பொதுசாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பொது சாலையில் பத்து வயது சிறுவன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

தற்போதைய தலைமுறையினர் தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் விதமாக, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அதனை ஸ்மார்ட்போன் மூலமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களான முகப்புத்தகம், டுவிட்டர், யுடியூப் மற்றும் டிக்டாக் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வருகின்றனர்.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இவ்வாறு, அவர்கள் பதிவிடுவதன்மூலம் பிரபலமடைவதுடன் சில, அவலங்களையும் சந்திக்கின்றனர். அவ்வாறு, ஆர்வலக்கோளாரில் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கு ஆபத்தாக அல்லது பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. அந்த வகையில், அண்மையில், காவல்நிலையம் முன்பாக, கெத்தாக வீடியோ எடுத்து டிக்டாக்கில் பதிவிட்ட இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர். மேலும், ஓடும் ரயிலில் கிகி சேலஞ்ச் செய்தவர்கள் உட்பட பலர் இதுபோன்ற தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர்.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்நிலையில், பத்து வயது சிறுவன் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா காரை தனியாக இயக்கிச் செல்வதுப் போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பதிவாகி இருக்கும் காரின் பதிவெண்ணைக் கண்டால், இந்த சம்பவமானது கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியிருப்பது தெரியவருகிறது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

வீடியோவில், வீட்டை விட்டு வெளியே வரும் சிறுவனுக்கு ஓர் சிறுமி கார் சாவியைத் தூக்கி எறிகிறாள். அதனை கேட்ச் பிடித்த சிறுவன், அந்த சிறுமியுடன் இணைந்து வெளியே வருகிறார். பின்னர், வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருக்கும் வெள்ளை நிற க்ரெட்டா காரை சிறுவன் தனியாக வெளியே ஓட்டிச் செல்கிறார். மேலும், அப்படியே, அந்தக் காரைக் கொண்டு மற்ற வாகனங்கள் செல்லும் பொதுவெளியில் இயக்கிச் செல்கிறார்.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்த காட்சிகள் அனைத்தையும் வேறொரு நபர் வீடியோவாக காட்சிப்படுத்துகிறார். மேலும், இந்த வீடியோவுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் உள்ளிட்ட சில சிறப்புகளைச் சேர்த்து யுடியூப் பக்கத்தில் '10 வயது சிறுவன் காரை இயக்கும் வீடியோ' என்ற கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். சுமார் 2 நிமிடங்கள் 14 விநாடிகள் செல்லும் இந்த வீடியோக் காட்சியினை 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இதுபோன்று, சிறுவர்கள் வாகனத்தை இயக்கியதால் பல்வேறு விபத்துகள் இதற்கு முன்னதாக அரங்கேறியுள்ளன. ஆகையால், சிறுவர்கள் வாகனத்தை இயக்கினால், அவர்களது பெற்றோர்களுக்குத் தான் தண்டனை வழங்கப்படும் என புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோன்று, சாலையில் வாகனத்தை இயக்கிச் சென்ற சிறுவர்களின் பெற்றோர்களுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்நிலையில், இதுபோன்று பத்து வயது சிறுவனை வைத்து காரை இயக்கும் வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், அந்த சிறுவன் மிகவும் குறுகலான சாலையில் எதிர்புறங்களில் பல வாகனங்கள் வருகின்ற சூழலில் இயக்குவது, அந்த வீடியோவைப் பார்க்கும் நமக்கே சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

ஆனால், இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அந்த வீடியோவை எடுத்த நபர் வீண் விளம்பரத்திற்காக பெரும் ஆபத்தான காரியத்தை செய்துள்ளார். ஒரு வேளை சிறுவன் சற்று தடுமாறியிருந்தால் என்னவாகி இருக்கும் என்பதே அந்த வீடியோவைப் பார்க்கும் பெரும்பாலான பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

அந்த வீடியோவில் சிறுவன் ஓட்டி வரும் கார் ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடலாகும். இந்த கார் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்ப ஒரு பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் இரண்டு டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.6 லிட்டர் எஞ்ஜின் அதிகபட்சமாக 121 பிஎச்பி பவரையும், 151என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேலும், இது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இதேபோன்று, இந்த கார் 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில், 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 219 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

பொது சாலையில் 10 வயது சிறுவன் செய்த செயல்: இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

இந்த காரின் மற்றொரு 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் அதிகபட்சமாக 126 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது. இந்த க்ரெட்டா கார் ரூ.9.43 லட்சத்தில் இருந்து ரூ.15.03 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கின்றது.

Via: CARS18

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2019, 17:20 [IST]
English summary
10 Year Old Kid Driving Hyundai Creta On Public Roads Goes Viral. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+