலத்தை அதிகரிக்கவும் சில நிறுவனங்கள் முன் வருகின்றன, அதையும் பெற்று கொள்ளுங்கள்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

4. காரை சுத்தமாக வைத்திருங்கள்

உங்கள் காரின் லுக் நீங்கள் கார் பயன்படுத்திய விதத்தை காட்டிவிடும் அதன் படி உங்கள் காரில் வெளிப்புறத்தையும் உட்புறத்தையும் சுத்தமாக வைத்திருங்கள். கார் வாங்குபவர்கள் மனதில் காரின் லுக் தான் முதலில் தோன்றும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

5. எலெக்ட்ரிக் பாகங்கள்

உங்களின் காரின் ஹெட்லைட், உள்ளிட்ட எலக்ட்ரிக் பாகங்களில் சிறிது பழுது இருந்தால் உடனடியாக சரி செய்யுங்கள், சிறிய பழுது, சிறிய செலவு தான் என எண்ணி விட்டு விடாதீர்கள். இதன் காரணமாக கூட மறுவிற்பனையில் போது காரின் விலை குறைக்கப்படலாம்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

6. அலங்கரங்களை தவிருங்கள்

உங்கள் காரை உங்கள் விருப்பதற்கு ஏற்றார் போல், மாற்றியமைத்திருப்பீர்கள் அது உங்கள் காரை வாங்குபவர்களுக்கு பிடிக்காமல் போகலாம் அதனால் அதனை தவிர்ப்பது நல்லது. சிலர் காரில் வீல், பேனட், காரின் உட்புறங்களில் பல மாறுதல்களை செய்கின்றனர். அவற்றை தவிர்ப்பது நல்லது.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

7. இன்ஜினை மாற்றியமைக்காதீர்கள்

உங்கள் காரை மறு விற்பனை செய்யும் எண்ணத்தில் இருந்தால் காரின் மைலேஜ் அல்லது அதிக சத்தத்திற்காக காரின் இன்ஜினில் எந்த மாறுதலும் செய்யாதீர்கள். இது காரை வாங்குபவர்களுக்கு விலையை குறைக்க சிறந்த வழியை ஏற்படுத்தி விடும்.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

8. கார் கலரை மாற்றுவதில் கவனம்

உங்கள் காரின் கலரை உங்கள் விருப்பதற்கு தகுந்தார் போல் மாற்றியமைத்து கொண்டாலும் காரை விற்பனை செய்யும் போது காரின் கலரின் கவனமாக இருக்கவேண்டும். காரை வாங்குபவர்கள் பெரும்பாலும் காரின் ஒரிஜினல் கலரிலேயே வாங்க நினைக்கின்றனர். கலரை மாற்றினால் கார் விலை குறைய வாயப்பிருக்கிறது. ஆனால் ஸ்போர்ட்ஸ் காரை பொருத்தவரை சிறந்த கலர் மற்றும் டிசைனுக்கே மார்கெட்டில் மதிப்பு அதிகம், அதில் ஒரிஜினல் கலரை யாரும் பார்ப்பதில்லை.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

9. சிறந்த பயண அனுபவம்.

உங்கள் கார் நல்ல நிலையில் ஓடுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கார் வாங்குபவர்கள் ஓட்டி பார்க்கும்போது அவர்களுக்கு அது சிறந்த அனுபவத்தை தர வேண்டும். டெஸ்ட் டிரைவின் போது சிரமப்படுத்தினால் சிலர் அந்த காரை வாங்குவதையே தவிர்ப்பர். சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் காருக்கு மார்கெட்டில் நல்ல கிராக்கி இருக்கிறது.

உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

10. அபராதங்களை செலுத்தி விடுங்கள்

இந்தியாவில் பல இடங்களில் இ-செலான் வந்துவிட்டால், உங்களை அறியாமல் நீங்கள் விதி மீறி வாகனம் ஓட்டியிருந்தால் கூட தானியங்கி கேமராக்கள் மூலம் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராதங்களை பாக்கியில்லாமல் செலுத்தி விடுங்கள். உங்கள் காரின் பதிவெண் வைத்தே உங்கள் காருக்கான பாக்கியிருக்கும் அபராத தொகையை பார்க்க முடியும் அதனால் அபராத தொகை பாக்கி வைப்பதை தவிர்த்துவிடுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
10 tips to boost your car’s resale value. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X