பிஸியான சாலையில் ஜாலியாக கார் ஓட்டி சென்ற சிறுவன்... வயதை கேட்டு ஷாக் ஆன போலீஸ்...

பிஸியான சாலையில் சிறுவன் ஒருவன் ஜாலியாக கார் ஓட்டி சென்றான். அவனது வயதை கேட்டு போலீசாரே ஷாக் ஆகி விட்டனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

இந்தியாவில் பொது சாலைகளில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் குற்றமாக உள்ளது. இதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால் பொது சாலையில் வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸை பெறுவதற்கு உரிய வயதை எட்டுவதற்கு முன்பே ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட ஊக்குவிக்கின்றனர்.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

மைனர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கும் வகையிலான ஏற்பாடுகள் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ளன. மைனர் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்த ஏராளமான பெற்றோர்களுக்கு கடந்த ஆண்டு சிறை தண்டனை கூட வழங்கப்பட்டது.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

உரிய வயதை எட்டி லைசென்ஸ் வாங்காத சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது. ஆனால் இதன் அபாயத்தை பெற்றோர்கள் உணர்ந்து கொள்வது கிடையாது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் கூட, தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்டும்படி அவர்கள் ஊக்குவிக்கின்றனர். இந்த சூழலில் ஐதராபாத் நகரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

ஐதராபாத் நகரில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி சென்றுள்ளான். இந்த சம்பவத்தை அவ்வழியாக பயணித்த சக வாகன ஓட்டி ஒருவர் கேமராவில் ரெக்கார்ட் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, டைகர் நீலேஷ் என்பவரால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

ஐதராபாத் நகரின் அவுட்டர் ரிங் ரோடு (Outer Ring Road-ORR) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடைபெற்ற சரியான தேதி மற்றும் நேரம் ஆகியவற்றையும் டைகர் நீலேஷ் குறிப்பிட்டுள்ளார். இதன்படி இந்த சம்பவம் கடந்த டிசம்பர் 8ம் தேதி காலை 9.32 மணியளவில் நடைபெற்றுள்ளது.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

டைகர் நீலேஷ் அதே டிவிட்டில் ஐதராபாத் டிராபிக் மற்றும் மாநகர போலீசாரையும் டேக் செய்துள்ளார். இந்த வீடியோவில் மாருதி சுஸுகி ஆல்டோ காரை சிறுவன் ஒருவன் ஓட்டி செல்வதை காண முடிகிறது. கார் ஓட்டிய சிறுவனுக்கு சுமார் 10 வயதுதான் இருக்கும் எனவும் டைகர் நீலேஷ் கூறியுள்ளார். உண்மையில் இந்த வயதில் வாகனம் ஓட்டுவது மிகவும் அபாயகரமானது.

MOST READ: புல்லட் புரூஃப் காரை ஒதுக்கி வைத்து விட்டு சாதாரண காரை பயன்படுத்தும் அமிர்கான்... ஓ அப்படியா விஷயம்!

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

சிறுவனம் கார் ஓட்டி சென்றபோது, காருக்குள் மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் அச்சிறுவனின் குடும்பத்தினர் என கூறப்படுகிறது. டைகர் நீலேஷின் இந்த டிவிட்டிற்கு குஷாய்குடா டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் பதில் அளித்துள்ளது. இதில், அந்த வாகனத்திற்கு எதிராக இ-சலான் ஜெனரேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ: சாலையை கடக்க முயன்ற சிறுமி... காற்றில் தூக்கி வீசிய அதிவேக கார்! பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

அத்துடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட ஆன்லைன் அபராத ரசீதுகளையும் போலீசார் அப்லோட் செய்துள்ளனர். ஆனால் பொது சாலையில் மைனர் சிறுவன் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கிய பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது தொடர்பாக போலீசார் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

MOST READ: போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமான அதிர்ச்சி... வைரல் வீடியோ...!

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

அதேபோல் ரசீதின்படி, போலீசார் வெறும் 2,000 ரூபாய் மட்டுமே அபராதம் விதித்துள்ளனர். உத்தரவுகளுக்கு கீழ்படியாமைக்காக 500 ரூபாய், அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 1,000 ரூபாய் மற்றும் மைனர் வாகனம் ஓட்டியதற்காக 500 ரூபாய் என ஒட்டுமொத்தமாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்... 10 வயது சிறுவன் செய்த காரியத்தால் திடுக்கிட்ட போலீஸ்...

எனவே பெற்றோர்களுக்கு மிக கடுமையான தண்டனைகளை வழங்காத வரை, இது போன்ற சம்பவங்களை நாம் தொடர்ச்சியாக பார்த்து கொண்டேதான் இருக்க போகிறோம். இதுகுறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Source: TigerNeelesh/Twitter

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
10 Year-old Boy Spotted Driving Maruti Suzuki Alto In Hyderabad: Cops Issue Challan. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X