டிராக்டர் ஸ்டண்டில் மிரட்டும் 10 வயது சிறுவன்!!! 90's கிட்ஸ் மீம்ஸ் போட ஒரு டாபிக்!!!
10 வயதே நிரம்பிய 6ம் வகுப்பு மாணவர் ஒருவர், டிராக்டர்கள் மூலம் ஸ்டண்ட் செய்வதில் மிரட்டுகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
10 வயதே நிரம்பிய 6ம் வகுப்பு மாணவர் ஒருவர், டிராக்டர்கள் மூலம் ஸ்டண்ட் செய்வதில் மிரட்டுகிறார். இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லி மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ரத்தன்ஜித் பாட்டீல். 10 வயதேயாகும் ரத்தன்ஜித் பாட்டீல், 6ம் வகுப்புதான் படித்து வருகிறார். ஆனால் டிராக்டர்களில் ஸ்டண்ட் செய்வதில், பிஎச்டி பட்டமே பெற்றுவிட்டார் போல!!!

இவர் வயது சிறுவர்கள் எல்லாம் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்ட கற்று கொண்டிருக்கும் சமயத்தில், அனாயசமாக டிராக்டரில் பல ஸ்டண்ட்களை செய்து அசத்துகிறார் ரத்தன்ஜித் பாட்டீல்.

ரத்தன்ஜித் பாட்டீலின் மாமா தனஞ்ஜெய் பாட்டீல் ஒரு டிராக்டர் டிரைவர். இவரும் டிராக்டர்களில் ஸ்டண்ட் செய்வதில் கில்லாடி. ரத்தன்ஜித் பாட்டீலுக்கு குருநாதரே தனஞ்ஜெய் பாட்டீல்தான்.

தனஞ்ஜெய் பாட்டீல் டிராக்டர்களில் ஸ்டண்ட் செய்வதை பார்ப்பதை ரத்தன்ஜித் பாட்டீல் வழக்கமாக கொண்டிருந்தார். இதன்மூலம் கின்டர்கார்டனில் படித்து கொண்டிருக்கும்போதே, டிராக்டர் ஓட்ட பழகவும் தொடங்கி விட்டார் ரத்தன்ஜித் பாட்டீல்.

இதன்பின் மாமா தனஞ்ஜெய் பாட்டீல் போல் டிராக்டர்களில் ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்ற ஆசை ரத்தன்ஜித் பாட்டீலுக்கு மேலோங்கியுள்ளது. ஆனால் ரத்தன்ஜித் பாட்டீலின் தந்தையும், தனஜ்ஜெய் பாட்டீலுக்கு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் கடுமையாக திட்டவும் செய்தனர்.

ஆனால் ஒரு நாள், ரத்தன்ஜித் பாட்டீல் ஸ்டண்ட் செய்வதை அவரது மாமா தனஜ்ஜெய் பாட்டீல் பார்த்துள்ளார். இதன்பின்தான் டிராக்டர்களில் ஸ்டண்ட் செய்யும் ஆற்றல், ரத்தன்ஜித் பாட்டீலுக்கு அதிகமாக இருப்பது தனஜ்ஜெய் பாட்டீலுக்கு தெரியவந்தது.

இதன்பின் ரத்தன்ஜித் பாட்டீலை களத்தில் இறக்கி விட்டார் தனஜ்ஜெய் பாட்டீல். ரத்தன்ஜித் பாட்டீலுக்கு சில வித்தைகளையும் கற்று கொடுத்தார். இதன்மூலமாக இன்று ஸ்டண்ட் டிரைவர்கள், ரேஸர்கள் அனைவரும் உற்று கவனிக்க கூடிய நபராக உருவெடுத்துள்ளார் ரத்தன்ஜித் பாட்டீல்.

ரத்தன்ஜித் பாட்டீல் செய்யக்கூடிய ஸ்டண்ட்களை வயது வந்தோரால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வெறும் பத்தே வயதில் அடித்து தூள் கிளப்புகிறார் ரத்தன்ஜித் பாட்டீல். அவரது டிராக்டர் ஸ்டண்ட்களை நீங்கள் கீழே காணலாம்.
ஆனால் ரத்தன்ஜித் பாட்டீல் இத்தகைய ஸ்டண்ட்களை செய்வதில் அவரது பெற்றோருக்கு ஆரம்பத்தில் துளியும் விருப்பமில்லை. எந்த பெற்றோருக்குதான் மனம் பதறாது? ஆனால் நாளடைவில் ஒப்புதல் வழங்க விட்டனர்.

தற்போதைய அளவில், உலகின் சிறந்த டிராக்டர் டிரைவர் என பார்த்தால், அது ரத்தன்ஜித் பாட்டீலாகதான் இருக்கும். டிராக்டர்களில் இருக்கும் ஒவ்வொரு ஸ்பேர் பார்ட்ஸையும் பற்றி கூட அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.

ஆனால் ரத்தன்ஜித் பாட்டீலை பொறுத்தவரை, அவரது மாமா தனஜ்ஜெய் பாட்டீல்தான் உலகின் மிகவும் சிறந்த டிராக்டர் ஸ்டண்ட் மேன். ரத்தன்ஜித் பாட்டீலுக்கு ஒரு கனவு இருக்கிறதாம்.

ஹை டெக் சென்சார்கள் பொருத்தப்பட்ட, டிரைவர்கள் இல்லாமலேயே இயங்க கூடிய டிராக்டரை கட்டமைக்க வேண்டும் என்பதுதானாம் ரத்தன்ஜித் பாட்டீலின் அந்த கனவு. ஆனால் 19 வயதான இளைஞர் ஒருவர் டிரைவர் இல்லாமல் இயங்க கூடிய டிராக்டரை ஏற்கனவே வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிராக்டர்கள் தவிர கார், ஜேசிபி, கண்டெய்னர், டிரெய்லர்களை ஓட்டுவதிலும் சமமான திறமையை ரத்தன்ஜித் பாட்டீல் கொண்டிருக்கிறார் என்பது அவரது மற்றொரு சிறப்பம்சம்.

ஒரு தலைமுறை குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் அடுத்த தலைமுறை குழந்தைகள் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளிலும் வல்லவர்களாகவே திகழ்கின்றனர். இதை குறிப்பிடும் வகையில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 90's கிட்ஸ், 2000's கிட்ஸ் என நகைச்சுவையான மீம்ஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

அது உண்மைதான் போல!!! குறிப்பாக ரத்தன்ஜித் பாட்டீலின் வயதில், 90's கிட்ஸ் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பதை குறிப்பிடும் வகையில், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் மீம்ஸ் கூட உருவாக்கலாம்!!!
Source: Catersnews


Click it and Unblock the Notifications